அரசியல் சதுரங்கத்தின் ஓர் அங்கமா?

(எம்.எஸ்.எம்.ஐயூப்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எட்டாவது நாடாளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டமை உரிமை வழங்கலாகக் கொள்வதா, தென் பகுதி அரசியலில் புதிதாகக் காணப்படும் நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கொள்வதா அல்லது தென் பகுதி அரசியலில் இடம்பெற்று வரும் அரசியல் சதுரங்கத்தின் ஓர் அம்சமா என்பது இப்போதைக்குத் தெளிவாகவில்லை. ஆயினும், கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் மக்கள் விடயத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பார்க்கும் போது இது நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் கொள்ளலாம்.

(“அரசியல் சதுரங்கத்தின் ஓர் அங்கமா?” தொடர்ந்து வாசிக்க…)

வாரம் ஒரு ஆய்வாளர் பகுப்பாய்வு 01. ஒரு இடையீடு. தராகி சிவராம்.

90 களில் பதின்மவயதில் புலி நாட்டாமை
செய்த ஊரைவிட்டு ஒடி கொழும்பு போனேன்.
சரிநிகர் அலுவலகத்தில் கவிஞர் சேரன்
உதவியலாளரால் ஒரு பின்னேரம் கொள்ளுப்பிட்டி காலி
வீதியில் சிங்கள கடையில் பிளென்ரீ குடித்தேன் தராகி
சிவராமோடு. இந்தியாவில் ல் இருந்தபோது
மும்பாய் தாண்டி தான் போகவில்லை என்று
ஆதங்கப்பட்டார். நான் குடியிருந்த ரத்மலானலயில
சிவராம் குடியிருந்ததால் அடுத்த சனிக்கிழம
அவர் வீடு போனன். அதுவொரு கனாக்காலம்
எனக்கு 16 வயசு. ராதுகா பதிப்பக ரசிய நாவல்
தமிழ் மொழிபெயர்ப்புகள வாசிச்சுட்டு
ஒரு பிசாசு மாதிரி வொட்காவும் பீரும் மணக்க
கிடைக்காத என்று அலைந்த காலம். தராக்கி
ஒரு காப்போத்தல் பிறாண்டி உடைத்தார். கேட்டார்
நமக்கு கள்ளுதானே குடிக்கலாம்னு அவையடக்கமாக
சொன்னேன். மருந்துக்கும் எனக்கு மது தந்தாரில்ல. பொரிச்ச
கார்ஜில்ஸ் சோஸேஜ் மட்டும் தந்தார். வெறியில திராணியிருந்தா
இளவரசி டயனாவைவை திராணியிருந்தா யாரும்
மடக்கலாம்ணார்.(அந்த நாட்களில ஒரு குதிரகாரன் தான் இளவரசியின் பாய்பிறண்ட்)
(“வாரம் ஒரு ஆய்வாளர் பகுப்பாய்வு 01. ஒரு இடையீடு. தராகி சிவராம்.” தொடர்ந்து வாசிக்க…)

இணக்க அரசியலில் மைத்திரி – டக்ளஸ் பிணக்கு என்ன?

தேசிய அரசாங்கத்தில் நியமனம் பெற்று உள்ள இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்குகின்ற தோரணையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பூடகமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் புத்திமதி கூறி உள்ளார். ஜனாதிபதி பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஸ தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக விளங்குகின்றார், இவரிடம் இருந்து பாடம் படிக்க வேண்டிய தேவை இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு உள்ளது, முன்பு அமைச்சரவை அமைச்சராக இருந்து விட்டு இப்போது இராஜாங்க அல்லது பிரதி அமைச்சர்களாக இருப்பது எப்படி? என்று அடம் பிடிப்பவர்கள் மஹிந்த ராஜபக்ஸவிடம் இருந்து படிக்க வேண்டும் என்று இவர்கள் மத்தியில் உரையாற்றியபோது ஜனாதிபதி தெரிவித்து உள்ளார்.

(“இணக்க அரசியலில் மைத்திரி – டக்ளஸ் பிணக்கு என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

எதிரி அல்லாத, எதிர்ப்பு இல்லாத எதிர்க்கட்சியா?

எதிர்கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரா சம்பந்தன் ஐயாவுக்கும் த.தே.கூ க்கும் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு அரசியல் புலத்தினுள் நுளைவோம். ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஜீ.ஜீ க்குப் பின் தொடக்கி வைக்கப்பட்ட அரசியல் தான் உணர்ச்சியரசியல், எதிர்ப்பரசியல் என்பன. நாம் தமிழர்கள் என்ற ஒற்றை அடிப்படைக் காரணியைக் கொண்டு நடத்தப்பட்ட அரசியல் விபச்சாரமே இவ்வரசியல்களின் மூலாதாரமாகும். இது தமிழீழப் பிரகடனத்தினூடாக புலிகள் வரை தொடர்ந்தது. புலிகளின் அழிவுடனும், பசி, துன்பம், போரின் அழிவுகளுடன் உணர்ச்சி அரசியல் நின்றுபிடிக்க முடியாது அழிய முயன்ற போதும் ஒருசிலரும், கட்சிகளும் எஞ்சியிருந்த உணர்ச்சியரசியலையும் எதிர்ப்பரசியலையும் காப்பாற்ற முயன்றனர். இதன் ஒரு வடிவம்தான் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுமாகும்.

