இப் போராட்ட காலத்தில் நமது ஊரைக் கேவலப்படுத்தும் விதமாக எங்கோ நடந்த கொலைச் சம்பவங்கள் எல்லாம் மந்துவிலில் கொலை, மந்துவிலில் பயங்கரம் என செய்திகள் போட்டு கேவலப்படுத்தின.இதில் மித்திரன்,வீரகேசரி முன்னணி வகித்தன. எமது ஊரவர்கள் படித்த மட்டுவில் மகாவித்தியாலயம் பல ஊர் மாணவர்களை ஒன்றாக இணைத்தது.நட்பை வளர்த்தது.இதில் கைதடியும் அடங்கும்.1969ம் ஆண்டு கைதடியில் நாடகவிழா நடந்தது. அதற்கு எமது ஊர் மாணவர்களும் போனார்கள்.அந்த நாட்களில் சைக்கிள் பலரிடம் இல்லாத காரணத்தால் பள்ளிக்கூடத்துடன் சம்பந்த மற்ற சைக்கிள் வைத்திருப்பவரகளையும் அழைத்துச் சென்றனர்.இதனால் கொஞ்சம் அதிகமான இளைஞர்கள் நாடகவிழாவுக்குப் போனார்கள்.
(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 20)” தொடர்ந்து வாசிக்க…)