10.07.2016இல் சுவிஸில் “புளொட்” அமைப்பின் 27ஆவது “வீரமக்கள் தினம்”..!

 

புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் 27ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் எதிர்வரும் 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 08.00 மணிவரை நடைபெறவுள்ளது. 27ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகளாக காலை 11.00 மணியளவில் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து…..
**விநோதவுடைப் போட்டி
**பொது அறிவுப் போட்டி
**பாட்டுக்கு அபிநய ஆட்டம்
**நடன நாட்டிய நிகழ்வுகள்
**இன்னிசை நிகழ்வுகள்
**பரிசளிப்பு நிகழ்வு
**தலைமை உரை
**பிரதம விருந்தினர்கள் உரை
**நன்றி நவிலல்.. போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

“வீரமக்கள் தின” விழா நடைபெறும் இடம்:

வரசித்தி மஹால்.
Hüttenwiesen Strasse – 6
8108 Dallikon Zurich .

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் “வீரமக்கள் தினம்” வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

“விடுதலைக்கு உரம் சேர்ப்போம், வீணர்களை புறம் சேர்ப்போம்”

தொடர்புகளுக்கு:…
077.959 10 10, 076.583 84 10, 078. 916 71 11, 078. 935 46 92, 077. 948 52 14

— தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) – சுவிஸ் கிளை —

*******************************************

“தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும், சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிப் பரீட்சைகள்”..!!

தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிப் பரீட்சைகள் soodring -34B, 81234 Adlishwil எனும் மண்டபத்தில் 03.07.2016 அன்றையதினம் காலை 08.00 மணியளவில் இடம்பெறஉள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இதுவரை பரீட்சைக்கான விண்ணப்பப் படிவங்களை எமக்கு அனுப்பி வைக்காதவர்கள் கூட (பலருக்கும் விண்ணப்பப் படிவம், உரிய நேரத்தில் கிடைக்காதபடியால்) பரீட்சை நடைபெறும் 03.07.2016 காலை 07.30க்கு நேரில் வந்து, தம்மைப் பதிவு செய்து பரீட்சையில் கலந்து கொள்ளலாம்.

10.07.2016 இல் வரசித்தி மஹால் மண்டபத்தில் நடைபெறும் “வீரமக்கள் தின” நிகழ்வின் போது இப் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

“எதிர்காலம் வளமாக, எழுவோம் பலமாக”

தொடர்புகளுக்கு:…
077.959 10 10, 076.583 84 10, 078. 916 71 11, 078. 935 46 92, 077. 948 52 14

— தமிழீழ மக்கள் கல்விக் கழகம் சுவிஸ்கிளை —