யெச்சூரியுடன் டீஸ்டாசெதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய்பிரச்சாரம்

பொய் பிரச்சாரத்தைகை விடாத சங்பரிவார் அமைப்பினர், சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியுடன் நியூயார்க்டைம்ஸ் தில்லி செய்தியாளர் சுகாசினி இருப்பது போன்ற படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பி வருகின்றனர். உண்மையில்அந்த படம் சமூகசெயற்பாட்டாளர் டீஸ்டாசெதல்வாத்-சீத்தாராம் யெச்சூரியுடன் இருக்கும் படமாகும். சபரிமலைக்கு ‘நியூயார்க்டைம்ஸ்’ செய்தியாளர் சுகாசினி சென்றது. சிபிஎம் ஏற்பாடு என்பதாகவும், பக்தர்களின் உணர்வை மதிக்காமல் அவர்கள் வேண்டுமென்றே சபரிமலையில் இளம்பெண்களை நுழைக்க முயற்சிப்பதாகவும் இந்த படத்துடன் பொய்பிரச்சாரத்தை பல்வேறு குழுக்களில் நடத்தி வருகின்றனர். உண்மையில் இந்தபடம் 2015 ஆகஸ்ட் 2ஆம் தேதி மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் டீஸ்டாவும், யெச்சூரியும் பங்கேற்றபோது எடுக்கப்பட்டதாகும். இதையே சுகாசினியுடன் யெச்சூரி என்கிற பொய்பிரச்சாரத்துக்கு சங்பரிவார் அமைப்பினர் பயன்படுத்தி வருகின்றனர். அந்த நிகழ்ச்சி குறித்த செய்தி புகைப் படத்துடன் பல்வேறு தேசிய-சர்வதேசிய ஊடகங்களில் அப்போது வெளியாகியிருந்தது. அன்று நடந்த நிகழ்ச்சியில் யெச்சூரியும் டீஸ்டாவும் பாஜகவையும் நரேந்திரமோடியையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம்செய்திருந்தனர். பாஜகஅரசின்ஊழல்கள்குறித்து பேசியயெச்சூரி, பல்வேறு வகையில் பிரதமர் நரேந்திரமோடி கடைபிடிக்கும் மவுனத்தைக் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இனி நரேந்திரமோடியை மவுனேந்திரமோடி என அழைக்க வேண்டியநிலை உள்ளதாகவும் அன்று அவர் குறிப்பிட்டிருந்தார். மோடியின் ஆட்சி மீதான கவலைகளை டீஸ்டாவும் அந்த கூட்டத்தில் பகிர்ந்துகொண்டார்.
எஸ்எப்ஐ படத்துடன் பொய்பிரச்சாரம்
சபரிமலை பிரச்சனையை முன்னிறுத்தி பல்வேறு பொய்யான படங்களையும், போஸ்ட்டுகளையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு சங்பரிவார் அமைப்பினர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 2005  ஜுலை 3ஆம் தேதி எஸ்எப்ஐ நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க ‘கவுன்சிலிங்’க்கு எதிரான முற்றுகை போராட்ட படத்தை சபரிமலை போராட்டம் என பொய்யாக சித்தரித்து பதிவிட்டுள்ளனர். எஸ்எப்ஐயின் எர்ணாகுளம் மாவட்ட முன்னாள் செயலாளர் எம்.பி.ஷைனியை காவல்துறையினர் அடிக்கும் படத்தை பெண் ஐயப்பபத்தரை தாக்கி காவல்துறையினர் அராஜகம் செய்வதாக சங்பரிவார் சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்துள்ளனர்.
Theekkathir