இலங்கை: கொரனா நிலவரம்

நாட்டில் மேலும் 205 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 75ஆக அதிகரித்துள்ளது.

செங்கை ஆழியான்

(Manikkavasagar Vaitialingam)

இவர் கந்தையா அன்னம்மா தம்பதிகளின் எட்டாவது குழந்தையாக வண்ணார்பண்ணையில் பிறந்தார். யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார். இவர் 28.02.2016 இல் தனது 75 வது வயதில் இயற்கையெய்தினார்.

தமிழ் நாடு: அரசியல் களம்

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன.

இலங்கை: கொரனா நிலவரம்

கொவிட் 19 தொற்றிலிருந்து 475  பேர் இன்று(01) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 79,422 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், தொற்றுக்குள்ளான மேலும் 3,349 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

1,000 ரூபாய்க்கு இணக்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, நாளாந்த சம்பளமாக, 1,000 ரூபாயை வழங்குவதற்கு, சம்பள நிர்ணய சபையுடனான இன்றைய பேச்சுவார்த்தையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. அந்த வகையில், 900 ரூபாயை அடிப்படை சம்பளமாகவும் 100 ரூபாயையு பட்ஜெட் கொடுப்பனவாகவும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.