ரவிராஜ் கொலை வழக்கு: சகலரும் விடுதலை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்பை, எழுவர் அடங்கிய விசேட ஜூரிகள் சபை சற்று முன்னர் அறிவித்தது. தொகுப்புரைகள், நேற்று முதல் எழுவர் அடங்கிய விசேட ஜூரிகள் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து ஆற்றுப்படுத்தப்பட்டன கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மணிலால் வைத்திய திலக்க, ஜூரிகளுக்கு தெளிவுரையளித்தார். அதன் பின்னர் எழுவர் அடங்கிய விசேட ஜூரிகள் தீர்ப்பை நள்ளிரவு 12.20க்கு அறிவித்தனர். அதன் பிரகாரம், குற்றஞ்சாட்டப்பட்ட சகலரும் விடுதலை செய்யப்பட்டனர். அதாவது, 3ஆம், 4ஆம், 5ஆம்,6ஆம் பிரதிவாதிகளை விடுவிக்குமாறு ஜூரிகள் தீர்ப்பு வழங்கியதோடு, பிரசன்னமாயிருக்காத 1ஆம், 2ஆம் பிரதிவாதிகளையும் விடுவித்துள்ளது.