32 சடலங்கள் இதுவரை மீட்பு

கொலன்னாவை, மீதொட்டமுல்லயில், நேற்று ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்த மீட்பு நடவடிக்கைகளில் மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. குப்பைமலை, கடந்த 14ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் சரிந்துவிழுந்தது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் நேற்றும் தொடர்ந்தன. எனினும், குப்பை மலைக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.