காதல் என்றால்

காதல் என்றால் மார்க்ஸ்-ஜென்னி மீதும், ஜென்னி மார்க்ஸ் மீதும் வைத்திருந்ததுதான் காதல்.

இவை மிகவும் உன்னதமானது. இது புரிதலால் உண்டான காதல் கதை. இத்தனைக்கும் மார்க்ஸைவிட ஜென்னி நான்கு வயது பெரியவர். ஜென்னி மார்க்ஸிடம் அடிக்கடி சொல்வாராம், “ நான் உன்னை குழந்தையிலிருந்து பார்த்து வருகிறேன் மார்க்ஸ்” என்று.

மிதிவண்டிக் குறிப்புக்கள் – 17


(Amritha Ayem)

கரடி, அளிக்கம்பை, புட்டம்பை, மொட்டையாகல் மலை, நான்:
பேராசிரியை சியாமளா ரத்னாயக்க இலங்கையில் பிறந்தவர். ஐக்கிய அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளராகவும், ஆய்வாளராகவும் பணியாற்றுபவர். பிறிஸ்லி கரடிகளின் ஆய்வுகளுக்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். இலங்கையின் பிரபல கிரிக்கட் விளையாட்டு வீரர் ரவி ரத்தனாயக்கவின் மூத்த சகோதரி.

IMF வெளியிட்ட விசேட அறிவிப்பு

இலங்கையில் வரிக் கொள்கையை மறுசீரமைப்பது இன்றியமையாத விடயம் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. வரி வருவாய் மற்றும் செலவு இடையே உள்ள ஏற்றத்தாழ்வை சரி செய்யவே அது தேவைப்படுவதாக அலுவலகம் தெரிவித்துள்ளது. தனிநபர் வருமான வரிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வரி விகிதம் அதை அடைவதற்கு இன்றியமையாதது என்றும் தெரிவித்துள்ளது. இந்த சீர்திருத்தங்கள் ஊடாக கடனாளிகளின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

கச்சத்தீவு திருவிழா இன்று

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (03) ஆரம்பமாகவுள்ளது. திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான உணவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

திடீரென லோகோவை மாற்றியது நோக்கியா

நோக்கியா நிறுவனத்தின் 60 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக தனது அடையாளத்தை மாற்ற முடிவு செய்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து நோக்கியாவின் புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இலங்கையில் குண்டாகுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் அதிக எடை மற்றும் பருமனானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எடை அதிகரிப்பால் பிற்காலத்தில் தொற்றா நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் சாந்தி குணவர்தன கூறுகிறார்.

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் பெறுமதி உயர்வு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபாய் 343.97 ஆகவும் விற்பனை விலை 356.73 ரூபாயாகவும் இன்று காணப்படுகின்றது.

7 வரை கடுமையான நிலநடுக்கம் ஏற்படும்

இன்று (2) முதல் மார்ச் 7ஆம் திகதி வரை கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என்று நெதர்லாந்து புவியியலாளர் ஃபிராங்க் ஹூனர்பெர்க் கணித்துள்ளார்.. ஈராக் புவியியலாளர் சலின் அமாதியும் இதனை உறுதி செய்துள்ளார். இது பூமியின் மேலோட்டத்தின் வலுவான இயக்கங்கள் காரணமாக உணரப்படும் ஒன்றாகும்.  இதேவேளை நேற்று (1) ரிக்டர் அளவுகோலில் 2.5 முதல் 5.4 வரையிலான 49 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தோனேசியாவில் பலத்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனமான பிஎம்கேஜி தெரிவித்துள்ளது. 

ஸ்ராலின் என்கின்ற முதல்வன்

(Rathan Chandrasekar)

இரண்டுமூன்று ஆண்டுகளுக்கு முன்…
வெற்றிடம் வெற்றிடம் என்று
பலர் ஓலமிட்டார்களே…
ஞாபகமிருக்கிறதா?
வெற்றிடமென்று
ஒன்று இருக்கிறதா?
தகுதியுடன் காற்று வந்து
உட்கார்ந்துகொள்கிறது.
அவ்விதம் வந்தமர்ந்த –
அமர வைக்கப்பட்ட காற்று –
மு.க.ஸ்டாலின்.