கிளிநொச்சியில் பாரிய தீ , 5 இராணுவத்தினர் காயம்

கிளிநொச்சி பொதுச் சந்தையில்,வெள்ளிக்கிழமை 16-08-2016 இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து அழிந்துள்ளன. தீயை கட்டுப்படுத்த முயன்றவர்களில் 5 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

(“கிளிநொச்சியில் பாரிய தீ , 5 இராணுவத்தினர் காயம்” தொடர்ந்து வாசிக்க…)

‘புதிய அரசியல் யாப்பானது சகலருக்கும் ஏற்றதாக அமையும்’

புதிய அரசியல் சாசனமானது பொதுஜன வாக்கெடுப்பின் மூலமே நிறைவேற்றறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்பதுடன், அதற்கு மாறாக எவரும் பொதுமக்களை ஏமாற்ற முடியாது என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

(“‘புதிய அரசியல் யாப்பானது சகலருக்கும் ஏற்றதாக அமையும்’” தொடர்ந்து வாசிக்க…)

பளை விபத்தில் ஐவர் பலி

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் 278 ஆவது மைல்கல் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (15) காலை 5.30 க்கு இடம்பெற்ற வாகன விபத்தில், வானில் பயணித்த நால்வர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் அறுவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(“பளை விபத்தில் ஐவர் பலி” தொடர்ந்து வாசிக்க…)

‘ட்ரம்ப் ஒரு தேசிய அவமானம்’

ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், “ஒரு தேசிய அவமானம்” என, குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் இராஜாங்கச் செயலாளருமான கொலின் பவல் தெரிவித்துள்ளார். அவரது மின்னஞ்சல்கள், ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுவோரால் ஊடுருவப்பட்டு (ஹக்), வெளியிடப்பட்டுள்ளன. அதிலேயே, இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

(“‘ட்ரம்ப் ஒரு தேசிய அவமானம்’” தொடர்ந்து வாசிக்க…)

பல மில்லியன் பணத்துடன் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது

மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களுடன் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இந்திய கடலோர பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அருள் ஜயரத்னம் என்றழைக்கப்படும் ராஜன் என்ற 41 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“பல மில்லியன் பணத்துடன் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

‘அப்பாவின் குரல் கேட்கிறது’ – ஹிருணிகா பிரேமச்சந்திர

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதி கிடைத்துள்ளது. எனினும், ஆட்சி மாறாமல் இருந்திருந்தால், தன்னுடைய தந்தையின் படுகொலை தொடர்பில் நேற்று (08) வழங்கப்பட்ட தீர்ப்பு, அறிவிக்காமலே விடப்பட்டிருக்கலாம் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

(“‘அப்பாவின் குரல் கேட்கிறது’ – ஹிருணிகா பிரேமச்சந்திர” தொடர்ந்து வாசிக்க…)

சம்பூரில் அனல் மின் நிலையம் கட்டப்படாது

சம்பூரில் நிர்மாணிப்பதற்கான முன்மொழியப்பட்டிருந்த அனல் மின் நிலையம், சம்பூரில் நிர்மாணிக்கப்பட மாட்டாது என்று, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை (13) உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

விடுதலைப்புலி: கலையழகனின் மனைவிக்கு அழைப்பு

கிளிநொச்சி விநாயகபுரத்தில் வசித்து வரும் வடபோர்முனையின் கட்டளைத்தளபதியாக இருந்து மரணமடைந்த லெப்டினன்ட் கேணல் கலையழகனின் மனைவிக்கு, கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பானை விடுத்துள்ளனர். வட போர்முனையின் கட்டளைத் தளபதிகளில் ஒருவராக இருந்து மரணமடைந்த கெங்காதரன் எனும் லெப்டினன்ட் கேணல் கலையழகனின் மனைவி விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏழு வருடங்கள் இருந்ததாகவும், கலையழகன் பயன்படுத்திய கைத்துபாக்கியை தற்போதும் வைத்திருப்பதாகவும், புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளை பேணுவதாகவும், வெளிநாடுகளில் இருந்து அதிகளவான உதவியை பெற்றுக்கொள்வதாகவும் கூறி பல தடவைகள் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரித்துள்ளனர்.

(“விடுதலைப்புலி: கலையழகனின் மனைவிக்கு அழைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாணம் – “போதையற்ற தேசம்”

யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்கா திறந்தவெளி அரங்கில் இடம்பெற்றுவரும் “போதையற்ற தேசம்” தேசிய வேலைத் திட்டத்தின் 8 ஆவது மாவட்ட நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு யாழ்.பொதுநூலகத்தின் அருகில் உள்ள வளாகத்தில் இடம்பெற்றது.

(“யாழ்ப்பாணம் – “போதையற்ற தேசம்”” தொடர்ந்து வாசிக்க…)

உடுவில் மகளிர் கல்லூரிப் பிரச்சினை முடிவுக்கு வந்தது

உடுவில் மகளிர் கல்லூரியில் கடந்த 3 ஆம் திகதி முதல் மாணவிகள் மற்றும் நிர்வாகத்துக்கும் இடையில் நிலவிய முரண்பாடு, இன்று (08) முடிவுக்கு வந்ததுள்ளது. ‘நான் விட்டுக்கொடுக்கிறேன், எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக எனது அனைத்துக் கடமைகளையும் ஒப்படைப்படைக்கிறேன்’ என முன்னாள் அதிபர் சிரானி மில்ஸ் அறிவித்ததையடுத்து, பிரச்சினை முடிவுக்கு வந்தது.

(“உடுவில் மகளிர் கல்லூரிப் பிரச்சினை முடிவுக்கு வந்தது” தொடர்ந்து வாசிக்க…)