எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (இறுதி)

(மாதவன் சஞ்சயன்)

பிரித்தானியா சுதந்திரம் தந்த பின் தொடர்ந்து வந்த அரசுகளின், தமிழர் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகள் தான் முரண்பாட்டின் ஆரம்பம். இரு தரப்பு தலைவர்களும் தமது வாக்கு அரசியலை செய்து இன விரோதத்தை வளர்த்து விட்டனர். அதே வேளை பெரும்பான்மை இனத்துள்ளும் பொருளாதார ஏற்றத்தாழ்வு புகையத்தொடங்கி அது 1971ல் படித்தவேலையற்ற தென்னிலங்கை இளைஞர்களின் ஆயுத புரட்சிக்கு வித்திட்டது. அதே காலத்தில் கொண்டு வரப்பட்ட தரப்படுத்தல் முறை தமது படிப்பை, தம் எதிர்காலத்தை பாதிக்கும் செயல் என்ற பயம் யாழ் மாவட்ட மாணவரை, அரசை எதிர்த்துப் போராட தூண்டியது.

(“எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (இறுதி)” தொடர்ந்து வாசிக்க…)

ஜெனீவா பயணங்கள்……..!

(சாகரன்)

இப்போது எல்லாம் ஜெனிவாவிற்கு பயணமாதல் என்பது 1970 களில் வெளிநாட்டிற்கு மேல் படிப்பிற்காக பயணமானார் என்று தினகரன் பத்திரிகையில் வரும் விளம்பரச் செய்திகள் போல் ஆகிவிட்டது. இலங்கை தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அரசியல் உரிமை மறுப்புக்கள் என்பனவற்றிற்கு தீர்வைப் பெறும் நடவடிக்கைக்காக பயணம் என்பதை விட ஒரு வகையில் பிரபல்யம் தேடும், பொழுதுபோக்கும் செயற்பாடுகளை ஒத்ததாகவே இப் பயணங்கள் அமைகின்றன என்பது வருத்தத்திற்குரியது. இலங்கையில் நடைபெற்றது இனப்பாகுபாடும், இதனைத் தொடர்ந்த இன ஒழிப்பும் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களுக்கு நாம் 1958 தொடக்கம் நடைபெற்று வந்த கலவரம் தொடக்கம் இறுதியாக நடைபெற்ற 1983 வரையிலான கலவரங்கள் வரை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுவவதன் மூலமே இலங்கையில் தமிழ் பேசும் சிறுபான்மையின் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக பாகுபடுதப்பட்டார்கள், இதனைத் தொடர்ந்து இல்லாமல் செய்வதற்கான செயற்பாடுகளில் பேரினவாத அரசுகள் முயன்றன என்பதை நிரூபிக்க முடியும். கூடவே தமிழ் பேசும் மக்களுக்கான தொடர்சியான பாரம்பரிய பிரதேசம் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் இல்லாது ஒழிக்கப்டுவதையும், உரிமைகள் வழங்குவதில் பெரும்பான்மை மக்களை முதன்மைப்படுத்தி பாகுபாடுகள் காட்டப்பட்டு வருவதையும் புள்ளிவிபரங்களுடன் காட்ட வேண்டும். இதற்கு பலம் சேர்க்க மட்டும் பிரபல்யப்படுத்தப்பட்ட முள்ளிவாய்கால் படுகொலையை சேர்க்கலாம். மாறாக முள்ளிவாய்காலில் மட்டும் தொங்கி நின்றால் யுத்தம் இருதரப்பினரால் புரியப்பட்ட போது மரணங்கள் நிகழும் என்ற கோதாவில் இன ஒழிப்பு, இனப்பாகுபாடு என்பவை அடிபட்டே போகும். மேலும் புலிகளை அழித்து இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இலங்கை அரசிற்கு அமெரிக்கா உட்பட சர்வதேசமும் அன்று பக்க பலமாக இருந்த நிலையில் பக்க பலமாக நின்றவர்களே இந்த யுத்தம் இனப்பாகுபாட்டின் அடிப்படையில் நடாத்தப்பட்டது என்பதில் ஒத்துவருவார்களா? அல்லது இதனைத் சீர்தூக்கிப் பார்பார்களா? என்பது ஐயமே. எனவே 60 வருடங்களுக்கு மேலாக இலங்கைத் தீவில் அரசாங்கங்கள் நடாத்திய திட்டமிட்ட கலவரங்களையும், சலுகை மறுப்புக்களையும், உரிமை மறுப்புக்களையும், எழுதப்பட்ட உடன்படிக்கைகள் கிழித்தெறியப் பட்டதையும் புள்ளிவிபரங்களுடன் எடுத்துச் செல்லுங்கள் வெற்றி எமதே. மாறாக உசுப்பேத்த அல்லது பழிவாங்க மட்டும் முள்ளிவாய்காலை மட்டும் தூக்கிபிடித்தால் ஜெனிவா பயணம் 2009 ம் ஆண்டு மே மாதத்தில் புலம்பெயர் தேசம் எங்கும் பிரபாகரன் படத்துடனும், புலிக் கொடியுடனும் வீதிகளில் மக்களை இறக்கி கூச்சல் இட்டும் பிரபாகரனக் காப்பாற்ற முடியாமல் போனது போலவே அமைந்து விடும். பிரபாகரனை நேசித்தவர்களின் வலி என்பதை விட இலங்கையில் வாழும் உரிமை மறுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் உரிமை முக்கியமானது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (3)

