‘எழுக தமிழ்’ நிகழ்வில்

‘எழுக தமிழ்’ நிகழ்வில் எட்டாயிரம் வரையான மக்கள் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. சிலர் மூவாயிரம் பேர் வரையே கலந்து கொண்டார்கள் என்று சொல்கிறார்கள்.’எழுக தமிழ்’ நிகழ்வின் ஒளிப்படங்களை நுண்மாண்நுழைபுலன் கொண்டு ஆராய்ந்த போது, ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருப்பது புலப்பட்டது. ஆறாயிரத்தில் இருந்து எட்டாயிரம் வரையான மக்கள் கலந்து கொண்டார்கள் என்று சொல்வது சரியாக இருக்கும்.

(“‘எழுக தமிழ்’ நிகழ்வில்” தொடர்ந்து வாசிக்க…)

மக்கள் சக்தி எமது அரசியல் பயணத்துக்கு அவசியம் –

எமது மத்திய அரசை எதிர்த்து இதை நடாத்தவில்லை சிங்கள சகோதர சகோதரிகளை எதிர்த்து நடாத்தவில்லை பௌத்த சங்கத்தினரை எதிர்த்து நடாத்தவில்லை ஏன் இலங்கைத் தமிழரசுக் கட்சியை எதிர்த்துக் கூட நடாத்தவில்லை

இந்தப் பேரணி வரலாறு காணாத பேரணி. இது ஆட்சியில் அல்லது அதிகாரத்தில் உள்ள எவரையும் எதிர்த்து நடாத்தப்படும் பேரணி அல்ல. இன்றைய காலகட்டத்தில் நாடாளுமன்றத்துக்குத் தெரியப்படுத்துவதாலோ மாகாண சபைகளுக்குத் தெரியப்படுத்துவதாலோ எமது உரிமைகளை நாம் வென்றெடுத்துக் கொள்ள முடியாது. மக்கள் சக்தி எமது அரசியல் பயணத்துக்கு அவசியம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

(“மக்கள் சக்தி எமது அரசியல் பயணத்துக்கு அவசியம் –” தொடர்ந்து வாசிக்க…)

மாலை 6 மணிக்கு கடைகளை பூட்டி விடுவார்கள்.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில், சரியாக மாலை 6 மணிக்கு கடைகளை பூட்டி விடுவார்கள். உண்மையில், தொழிலாளர் சுரண்டப் படுவதை தடுப்பதற்கான சட்டம் காரணமாகத் தான், ஆறு மணிக்கே கடை பூட்டுகிறார்கள் என்ற உண்மை பலருக்குத் தெரியாது.

(“மாலை 6 மணிக்கு கடைகளை பூட்டி விடுவார்கள்.” தொடர்ந்து வாசிக்க…)

என்னதான் நடக்கின்றது…… உடுவில் மகளிர் கல்லூரியில்

(கட்டுரையாளரின் தகவல்கள் சரியானதா…? அல்லது தவறானதா….? என்ற கருத்துக்களை அறிவதற்கான களத்தை வாசகர்களிடம் விட்டுவிடுகின்றோம் – ஆசிரியர்)

உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி மில்ஸ் அவர்களது சேவை முடிவுறுத்தல் விடயம் பூதாகாரமாக்கப்பட்டுள்ளது.
பேராயரும் கல்லூரியின் ஆளுனர் சபைத் தலைவருமான பேரருட் கலாநிதி தியாகராசா அவரது அறிக்கையின் படி குறித்த அதிபர் 07 செப்ரெம்பர் 2016 அன்று 60 வயது பூர்த்தியுடன் இளைப்பாறுவார் என 2015 ஆவணிமாதம் 10ம் திகதி நடைபெற்ற ஆளுனர் சபைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

(“என்னதான் நடக்கின்றது…… உடுவில் மகளிர் கல்லூரியில்” தொடர்ந்து வாசிக்க…)

பாகிஸ்தானின்ன் இஸ்லாமிய அடிப்படைவாதம்

பாகிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் வளர்ச்சிக்கும், பங்களாதேஷ் பிரிவினைக்கும் தொடர்பிருக்கிறது. அதாவது, தேசிய இனப் பிரச்சினைகளை அடக்கும் நோக்கில் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த பாதுகாப்புக் கவசம் தான் இஸ்லாமியவாதம்.

(“பாகிஸ்தானின்ன் இஸ்லாமிய அடிப்படைவாதம்” தொடர்ந்து வாசிக்க…)

சென்னையில் சித்த மருத்துவம்

என் அப்பாவிற்கு வயது காரணம் காலில் ட்ரை ஸ்கின் பிரச்சனை வந்தது, குடும்ப மருத்துவரோ, பிண்டத் தைலம் போல ஆயுர்வேத, சித்தா எண்ணெய்கள் தடவிக்கொள்ளுங்கள், கடையில் விற்கும் மாய்ஸ்ரைச்சர்கள், க்ரீம்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் சித்தா, ஆயுர்வேத மருந்துகள் எல்லாம் நவீன மருந்துகளுக்கு மாற்று என்று போனால், அவை படு பயங்கர விலைகளில் விற்கப்படுவது அப்பொழுதுதான் தெரிகிறது.

(“சென்னையில் சித்த மருத்துவம்” தொடர்ந்து வாசிக்க…)