தனி மனித ஒழுக்கம்

பிரபாகரன் பற்றி கமால் குணரத்தின மது மாது பழக்கம் இல்லாதவர் என எழுதியிருந்தார்.இது அவர் ஊடக தகவல்கள் மூலம் அறிந்த தகவலாக இருக்கலாம்.ஏன் அவர் உண்மையில் அப்படி வாழ்ந்திருக்கலாம்.அதற்கு காரணம் பிரபாகரனின் பண்பு அல்ல.தன்னைப்பற்றிய கவனம்.மற்றவர்கள் பற்றிய சந்தேகம்.உயிர்ப் பயம்.

ஆனால் புலிகள் அமைப்பு ஒழுக்கமான அமைப்பு அல்ல.அங்கே போதைப் பொருள் பாவனைகள் தாராளமாக இருந்தன.மோதல்களின் போது கஞ்சாக்கள் வழங்கப்படுவதாக சில உறுப்பினர்கள் சொல்லியுள்ளார்கள்.எனது நண்பரான நெல்லியடியின் முதல் பொறுப்பாளர் அங்கிள் எனப்படும் ரஞ்சித் கஞ்சா பாவிப்பவர்.முகாம்களில் நீலப்படங்கள் தாராளம்.எந்த அமைப்பிலும் இது இல்லை.இந்தியாவில் இருந்து திரும்பிய அன்று தினேஷ் என்று அழைக்கப்பட்ட தமிழ்ச் செல்வன் தென்மராட்சி முகாமில் நிலப்படம் முழு இரவும் கண் வெட்டாமல் பார்த்தாராம்.அதன் பின் படுத்து எழும்பிவிட்டு அண்ணை அறிந்தால் தொலைந்தது என்றாராம்.

தளபதி கிட்டு யாழ் நகரில் ஒரு திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தவர்.இது அவரின் காதலி சிந்துசா வீட்டிற்கு அடுத்டுத்த வீதிப் பெண்.அந்தப் பெண் விவாகரத்தாகி கனடாவிலேயே உள்ளார்.

புலிகளின் மது மாது தவறுகள் எப்போதுமே மக்கள் கண்டுகொள்வதில்லை.காரணம் கொன்றுவிடுவார்கள் என்ற பயம் நூறுவீதம் இருந்தது.மற்ற அமைப்புகள் இதை வைத்து வியாபாரம் பண்ணுவதில்லை.வேறு அமைப்பினராயின் புலிகள் அதை வைத்தே வியாபாரம் பண்ணுவார்கள்.

கமால்குணரத்தின வியாபார நோக்கோடு இந்த பதிவை வெளியிட்டிருக்கலாம்.அதைத் தவிர இதைச் சொல்ல வேறு எந்தக் காரணமும் தெரியவில்லை .

புலி ஆதரவாளர்களுக்கு இனிப்பான உவப்பான பதிவாக இருக்கலாம்.சிலருக்கு புலிகள் என்ற சொல் அரசியலுக்கு,சொந்த வாழ்க்கைக்கு தேவைப்படுகிறது.அதில் கமால் குணரத்தினவும் ஒருவராக இருக்கலாம்.

ஆனால் புலிகளால் ஏற்பட்ட வலிகள் வடுக்கள் என்பவை இலங்கை வாழ் மக்களால் மறக்கக்கூடியவை அல்ல.அவை சாதாரணமானவை அல்ல.

(Vijay Baskaran)