ஏதாவது ஒரு பிரச்சினை முடிவுக்கு வந்து அவர்களுடைய அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிடும் என்கின்ற நிலை வரும்போதெல்லாம் புதிதாக ஒன்று தோன்றி அவர்களின் அரசியலை நீடித்துக்கொண்டே போகின்றதே!
நீதியான போராட்டத்திற்கு நியாயத்தீர்ப்பு கிடைக்கும் – உடுவில் பாடசாலை மாணவர் சமூகத்திற்கு டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் ஷிரானி மில்ஸை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்லூரி மாணவிகளினால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் பாடசாலை நிர்வாகத்தால் கட்டாயப்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்தாக போராட்டத்திலீடுபட்ட மாணவர்களும் பெற்றோரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்தனர்.
Road to Nandikadal
என் நட்பு வட்டத்தில் இருக்கும் புலி ஆதரவாளர்கள் எல்லாம் என்னை ஒரு துரோகி என்று சித்தரித்துக்கொண்டு திரிவார்கள். அப்படியானவர்களுக்கான ஒரு சிறிய பதிவு. கமால் குணரட்ண தனது புத்தகத்தில் பிரபாகரனை புகழ்ந்துள்ளார் என்று புலி ஆதரவாளர்கள் அனைவரும் புகழந்து வருகிறார்கள் சிங்களவனே புகழ்ந்துள்ளான் என்று செய்திகளும் பதிவுகளும் கணக்கற்று கிடக்கிறது.
பயிரை மேய்ந்த வேலிகள்..(26)
(சர்வதேச சமூகத்தினரின் எதிர்வினைகள்.)
இப்போது விமான குண்டு வீச்சுகுள்ளான வள்ளிபுனம் பயிற்சி முகாம் மீண்டும் செஞ்சோலையாக மாற்றப்பட்டிருந்தது. கிளிநொச்சியில் இருந்த தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் செய்தியாளர் கூட்டம் ஒன்று அவசரமாக நடந்தது. அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய தலைவர் செஞ்சோலை மாணவிகள் மீதான இலங்கை விமானப்படையினர் தாக்குதல் நடாத்தியுள்ளதாக செய்தியை வெளியிட்டிருந்தார்.
தனி மனித ஒழுக்கம்
பிரபாகரன் பற்றி கமால் குணரத்தின மது மாது பழக்கம் இல்லாதவர் என எழுதியிருந்தார்.இது அவர் ஊடக தகவல்கள் மூலம் அறிந்த தகவலாக இருக்கலாம்.ஏன் அவர் உண்மையில் அப்படி வாழ்ந்திருக்கலாம்.அதற்கு காரணம் பிரபாகரனின் பண்பு அல்ல.தன்னைப்பற்றிய கவனம்.மற்றவர்கள் பற்றிய சந்தேகம்.உயிர்ப் பயம்.
பிலிப்பைன்ஸைப் பின்பற்றுகிறது இந்தோனேஷியா
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக றொட்ரிகோ டுட்டேர்ட்டே பதவியேற்றதைத் தொடர்ந்து, அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சர்ச்சைக்குரிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையான “போதைக்கெதிரான போரினால்” உந்தப்பட்டு, அந்நாட்டின் அயல்நாடான இந்தோனேஷியாவிலும், அவ்வாறான நடவடிக்கையொன்று எடுக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
(“பிலிப்பைன்ஸைப் பின்பற்றுகிறது இந்தோனேஷியா” தொடர்ந்து வாசிக்க…)
உயர்ஸ்தானிகரை தாக்க 12 பேர் சென்றுள்ளனர்? மலேஷிய அரசாங்கம்
மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்துவதற்காக, 12பேர் அடங்கிய குழுவொன்று சென்றிருந்ததாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள ‘தி ஸ்டார்’ பத்திரிகை, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும், அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, இன்று புதன்கிழமை (07) வரை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
(“உயர்ஸ்தானிகரை தாக்க 12 பேர் சென்றுள்ளனர்? மலேஷிய அரசாங்கம்” தொடர்ந்து வாசிக்க…)
பயிரை மேய்த வேலிகள்..(25)
( செஞ்சோலையாக மாறிய பயிற்சி முகாம்.)
புலிகளின் சிவில் நிர்வாகத்தின் ஓர் அங்கமாக விளங்கிய பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிலையத்தினரின் ஒத்துழைப்புடன் மகிளீர் அரசியல் துறை பொறுப்பாளரின் ஏற்பாட்டில் அவருடைய உதவியாளர்களால் கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட இம்மாணவிகள் இப்போது கொத்துக்கொத்தாக மடிந்து கிடந்தனர். பலர் கண்களுக்கு எட்டிய பக்கங்களில் எல்லாம் குற்றுயிரும் குலையுயிருமாக பெரும் காயமடைந்து ஈனக்குரலில் முனங்கிக்கொண்டிருந்தார்கள். ஏனையோர் மீண்டும் ஒரு தடவை விமானத்தாக்குதல் நடைபெறலாம் என அஞ்சி உயிரை கையில் பிடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தனர்.
சிரியப் போர்நிறுத்த ‘பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன’
சிரியாவில் போர்நிறுத்தமொன்றை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள், தோல்வியில் முடிவடைந்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக, சிரியாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பதற்கான வாய்ப்பு, இல்லாது செய்யப்பட்டுள்ளதாகக் கருப்படுகிறது.
(“சிரியப் போர்நிறுத்த ‘பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன’” தொடர்ந்து வாசிக்க…)
யாழ்ப்பாணத்தில் வருகிறது கிரிக்கெட் மைதானம்
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் புதிதாக இரண்டு கிரிக்கெட் மைதானங்களை அமைக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை, கிரிக்கெட் அதிகம் பரவியிருக்காத இலங்கையின் பகுதிகளில், கிரிக்கெட்டை வளர்ப்பதற்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. மேற்கூறப்பட்ட இரண்டு மைதானங்களும் அமைக்கப்படுவதற்கான அனுமதியை, இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுச் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. அண்மைய எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள மேற்படித் திட்டங்களுக்கு, 200 மில்லியன் ரூபாய் செலவிடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
(“யாழ்ப்பாணத்தில் வருகிறது கிரிக்கெட் மைதானம்” தொடர்ந்து வாசிக்க…)