நவம்பர் 19: தோழமை தினம்.

தோழர்களே நண்பர்களே உறவுகளே நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் நமது உரிமைக்காக பல்வேறு களங்களில் போராடிக் கொண்டுதான் இருக்கின்றோம். எமது தனிப்பட்ட உரிமைகளுக்கு அப்பால் நாம் சார்ந்த மக்களின் உரிமைகளுக்காக போராடுதல் முதலாவதை விட மேலானது. இதற்கு ஒரு படி மேலே போய் நாம் சார்ந்த மக்கள் என்பதைக் கடந்து உரிமை மறுக்கப்படும் அனைத்து மக்களின் உரிமைகளை நிலைநாட்ட போராடுதல் என்பது மிகவும் சிறந்தது. இந்த சர்வ தேசியப் பார்வை எமக்குள் ஏற்பட்டால் பிரிவினை வகுப்புவாதம் பிரதேசவாதம் மத மொழிப் பிரிவுகள் ஏற்பட வாய்புகள் இல்லை.

(“நவம்பர் 19: தோழமை தினம்.” தொடர்ந்து வாசிக்க…)

எதிரியைக்கண்டால் கட்சி பேதம் மறந்த போராளிகள்

மூத்தவன் புளட்டில
நடுவிலான் டெலோவிலே
கடை குட்டி புலியில் என்று பெருமை பட்ட தாய்மார்
அயல்வீட்டு என்ஜினியர் மகன் ஈபிஆர்எவ்
முன்வீட்டு வாத்தியார் மகன் ஈரோஸ்

என்று இறுமாந்திருந்தோம்.

கோட்டையில் சைரன் ஊதி அனைவரையும் காத்த புளொட்
ஆண்களும் பெண்களுமாய் செங்கொடிகள் கட்டிய அழகிய ஈபிஆர்எல்எ வ்

அறிவாளிகள் என்று போற்றப்பட்ட ஈரோஸ்

வீரத்துடன் திகழ்ந்த ரெலோஸ்டுகள்
கட்டுக்கோப்பான ஒழுக்கமான வீரர்களாய் திகழ்ந்த புலிகள்
அழகான அந்த நாட்கள்
எதிரியைக்கண்டால் கட்சி பேதம் மறந்த போராளிகள்
விஷம் எங்கிருந்து வந்தது? தான் பெரிது என்று எண்ணாமல் தமிழ் ஈழம் தமிழ் மக்கள் பெரிது என்று சம்மந்தப்பட்டவர்கள் எண்ணி இருந்தால் நிச்சாயமாக தமிழர்கள் நாம் இன்று நடு றோட்டில் நின்றிருக்கமாட்டோம்.

நண்பரின் பதிவில் இருந்து….

 

 

நாபா என்ற மானிடன்

அந்த மனிதர் மிக மிக எளிமையானவர். மனித குலத்தின் மகத்தான லட்சியங்களை கனவுகளில் நிறைத்தவர்.
அந்த கனவுகள் நபாவை மானிடவிடிவு என்னும் மகத்தான தேடலுடன் ஒன்றுரை தசாப்தங்கள் அலைய வைத்தது.
எளிமையும் ,சமூக மாற்றம் கருதிய பேரார்வமும்- சர்வதேச சகோதரத்துவமும் நபாவின் நெஞ்சில் நிரம்பி வழிந்தன.
மாபெரும் தலைவர் மாத்திரமல்ல . மனிதர்களின் சின்ன சின்ன விடயங்களையும் புரிந்து கொண்ட மானிடன்.
(“நாபா என்ற மானிடன்” தொடர்ந்து வாசிக்க…)

19/11/2017 ஆகிய இன்று தோழமை தினம்

திருகோணமலை தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி காரியாலயத்தில் தோழர் பத்மநாபாவின் 66வது பிறந்த தின அனுஷ்டிப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு, தோழர் நாபாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து கட்சி செயலாளரான சத்தியன் மற்றும் கட்சி உறுப்பினர்களான சந்திரன், விபு ஆகியோரின் உரையைத் தொடர்ந்து மதியவேளைக்கான உணவும் வழங்கப்பட்டது.

‘சர்வேஸ்வரனின் மனோநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்’

“என்னைப் பொறுத்தவரையில் தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் புறக்கணிப்பது எமது மக்கள் யாவரையும் புறக்கணிப்பது போலாகும்” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.   மேலும், முதலில் தேசியக் கொடியை நிராகரித்தவரின் மனோநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.   வட மாகாண கல்வி அமைச்சர் தேசியக் கொடியை ஏற்ற மறுத்தமை பற்றி உங்கள் கருத்து என்ன? வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“‘சர்வேஸ்வரனின் மனோநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)

‘தேசியக்கொடியை ஏந்திய சம்பந்தனுக்குக் காட்டிய நல்லெண்ணம் என்ன?’

தேசிய கொடியை தூக்க மறுத்த வடமாகாணசபை அமைச்சரை கண்டிப்போம். ஆனால், இன்று இந்த அமைச்சர் தேசிய கொடியை தூக்கவில்லை என்பதில் குறை காணும் தென்னிலங்கை தீவிரவாதிகள், அன்று தேசியக்கொடியை தூக்கிய சம்பந்தனுக்கு காட்டிய நல்லெண்ணம் என்ன என்று” ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் வினவியுள்ளார்.

