இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் தற்போது கொரோனாத் தொற்றுப் பரவல்  அதிகரித்துள்ள நிலையில், சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுததல்களைப் பின்பற்றி செயற்படவேண்டியது அவசியம் எனவும், அனைவரும் கட்டாயம் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டம் எனவும் ’கரைதுறைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (16) முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசபையில்  நடைபெற்ற  கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளத் தவறும் சபை உறுப்பினர்கள், எதிர்வரும் சபை அமர்வுகளில் பங்குகொள்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் ” என்றார் .

அத்துடன் ”விசேடமாக தனிப்பட்ட மருத்துவ தேவைகருதி, கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளக்கூடாது என மருத்துவர்களால் பரிந்துரைசெய்யப்படுபவர்கள், மருத்துவரின் அறிக்கையினை சமர்ப்பித்தால் மாத்திரமே சபை அமர்வுகளில் அனுமதிக்கப்படுவார்கள்” எனவும் தெரிவித்தார்.