துரையப்பா கொலையும் வன்னி நோக்கிய பெயர்வும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

1974 இல் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவுநாளில் நிகழ்ந்த துயரங்கள் தமிழ் மக்களிடையே சீற்றத்தை உண்டுபண்ணின.  அரசாங்கம் நிகழ்வுக்குப் பொறுப்பேற்காததுடன் குற்றத்திற்குப் பொறுப்பானோரைத் தண்டிக்கவும் தவறியது. இது ஏற்கெனவே தரப்படுத்தலால் வெகுண்டிருந்த தமிழ் இளைஞர்களிடையே மேலும் சினத்தை மூட்டியது. இதைத் சாதகமாகப் பயன்படுத்தி தமிழ்த் தேசியவாத அரசியலும் அரசியல் வன்முறையும் வளர்க்கப்பட்டன.

தோழர் கௌரிகாந்தன்

(சுகு சிறீதரன்)

மறைந்த நண்பர் தோழர் குகமூர்த்தி அவர்களின் மூலமே முதன் முதலில் தோழர் கௌரிகாந்தன் அவர்கள் பரிச்சயமானார். நல்லூர் முடமாவடியில் உள்ள ஒரு வீட்டில் சந்தித்துக் கொண்டது ஞாபகம் . அப்போது அவர்கள் விடிவு என்ற ஒரு பத்திரிகை குழுவாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்‌.
1970 களின் இறுதி வாக்கில் என நினைக்கிறேன்.

சுரேஷ் பிரேமச்சந்திரனின் சுத்த முட்டாள் ஒப்பீடு?

(Vaithiyanathan Loganathan)

“உதயன்” போன்ற அபத்தமான செய்திகளை காவும் பத்திரிகைகளும், நச்சு காளான்களாக வெகுத்துவிட்ட YouTube குப்பைகளும் மக்கள் மத்தியில் மலிந்து பிற்போக்குத்தனத்தை வளர்த்துவிட . . . . . . . கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க வசதியாக அமைந்துவிடுகிறது இந்த கடைநிலைத் தமிழ் அரசியல் முட்டாள்களுக்கு!

வைகோ

(Mr.M.S.Rajagopal ).


“உண்மையில் தமிழீழ விடுதலை போராட்ட காலம்தான் என்னுடைய வாழ்வின் வசந்த காலம்! தமிழீழ பயணங்கள் குறித்த நூல் ஒன்று எழுத ஆசைப்படுகிறேன்” – வைகோ.

முள்ளிவாய்காலில் முடிவு

(Thesam Net)
சுயபுத்தி இருந்தாலுமே மற்றவர்களை கூடி ஆலோசிக்க வேண்டும்! சுயபுத்தியும் இல்லாமல் மற்றையோர் புத்தியையும் கேளாமல் அரசியல் செய்தால் இதுதான் முடிவு!

சமாதானத்தை குழப்ப திலீபனை சாகடித்த பிரபாகரன்

 

அது இந்திய அமைதிபடை இலங்கையில் கால்பதித்த நேரம், சிங்கள தாக்குதலிலிருந்து தம்மை காக்க இந்தியா வந்ததை ஈழதமிழர்கள் கொண்டாடிகொண்டிருந்த நேரம், ஜெயவர்த்தனே இறங்கிவந்து தமிழருக்கு தனி மாகாணம் கொடுக்கலாம் என முதன்முதலாக சொல்லி இருந்த நேரம். அதற்கு மேலும் இழுத்தால் நிலமை இன்றைய சிரியா அளவிற்கு செல்லலாம் என்பதால் எல்லா குழுக்களும் இணக்கபாட்டுக்கு வந்திருந்த நேரம். புலிகளும் ராஜிவ் ஒப்புகொண்ட மாதாந்திர 50 லட்சத்தை வாங்கிகொண்டு எப்படியும் ஜெயவர்த்தனேவுக்கும் ராஜிவிற்கும் பிணக்கினை ஏற்படுத்தி மறுபடியும் சண்டை தொடங்கலாம் என எதிர்பார்த்த நேரம்.

(“சமாதானத்தை குழப்ப திலீபனை சாகடித்த பிரபாகரன்” தொடர்ந்து வாசிக்க…)

உயிருடன் உள்ளாரா பிரபாகரன்….?

(தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராக இருந்தவர் தயா மோகன். இலங்கை இறுதிப் போரின் போது தப்பி வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பாக இருக்கிறார்.அவர் அளித்த கருத்தை இப்போ பார்ப்போம் …..!)

உயிருடன் உள்ளாரா பிரபாகரன்….?

தற்போது பிரபகாரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பது தொடர்பாக சில விசயங்களை நாங்கள் இப்போது சொல்வது என்பது சாத்தியமில்லாத விசயமாக இருக்கும். இருந்தாலும் இறுதியாக உறுதியாக சொல்கின்றேன் ,.. நாட்டுக்காக இறுதி வரை மக்களோடு மக்களாக நின்று போராடுவேன். வெற்றி பெற இயலவில்லை என்றால் மாவீரர்களோடு இணைந்து விடுவேன். இதுதான் தலைவர் சொன்ன தாரக மந்திரம் .தலைவர் இருக்கிறார் என்று விடுபவர்களே சிந்தியுங்கள் …

(“உயிருடன் உள்ளாரா பிரபாகரன்….?” தொடர்ந்து வாசிக்க…)

திலீபன்

இலங்கையில் திலீபன் ஒரு வரலாற்றுப் பதிவுக்கு உரிய பெயர் என்பது மறுக்க முடியாதது.ஆனால் அவர் வாழ்வும் மரணமும். விமர்சனத்துக்கு உரியது. இந்திய இராணுவத்தின் வருகையின் பின்பு மக்கள் மனதில் பாரிய மாறுதல்களும் சந்தோசங்களும் மீள திரும்பின.ஊரெங்கும் பறந்த புலிக்காடிகள் காணாமல் போயின.

(“திலீபன்” தொடர்ந்து வாசிக்க…)

காணாமல் போனாரா பிரபாகரன்?

தமிழ் அரசியல்வாதிகள் தம்மைப் பற்றிய செய்திகள் பரபரப்பாக உலாவ வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் முன்னாள் போராளிகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு அண்மைக் காலமாக வலுப்பெற்று வருகிறது.

(“காணாமல் போனாரா பிரபாகரன்?” தொடர்ந்து வாசிக்க…)

பிராபகரனை கண்டுபிடித்து தரவேண்டும் என கேட்பது சரியா தவறா…? – உலகத் தலைவர்கள் கருத்து

மரணமடைந்துவிட்டதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரனை கண்டு பிடிக்க வேண்டுமென்று இலங்கையில் உள்ள காணாமல் போனவர்களுக்கான மையத்தில் மனு கொடுக்க விரும்புகிறேன் என்று இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் கூறியதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.

(“பிராபகரனை கண்டுபிடித்து தரவேண்டும் என கேட்பது சரியா தவறா…? – உலகத் தலைவர்கள் கருத்து” தொடர்ந்து வாசிக்க…)