இலங்கை: கொரனா நிலவரம்

கொவிட் 19 தொற்றிலிருந்து இன்று(03) 417 பேர் பூரண குணமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 80,437 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 2,950 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். 

கட்டுநாயக்க- சீதுவை மேற்கு லியனகேமுல்ல கிராம சேவகர், தனது முகப் புத்தகத்தில்  தவறான செய்தியை பதிவு செய்தமையால் மக்களிடையே பதற்ற நிலை உருவானது.

மேற்கு லியனகேமுல்ல மற்றும் வடக்கு லியனகேமுல்ல ஆகிய இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு லியனகேமுல்லையில் உள்ள விகாரையில் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முடியும் என அவர் பதிவொன்றை இட்டுள்ளார். 

இதன் காரணமாகவே இரண்டு கிராம சேவகர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் அங்கு சென்றிருந்த நிலையில், மக்களிடையே  குழப்ப நிலை ஏற்பட்டது. 

இதனையடுத்து, கட்டுநாயக்க 18 ஆம் கட்டையில் அமைந்துள்ள போதி ரத்னாராம விகாரையில் வடக்கு லியனகேமுல்ல கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

பின்னர் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் இரண்டு விகாரைகளில் தடுப்பூசி பெற்றுகொண்டனர். 

புத்தளத்தில்  கொரோனா வைரஸால் உயிரிழக்கும்  முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை; அடக்கம் செய்வதற்கான  ஏற்பாடுகளை தான் மேற்கொண்டு வருவதாகவும் அதற்கான உரிய இடம் மற்றும் இதர அனைத்து ஏற்பாடுகளையும் புத்தளம் நகர சபை மூலம் பெற்றுக்கொடுக்க  தயாராக உள்ளதாக, புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் தெரிவித்துள்ளார்.