(மாதவன் சஞ்சயன்)

வட மாகாண முதலமைச்சர் தனக்கு தரப்பட்ட வேலையை விட்டு அடுத்தவர் செயலை முடக்கும் செயலை அண்மைக் காலங்களில் செய்யத் தொடங்கி உள்ளார். மகிந்த ஆட்சியில் இருக்கும் வரை அவர் முன் சத்திய பிரமாணம் எடுத்து நல்லுறவை பேண முற்பட்டவர், ஆளுநர் மற்றும் பிரதம செயலாளருடன் முரண்பட தொடங்கினார். தன் போக்கில் செயல்பட அவர்கள் விடாததால் அவர்களை மாற்றும்படி மகிந்தவிடம் முறையிட்டார். மகிந்த ஆரம்பத்தில் சம்மதித்தாலும் அவரது அமைச்சர் அதனை தடுத்தார். வல்வெட்டியில் பிரபாகரன் மாவீரன் என கூறி புலியடி செல்ல புறப்பட்ட முதல்வர் பற்றி வத்தி வைத்தார். விக்கியர் தேர்தல் காலத்தில் ராணுவத்தை வெளியேற்றுவேன் என கூறினார். ராணுவ ஆளுனரை மாற்றுவேன் என்றார். இரண்டும் தனது அரசியல் இருப்புக்கு ஆபத்து என்பதால் அமைச்சர் மகிந்தரின் மனதை மாற்றியதால் முதல்வர் கோரிக்கை நிறைவேற வில்லை.

(“எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (3)” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை இறையாண்மை முற்றுகைக்குள் !

இம்மாதம் 16ந் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பாக மீண்டும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. ஐ.நா.மனித உரிமை பேரவையின் இவ்வாறான அறிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் 2009 இல் ஒரு தடவையும், பின்னர் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாகவும் (2012-2015) வெளிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தம் 2009 இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும், 2011 இற்கு பின்னரே திடீரென்று ஐ.நா.ம.உ. பேரவை விழித்துக் கொண்டு, இலங்கையின் மனித உரிமைகள் பற்றி கறாராகப் பேசத் தொடங்கியுள்ளார்கள். அத்துடன் 9 ஆண்டு (2002-2011) காலப்பகுதியை மாத்திரமே தெரிந்து எடுத்து வைத்துக்கொண்டு, இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். குறிப்பாக இந்தக் காலப்பகுதியை தெரிந்தெடுத்ததின் பின்னணி என்னவாக இருக்கலாம் என்பதை உணரக்கூடியவர்களால்தான், இலங்கை தொடர்பான இவர்களது (அரசியல்) நிகழ்ச்சி நிரலையும் புரிந்து கொள்ள முடியும்.

(“இலங்கை இறையாண்மை முற்றுகைக்குள் !” தொடர்ந்து வாசிக்க…)

மறக்கடிக்கப்பட்ட முஸ்லிகளின் மனித உரிமைகள்

சுவிசர்லாந்து நாட்டின் ஜெனீவாவில், ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இது பற்றிய செய்திகள்தான் அண்மைய நாட்களில் பத்திரிகைகளையும் இணையத்தளங்களையும் நிரப்பிக் கொண்டிருக்கின்றன. புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் நாட்டின் ஆட்சியைப் பாரமெடுத்த பிற்பாடு, கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இப்பின்னணியில் ஜெனீவா அமர்வு இடம்பெறுகின்றமையால் பாரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

(“மறக்கடிக்கப்பட்ட முஸ்லிகளின் மனித உரிமைகள்” தொடர்ந்து வாசிக்க…)

வாரம் ஒரு ஆய்வாளர் பகுப்பாய்வு 4: தகைமிகு பேராசிரியர் கா. சிவத்தம்பி.

சிவத்தம்பி ஐயா என் அயலவர். என் முதற்கவிதை தொகுதி வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினர். கொழும்பில் பல தடவைகள்
அவர் வீடுபோய் பேசியிருக்கிறேன்.  ஒரு நடிகனுக்குரிய Resonant குரல் அவருடையது. அவர் ஒரு நல்ல நாடக நடிகனும். அவரது மிகப்பெரும் பலமாக நான் கருதுவது அவரின் Resonant voice தான். ( U tube ல் அவரின் குரலை கேட்டு பாருங்கள் சொக்கிப்போய்விடுவீர்கள்.) ஐயா பாதி அப்பாவி, மீதி ராஜ தந்திரி. கைலாசபதி போல ஐயாவிடம் பொம்புளைக் களவுபோன்றவை இல்லை. ஐயாவுக்கு தனது பணக்கார மனைவி ருபா அம்மாவில் பயம்.

