ஒரு முடிவில் பிறிதோர் ஆரம்பம்

(காரை துர்க்கா)

வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் ஏற்கெனவே முடிவுக்கு வந்து, கொழும்பு, மத்திய அரசாங்கத்தின் நேரடிப் பிரதிநிதியான ஆளுநரின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. நாளை தொடக்கம், வடக்கு மாகாணத்திலும் இதே நிலைமை ஆரம்பிக்க உள்ளது.

(“ஒரு முடிவில் பிறிதோர் ஆரம்பம்” தொடர்ந்து வாசிக்க…)

சி.வி. விக்னேஸ்வரன் இன்றைக்குக் கூறப்போவது என்ன?

(புருஜோத்தமன் தங்கமயில்)

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்ட போது, அதைத் தேர்தல் அரசியலுக்கான ஒரு பிரபலமான கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் நம்பின. அப்போது, கூட்டமைப்புக்குள் பெரும் அதிருப்தியோடு அல்லாடிக்கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப், பேரவையைத் தனக்கான புதிய போக்கிடமாகவே பார்த்தது. ஆனாலும், தேர்தல் அரசியலை மய்யப்படுத்திய எதிர்பார்ப்புகளோ, செயற்பாடுகளோ தங்களிடத்தில் இல்லை என்று, பேரவையில் அங்கம் வகிக்கும் கல்வியாளர்களும் வைத்தியர்களும் வெளிப்படுத்தியிருந்தனர். (“சி.வி. விக்னேஸ்வரன் இன்றைக்குக் கூறப்போவது என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

புல்லுமலை தொழிற்சாலைமுற்றாகக் கைவிடப்பட்டது

மட்டக்களப்பு, பெரிய புல்லுமலையில் நிர்மாணிக்கப்பட்டுவந்த, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலை நிறுவும் பணிகளை, முற்றாகக் கைவிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக, நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ரொமன்சியா லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. “தொழிற்சாலை அமைக்கப்படுவதை, குறித்த பிரதேச மக்கள் எதிர்த்தனர். அ​தேபோன்று, தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில், மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தொழிற்சாலை அமைப்பதில்லை என எமது நிறுவனம் தீர்மானித்துள்ளது” என, அந்நிறுவனத்தின் நிர்வாகிகளின் ஒருவரான முஹம்மட் அப்துல் ஜெஷீம் தெரிவித்தார்.

(“புல்லுமலை தொழிற்சாலைமுற்றாகக் கைவிடப்பட்டது” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர் அரசியலில் புதிய கட்சி உருவாக்கமும் தடம்மாறும் தலைமைகளும்

(க. அகரன்)

இன்றைய தமிழ்த் தரப்பு அரசியல் களமானது, பரபரப்புகளை மாத்திரம் கொண்டதாகவும் செயற்றிறன் அற்றிருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத நியாயப்படுத்தல்களை முன்வைப்பதாகவுமே உள்ளது. பல்வேறு உரிமைக் கோரிக்கைகளை முன்வைத்த தமிழர்கள், அவற்றைப் பெறுவதற்கான போராட்டத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களால் நம்பிக்கை வைக்கப்பட்ட தரப்புகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள போட்டித்தன்மைகளும் அரசியல் காழ்புணர்ச்சிகளும் பழிவாங்கல்களும் ‘தமிழரின் இழி நிலை’ என்ற வகிபாகத்துக்குக் கொண்டு செல்ல நீண்ட காலம் தேவையில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.

(“தமிழர் அரசியலில் புதிய கட்சி உருவாக்கமும் தடம்மாறும் தலைமைகளும்” தொடர்ந்து வாசிக்க…)

‘பாஜகவைவீழத்துவதுஇலக்கு; காங்கிரஸ்கட்சியால்சுயமாகஆட்சிக்குவருவதுகடினம்’: மூத்ததலைவர்சல்மான்குர்ஷித்கருத்து

இப்போதுள்ளசூழலில்காங்கிரஸ்கட்சியால்பொதுத்தேர்தலில்சுயமாகவென்று, ஆட்சிக்குவருவதுகடினம், பாஜகவைவீழ்த்தக்கூட்டணிஎன்பதுஅவசியமானதுஎன்றுகாங்கிரஸ்மூத்ததலைவர்சல்மான்குர்ஷித்பகீர்பேட்டிஅளித்துள்ளார்.
காங்கிரஸ்கட்சியின்மூத்ததலைவர்சல்மான்குர்ஷித்பிடிஐநிறுவனத்துக்குபிரத்தியேகபேட்டிஅளித்துள்ளார். அவர்கூறியிருப்பதாவது:
இன்றுள்ளசூழலில்அனைத்துஎதிர்க்கட்சித்தலைவர்களும்மத்தியில்ஆட்சிமாற்றம்தேவை, பாஜவைகண்டிப்பாகத்துரத்தவேண்டும்என்றவிஷயத்தில்தெளிவாகஇருக்கிறார்கள். தியாகம், ஒத்துழைப்பு, கூட்டணிஉருவாகவிட்டுக்கொடுத்தல்என்றுநீங்கள்இதைஎப்படிவேண்டுமானாலும்எடுத்துக்கொள்ளலாம்காங்கிரஸ்கட்சிதயாராகஇருக்கிறது.
எதிர்க்கட்சிகள்அமைக்கும்கூட்டணிகாங்கிரஸ்கட்சிக்காககண்டிப்பாகஇல்லாமல், மத்தியில்பாஜகஆட்சியைஅகற்றவேண்டும்என்றவிருப்பத்தின்அடிப்படையில்இருக்கவேண்டும்.

