சிரிய சிவில் யுத்தத்திலுள்ள யுத்தநிறுத்தமொன்றை, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை நேற்று (31) வரவேற்றுள்ளது. எனினும், யுத்தநிறுத்த மீறல்கள் தொடருமானால், யுத்தநிறுத்தத்தை கைவிடவுள்ளதாக போராளிக் குழுக்கள் எச்சரித்துள்ளன. ஏறத்தாழ ஆறு ஆண்டுகளாகத் தொடரும் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், கடந்தாண்டில் கொண்டுவரப்பட்ட மூன்றாவது யுத்தநிறுத்தத்தை வரவேற்கும் தீர்மானத்தை, 15 அங்கத்தவர்களைக் கொண்ட பாதுகாப்புச் சபை, ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் இடம்பெற்ற கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.
(“சிரிய யுத்தநிறுத்தத்தை வரவேற்கிறது ஐ.நா பாதுகாப்புச் சபை” தொடர்ந்து வாசிக்க…)