(“‘தேசியக்கொடியை ஏந்திய சம்பந்தனுக்குக் காட்டிய நல்லெண்ணம் என்ன?’” தொடர்ந்து வாசிக்க…)

நவம்பர் 19 நாபா பிறந்த தின நினைவுகள்!

பிறப்பும் இறப்பும் எம் கையில் இல்லை என்றாலும் வாழ்தல் நாம் வகுத்துக்கொள்ளும் வழிமுறையில் செல்கிறது. சுயநலம், உறவுகள் நலம், பொதுநலம் என்ற தெரிவும் எமதே. அடிப்படையில் நாம் சுயநலம் கொண்டவராக ஆரம்பித்து உறவுகளின் கலப்பில் அவர் சார்ந்த நலம் பேணும் நிலைக்கு ஆட்பட்டு பின்பு சமூகப் பாதிப்பில் தான் பொதுநலம் பற்றிய சிந்தனையில் ஈடுபடுகிறோம். அதில் ஓரளவு எமது பங்களிப்பை செய்தாலும் சுயநலமும் உறவுகள் நலமும் முன்னிலைப்ப டுதல் யதார்த்தம்.

(“நவம்பர் 19 நாபா பிறந்த தின நினைவுகள்!” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் பத்மநாபா அவர்களின் பிறந்த தினமாகிய 19.11.2017 உலக தோழமை தினம்.

தோழர் பத்மநாபா அவர்களின் பிறந்த தினமாகிய 19.11.2017 அன்றைய நாளை உலக தோழமை தினமாக கொண்டாடி வருகிறோம்.
ஈழத்தில் ஆய்தப்போராட்டம் முனைப்பு பெற்றபோது தோழர் நாபா அவர்கள் ஆய்தக் கலாச்சாரத்தில் உடனடியாக இறங்கவில்லை. போராட்டத்திற்கான நியாயத்தன்மைகளை மக்களிடம் எடுத்துச் சென்றார்.எமது ஈழப்பிரதேசத்தின் எல்லை எங்கும் மக்களைச் சந்திதார். இதனைவிட தெற்கிலும் சிங்கள முற்போக்கு சக்திகளிடமும் சென்றார் அவர்களை அணிதிரட்டினார். அவர்களோடும் கைகோர்த்தார். அவர்ன் தீர்க்கதரிசனத்தை இன்று எம்மால் உணரமுடிகிறது. இலங்கையின் பெரும்பான்மை மக்களாகிய சிங்கள மக்களை அணுகுவதைத் தவிர்த்து ஒரு துரும்பையேனும் நகர்த்த முடியாது என்பதை அப்போதே உணர்ந்துகொண்டார். (“தோழர் பத்மநாபா அவர்களின் பிறந்த தினமாகிய 19.11.2017 உலக தோழமை தினம்.” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் அமரர் க. பத்மநாபா பிறந்த தினம் 19.11.2017

19.11.2017 இன்று தோழர் பத்மநாபாவின் 66 வது பிறந்த தினம். தோழர் பத்மநாபா 1951 ம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ம் திகதி பிறந்தார், அவர் பாசிச்டுக்களினால் படுகொலை செய்யப்பட்டபோது அவருக்கு வயது 39 மாத்திரமே. அவர் வாழ்ந்த குறுகிய காலத்தில் அவர் சந்தித்த மனிதர்களிடம் அவர் ஏற்படுத்திய தாக்கம், எமது மக்களின் நியாயமான, உரிமைகளுக்காக தீர்க்கதரிசனத்துடன் அவர் வகுத்துக்கொண்ட அணுகுமுறைகள், வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் என்பது படிப்படியாக வெளிச்சத்துக்குவந்து கொண்டிருக்கின்றது.

(“தோழர் அமரர் க. பத்மநாபா பிறந்த தினம் 19.11.2017” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர்கள் சொந்த நிலங்கள் பறிபோகுதென்று கூக்குரலிடுகையிலெல்லாம்….

தமிழர்கள் சொந்த நிலங்கள் பறிபோகுதென்று கூக்குரலிடுகையிலெல்லாம் சில வேளைகளில் எனக்கேற்படும் சிந்தனையென்னவென்றால்…. அன்று ஈழத்தமிழர்களை எல்லைப்புறங்களில் சென்று குடியேறும்படி அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணியினர் அழைப்பு விடுத்தார்கள். எத்தனைபேர் சென்றார்கள்? சென்ற இளைஞர்கள் சிலரும் நுளம்புக்கடி தாங்காமல் ஓடி வந்து விட்டார்கள். பின்னர் வந்தவர்கள் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட மலையகத்தமிழர்கள். அவர்கள் பலிக்கடாக்களாக்கப்பட்டார்கள்.

(“தமிழர்கள் சொந்த நிலங்கள் பறிபோகுதென்று கூக்குரலிடுகையிலெல்லாம்….” தொடர்ந்து வாசிக்க…)