(“எதிரி அல்லாத, எதிர்ப்பு இல்லாத எதிர்க்கட்சியா?” தொடர்ந்து வாசிக்க…)

டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன ? (பகுதி 2)

(மாதவன் சஞ்சயன்)

டக்ளஸ் கருணா இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவருமே தலைமையுடன் முரண்பட்டவர்கள். யாரை எதிர்த்து போராட வந்தார்களோ அவர்களிடமே பாதுகாப்பு தேடியவர்கள். போராட்டத்தில் இவர்களின் தலைமையை ஏற்று வந்தவர்களை களத்தில் பலிகொடுத்து பலி எடுத்தவர்களுடனே கைகுலுக்கி தம்மை பாதுகாத்து கொண்டவர்கள். தங்கள் இயலாமையால் எதிரியிடம் மண்டியிட்டு பதவி அரசியலுக்கு வந்தவர்கள். யாரை எதிரி என அடையாளம் காட்டி தம் தோழர்களை உறுப்பினர்களை களப்பலி ஆக்கினார்களோ அவர்களுக்கு ஊட்டி வளர்த்த ஈழக்கனவை தம்மை பாதுகாப்பதற்க்காக பலி கொடுத்தவர்கள். தாம் யதார்த்தத்தை உணர்ந்தது போல் தம் தோழர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் உணர்த்த தவறியவர்கள். இருக்கும் இடத்துக்கு விசுவாசமாக இருந்து தமது தேவைகளை பெற்றுக் கொண்டவர்கள். தாம் வளர்ந்த பாசறையை மறந்து புதுப் பரணி பாடியவர்கள்.

(“டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன ? (பகுதி 2)” தொடர்ந்து வாசிக்க…)

டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன?

(மாதவன் சஞ்சயன்)

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ராணுவ பொறுப்பாளராக இருந்த டக்ளஸ் அவரின் தனி நபர் முடிவு, செயல்பாடு, தனிநபர் வழிபாட்டு விருப்பு, அணுகுமுறை காரணமாக இயக்கத்துடன் முரண்பட்ட நிலையில் நடந்த சென்னை சூளைமேடு கொலை சம்பவம் அதனால் ஏற்பட்ட எம் ஜி ஆர் அரசின் அழுத்தம் அவரை இயக்கத்தில் இருந்து வெளியேற்றியது. கருணாவின் வெளியேற்றத்துக்கு பல காரணங்கள் இன்றுவரை இரு தரப்பாலும் அறிக்கைகள் பேட்டிகள் மறுப்புகள் என வந்து சிதம்பர சக்கரமாகவே எம்மை குழப்புகிறது.

(“டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

ஐநாவே அழுகிறது கதறுகிறது கலங்குகிறது!

(இளங்குமரன்)

நாங்கள் யாரையும் கொல்வோம். அல்பிரெட் துரையப்பா முதற்கொண்டு மகேஸ்வரி வேலாயுதம்வரை துரோகிகள் என்று நூற்றுக் கணக்கானோரைக் கொன்றோம். பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி அதிபர்கள், கல்லூரி மாணவர்கள், நீதிபதிகள், அரசாங்க அதிபர்கள், மேயர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், சமூக சேவகர்களைக் கொன்றோம். அரச ஆதரவாளர்கள், இலங்கை இராணுவம் இந்திய இராணுவம், பொலிசாருடன் உறவுகளைப் பேணியவர்களைக் கொன்றோம். அயல்நாட்டில் தலைவரைக் கொன்றோம், அவருடன் அப்பாவிகளைக் கொன்றோம். சரணடைந்த படையினர் பொலிசாரைக் கொன்றோம். அரசியல்வாதிகள், மாற்றுக் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள், ஏன் சொந்த இயக்க உறுப்பினர்களையும் கொன்றோம். எங்கள் சிறைப்பிடிக்கப்பட்டு எங்கள் சித்திரவதை முகாம்களில் இருந்தவர்களையெல்லாம் நாம் கொன்றோம்.

(“ஐநாவே அழுகிறது கதறுகிறது கலங்குகிறது!” தொடர்ந்து வாசிக்க…)

அமிர் பின் பிரபாகரன்? சம்மந்தர் முன் சர்வதேசம்!

(மாதவன் சஞ்சயன்)

1977ல் ஸ்ரீலங்கா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டது. அமிர்தலிங்கம் பாசையில் சொல்வதானால் அது ஒரு அரசியல் விபத்து. 1970ல் வந்த பாராளுமன்றத்துக்கு 1975ல் தேர்தல் நடத்தாது 1977வரை நீட்டி மக்களை வாட்டி வதைத்த சிறிமா அரசை சிங்கள மக்கள் 8 க்குள் அடக்கினர். அன்று சுதந்திர கட்சி வெறும் 8 ஆசனங்கள் பெற்று பாராளுமன்றத்தில் 3ம் நிலைக்கு தள்ளப்பட்டது. ஜே ஆர் மிகப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, தமிழ் ஈழத்துக்கு ஆணை கேட்டு 18 ஆசனங்கள் மட்டும் பெற்ற த.வி.கூட்டணி எதிர்கட்சியாக மாறியது தான், 1948ல் சுதந்திரம் பெற்ற இலங்கை 1972ல் ஸ்ரீலங்கா என பெயர் மாற்றம் பெற்றபின் எழுதப்பட்ட புதிய அத்தியாயம் ஆகும். அதே அரசியல் விபத்து 2015ல் ஏற்பட்டிருப்பது வரலாறு மீண்டும் திரும்புகிறதா என்ற எண்ணக்கருவை எல்லோர் மத்தியிலும் விதைக்கிறது.

(“அமிர் பின் பிரபாகரன்? சம்மந்தர் முன் சர்வதேசம்!” தொடர்ந்து வாசிக்க…)