(“‘பாஜகவைவீழத்துவதுஇலக்கு; காங்கிரஸ்கட்சியால்சுயமாகஆட்சிக்குவருவதுகடினம்’: மூத்ததலைவர்சல்மான்குர்ஷித்கருத்து” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 13)

(Thiruchchelvam Kathiravelippillai)
திருக்கோணமலை மாவட்டத்தில் 1985 காலப்பகுதியில் தமிழ் விடுதலை இயக்கங்களின் செயற்பாடுகள் அதிகரித்த வண்ணமிருந்தன. அதனைக்கட்டுப்படுத்த வேண்டிய நிலை படையினருக்கு ஏற்பட்டது.  1985.11.17ஆம் நாள் ஆலங்கேணி, ஈச்சந்தீவு, இடிமண் ஆகிய தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற ஊர்களை இலக்கு வைத்து 1000இற்கு மேற்பட்ட படையினர் சுரோஸ் காசிம் தலைமையில் சுற்றிவளைத்தனர். இதுவே படையினரின் முதலாவது பாரிய சுற்றிவளைப்பாகும். காடுகள், கடற்கரை, ஆற்றங்கரை, துறையடி என அனைத்து இடங்களிலும் படையினர் செறிவாகக் குவிக்கப்பட்டனர்.
ஆலங்கேணி, ஈச்சந்தீவு ஆகிய ஊர்களில் வசித்த மக்கள் வாழ்வாதாரத்திற்காக ஆலங்கேணியிலிருந்து 12 கி.மீ.தூரத்திலுள்ள கண்டக்காடு, இறவடிச்சேனை, தளவாய், ஜபார்திடல் ஆகிய இடங்களில் கால்நடை வளர்ப்பிலும் நெற்செய்கையிலும் ஈடுபட்டனர். இவ்விடங்களுக்குச் செல்வதற்கு மூன்று வழிகளை மக்கள் பயன்படுத்தினர். மாவுசாப்பா துறை வழி, கண்டக்காட்டு துறை வழி, உப்பாற்றுத்துறை வழி. உப்பாற்றுத்துறை வழியினை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தவில்லை.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 13)” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part10)

இரண்டு தரப்பினரும் சனங்களைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு மக்களைக் கொன்று குவித்தனர். அப்போது இந்த நிலைமைகள் தொடர்பாகச் சில கிறிஸ்தவமதக் குருமார்கள் சொன்னார்கள்: “உண்மையில் இரண்டு தரப்பினருமே போர்க் குற்றவாளிகள்தான். அதிலும் போராட்டம், விடுதலை என்று வந்த சக்தியான புலிகள் இப்படி மனிதகுல விரோதச் செயலுக்குப் போனதை வரலாறு மன்னிக்காது. பிரபாகரனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையையே இப்போது புலிகள் செய்கின்றனர். தனியொரு மனிதனுக்காக இத்தனை உயிரிழப்புகளா? இவ்வளவு கொடுமைகளா? இதைவிடக் கேவலமானது, ஜனநாயக அரசு என்று சொல்லிக்கொண்டு மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் இப்படிச் சனங்களை இலக்கு வைத்தே தாக்குவதை எப்படி அனுமதிப்பது”. இது பற்றி இரண்டு தரப்பினரிடமும் தமது ஆட்சேபனைகளை அவர்கள் தெரிவித்துமிருந்தனர். ஆனால் இரண்டு தரப்புமே அவர்களின் குரலைப் பொருட்படுத்தவில்லை. வெறிகொண்ட இரண்டு மதயானைகளைப் போலத் தொடர்ந்து மோதிக் கொண்டேயிருந்தனர் அவர்கள்.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part10)” தொடர்ந்து வாசிக்க…)

புத்தாக்க ஆய்வரங்கு 2018: மனிதர்களைத் தேடி அலைதல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, உலகம் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குகிறது.  ஒருபுறம் புவிவெப்பமடைதலின் தாக்கங்களை, எல்லோரும் உணர்கிறோம். இன்னொருபுறம், நான்காவது தொழிற்புரட்சி பற்றிய நம்பிக்கைகள், புதிய சவால்களை உருவாக்கியுள்ளன. இவையிரண்டும், புத்தாக்கத்தின் தேவையை முன்னிறுத்துகின்ற அதேவேளை, புத்தாக்கம் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடும் சர்வரோக நிவாரணி அல்ல என்பதும், உணரப்பட வேண்டும்.

(“புத்தாக்க ஆய்வரங்கு 2018: மனிதர்களைத் தேடி அலைதல்” தொடர்ந்து வாசிக்க…)

யெச்சூரியுடன் டீஸ்டாசெதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய்பிரச்சாரம்

பொய் பிரச்சாரத்தைகை விடாத சங்பரிவார் அமைப்பினர், சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியுடன் நியூயார்க்டைம்ஸ் தில்லி செய்தியாளர் சுகாசினி இருப்பது போன்ற படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பி வருகின்றனர். உண்மையில்அந்த படம் சமூகசெயற்பாட்டாளர் டீஸ்டாசெதல்வாத்-சீத்தாராம் யெச்சூரியுடன் இருக்கும் படமாகும். சபரிமலைக்கு ‘நியூயார்க்டைம்ஸ்’ செய்தியாளர் சுகாசினி சென்றது. சிபிஎம் ஏற்பாடு என்பதாகவும், பக்தர்களின் உணர்வை மதிக்காமல் அவர்கள் வேண்டுமென்றே சபரிமலையில் இளம்பெண்களை நுழைக்க முயற்சிப்பதாகவும் இந்த படத்துடன் பொய்பிரச்சாரத்தை பல்வேறு குழுக்களில் நடத்தி வருகின்றனர். (“யெச்சூரியுடன் டீஸ்டாசெதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய்பிரச்சாரம்” தொடர்ந்து வாசிக்க…)