அநுராதபுரம் சிறைக்கு விரைந்த மனோ கணேசன்

எனினும், சிறைச்சாலை வளாகத்திற்குள் செல்ல, சிறைச்சாலை அதிகாரிகள், இவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு உடனடியாக தகவலட கொடுத்துள்ளார்.

இதையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, மதுபோதையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று, தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டியதுடன், மண்டியிட வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்தே  தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோர் சிறைக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.