(“வாரம் ஒரு ஆய்வாளர் பகுப்பாய்வு 4: தகைமிகு பேராசிரியர் கா. சிவத்தம்பி.” தொடர்ந்து வாசிக்க…)

ஈழப்போரின் இறுதியில் இனப்படுகொலை நடக்கவில்லை – ஐ.நா. அறிக்கை

ஐ.நா. அறிக்கையில் எழுதப் பட்டுள்ள, ஈழப்போரின் இறுதியில் இனப்படுகொலை நடக்கவில்லை” என்ற வாக்கியம் பலரின் விமர்சனத்திற்குள்ளாகியது. ஐ.நா.வை குறை கூற முடியாத கையறு நிலையில், பலர் சுமந்திரனுக்கு எதிராக திரும்பி, ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தார்கள்.  இனப்படுகொலை பற்றி விளக்கம் கொடுத்த பலர், சட்ட ஆதாரங்களை கணக்கில் எடுக்காமல், வெறும் உணர்வு பூர்வமான கதைகளை பேசினார்கள். படித்தவர்கள் கூட, சிறுபிள்ளைத் தனமாக உரையாடுகின்றனர். இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதை நிரூபிக்க முடியுமா? ஆம், முடியும். அதுவும் ஐ.நா. கூறும் அதே சட்ட ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும். ஆனால், அதற்கு நாங்கள் ஈழப்போரின் முடிவை எடுத்துக் காட்டியது தான் நாம் விட்ட தவறு. ஐ.நா. எமது தவறுகளை, தனது நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி அறிக்கை எழுதியுள்ளது. எம் தலையில் நாங்களே மண் அள்ளிப் போட்டுள்ளோம்.

(“ஈழப்போரின் இறுதியில் இனப்படுகொலை நடக்கவில்லை – ஐ.நா. அறிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

எது இனஅழிப்பு??????

முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியது??????
அனுராதா புறத்திலும் மற்றைய கிராமங்களிலும் குழந்தைகள் வயோதிபர்களை மற்றும் பெண்கள் கற்பிணிகள் என்று கொன்றதா????
மட்டக்கிளப்பில் முஸ்லிம்களை குழந்தைகளை கொன்றதா????
சரண்னடைந்த பொலிசாரை கொன்றதா????
உயிர்ருடன் ராயர் கொளுத்தி போட்டு மற்றைய போராட்ட குழுக்களை கொன்றதா????
இன்று மனித உரிமை பற்றி பேசும் முஸ்லிம்கள்……
மட்டக்கிளப்பில் தமிழ் மக்களை கிராமம் கிராமமாக கொல்லவில்லையா????
கற்பழிக்கவில்லையா????
குழந்தைகள் பெண்களை முஸ்லிம் ஆயுததாரிகள் கொல்லவில்லையா????

(“எது இனஅழிப்பு??????” தொடர்ந்து வாசிக்க…)

‘சுமந்திரனை கேள்வி கேட்கும் இளைஞனின் வீடியோ வெளிப்படுத்தும் அரசியல்’

வி. சபேசன்

‘இலங்கையில் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை நடந்தது’ என்ற கருத்தைத்தான் சுமந்திரன் பல முறை பேசியிருக்கிறார்.
ஆயினும் அவருடைய அரசியல் என்பது மேற்குலகின் சிந்தனையோடு ஒட்டிப் பயணிப்பதாக இருக்கிறது. பேரம் பேசும் வலு அற்ற நிலையில் தமிழர்கள் இருப்பதால், இதைத் தவிர வேறு வழி இல்லை என்று அவர் கருதக் கூடும். ஐநா மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் ‘இலங்கையில் நடந்தது இனப் படுகொலை அல்ல’ என்று கூறி விடுகிறார்.

(“‘சுமந்திரனை கேள்வி கேட்கும் இளைஞனின் வீடியோ வெளிப்படுத்தும் அரசியல்’” தொடர்ந்து வாசிக்க…)

ஏன் இனப்படுகொலை அல்ல?

(Jeyabalan Thambirajah)

எதிரி இராணுவமாகப் பார்க்கப்பட்டு யுத்த முரசு கொட்டி போர் தொடுத்த இலங்கை இராணுவம் எமது மக்களை படுகொலை செய்துள்ளது சித்திரவதை செய்துள்ளது பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியது என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கவில்லை. உலகம் முழுவதும் எதிரி இராணுவம் இவ்வாறு தான் உள்ளது. ஆனால் யாருக்காக துப்பாக்கி து}க்கினார்களோ அவர்களுக்கு எதிராகவே அந்த துப்பாக்கியைத் திருப்பியது படுமோசமான குற்றம். எதிரியின் குற்றங்களிலும் இது மோசமானது. அதனால் தான் இதனை வன்னிப் படுகொலையை இனப்படுகொலை என என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

(“ஏன் இனப்படுகொலை அல்ல?” தொடர்ந்து வாசிக்க…)