புலிகள் அமெரிக்காவுக்கு கடன்பட்டுள்ளனர் – சர்ச்சையை ஏற்படுத்தும் புதிய புத்தகம்

புலிகள் அமெரிக்காவுக்கு கடன்பட்டுள்ளனர் என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பு 2009 ஆம் ஆண்டு முற்றாக அழிக்கப்பட்டதால், அமெரிக்காவின் எதிர்பார்ப்பு முற்றாக சிதைந்து போனதாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சித்து, அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் ஓய்வுபெற்ற அரசியல் ஆலோசகரான தயா கமகே என்ற முன்னாள் சிங்கள அதிகாரி இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

(“புலிகள் அமெரிக்காவுக்கு கடன்பட்டுள்ளனர் – சர்ச்சையை ஏற்படுத்தும் புதிய புத்தகம்” தொடர்ந்து வாசிக்க…)

“பணிவு” : உலகின் ஆகப் பெரிய கெட்டவார்த்தை

மோடி அரசின் நடவடிக்கைகளைப் பற்றி விமர்சிக்கும்போதெல்லாம் நான் ஒன்றைச் சொல்லி வருவதை நண்பர்கள் கவனித்திருக்கலாம். அது:

“அரசு மக்கள் மீது தன் இருப்பை மேலும் மேலும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது.”

அரசு ஒரு மிகப்பெரிய சுமையாக நம் மீது அமர்ந்திருப்பது மட்டுமல்ல, அரசை மறந்து நீங்கள் ஒரு கணமும் இருக்க இயலாது எனும் நிலையை மோடியின் ஆளுகை உச்சபட்சமாக நிலை நிறுத்துகிறது.

(““பணிவு” : உலகின் ஆகப் பெரிய கெட்டவார்த்தை” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 90)

இந்திய இராணுவ வருகையின் பின்பு மக்களின் வாழ்வு இயல்பு நிலைக்கு திரும்பியது.பல கிழக்குமாகாண மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பினார்கள்.இவர்களில் சிலர் திரும்பி போவதற்கு பணமின்றி பற்குணத்திடம் உதவி கோரினார்கள்.தன்னால் முடிந்தவரை உதவினார்.

(“பற்குணம் A.F.C (பகுதி 90)” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளுள்ள புதர்களின் மத்தியில் (அத்தியாயம் 3)

(அக்கினி ஞானாஸ்ஞானம்)

வலிகாமத்திலிருந்து வந்த மக்களின் தொகை அதிகரிக்க அதிகரிக்க எமது நிறுவனமும் தனது பணியாட்களின் தொகையை உயர்த்த வேண்டியிருந்தது. பதவி வெற்றிடங்களை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி விண்ணப்பதாரிகளின் சுயவிபரக் கோவைகளைப் பரிசிலீத்து நேர்முகப்பரீட்சை நடாத்தி பணியாட்களை தெரிவு செய்ய நீண்ட நாட்கள் எடுக்கும். எனவே எனக்கு தெரிந்தவர்கள் மூலம் சிலரை நேர்முகப்பரீட்சைக்கு அழைத்திருந்தேன். 8 வெற்றிடங்கட்கு 20 பேர் நேர்முகப் பரீட்சைக்கு சமூகம் அளித்திருந்தனர்.

(“முள்ளுள்ள புதர்களின் மத்தியில் (அத்தியாயம் 3)” தொடர்ந்து வாசிக்க…)

ஜெயலலிதா இல்லாத தமிழகமும் இலங்கையும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் கடந்த ஐந்தாம் திகதி மரணமடைந்ததை அடுத்து, தமிழக அரசியலில் ஒருவித நிலையற்ற தன்மை தென்படுகிறது. புதிய முதலமைச்சராக ஜெயலலிதாவின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான ஓ. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டாலும், ஜெயலலிதா வகித்த அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு யார் நியமிக்கப்படப் போகிறார் என்பதைத் தமிழகத்தில், சகல அரசியல் கட்சிகளும் கூர்ந்து கவனித்து வருகின்றன. (“ஜெயலலிதா இல்லாத தமிழகமும் இலங்கையும்” தொடர்ந்து வாசிக்க…)

ரவிராஜ் எம்.பி படுகொலை வழக்கு: அவலக்குரலை மறைத்த ஆனந்தக் கண்ணீர்

(அழகன் கனகராஜ், பேரின்பராஜா திபான்)

தமிழர்கள் மட்டுமன்றி, பெரும்பான்மை இனத்தவர்களும், ஏன் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் சர்வதேசமுமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிரான நடராஜா ரவிராஜ், படுகொலை வழக்கின் தீர்ப்பு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை(24) அதிகாலை 12:20க்கு வழங்கப்பட்டது யாவரும் அறிந்த விடயமாகும்.

(“ரவிராஜ் எம்.பி படுகொலை வழக்கு: அவலக்குரலை மறைத்த ஆனந்தக் கண்ணீர்” தொடர்ந்து வாசிக்க…)

மாலை 4:30முதல் காலை 8.30 வரை விமானங்கள் பறக்கும்

கட்டுநாயக்க, பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான நிலைய ஓடுபாதையின் திருத்தப் பணிகள், ஜனவரி மாதம் 6ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரை 28 நாட்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்தக் காலப்பகுதியில் விமான நிலையத்தின் ஊடான சர்வதேச விமான பயணங்கள், மாலை 4.30இல் இருந்து அடுத்த நாள் காலை 8.30 வரை இடம்பெறவுள்ளது. உள்நாட்டு விமான பயணங்கள் இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக இடம்பெறும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

(“மாலை 4:30முதல் காலை 8.30 வரை விமானங்கள் பறக்கும்” தொடர்ந்து வாசிக்க…)

மோடியும், டாக்ஸி ட்ரைவரும்

நேற்று உயிர்மை பதிப்பக விழாவிற்காகச் சென்னைக்குப் போயிருந்தேன். மதிய நேரம் என் மகள் வீட்டுக்குப் போய்விட்டு, மாம்பலத்தில் உள்ள லாட்ஜுக்குத் திரும்பிட, ஊபர் கேப்ஸ் மூலம் கார் பதிவு செய்தேன். வந்த காரில் ஏறினேன். 40 வயது மதிக்கத்தக்க டிரைவர் என்னிடம் சொன்னார். ‘’ சார் தயவுசெய்து Paytime-இல் புக் பண்ணாதீங்க. எல்லாரும் அப்படித்தான் செய்யுறாங்க. வண்டிக்குப் பெட்ரோல் போடணும் . தயவுசெய்து பணமாகத் தாங்க” என்று கெஞ்சினார்.

(“மோடியும், டாக்ஸி ட்ரைவரும்” தொடர்ந்து வாசிக்க…)

அரசும்….! மதமும்….!!

கிறிஸ்தவக் கன்னியர் மடத்தில்தான் ஆரம்பம் முதல் படித்தேன்.. அந்த நாட்களில் ஓரிருவரைத் தவிர எல்லாக் கன்னியாஸ்திரிகளுமே மதவெறி ..சாதிவெறி…பணக்காரப்பிள்ளைகள் மீது மோகம் என்பவற்றில் மூழ்கியிருந்தார்கள்..இவர்களோடும் போராடித்தான் என் படிப்புக்காலம் கழிந்தது. என் போராட்டக் குணம் அவர்களுக்கு எள்ளளவும் பிடிக்கவில்லை..கூடிக்கூடி என்னைப்பற்றியே பேசினார்கள் …பலவிதத்தில் என்னை இம்சையும் செய்தார்கள்.. நான் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்ததால் தொடர்ந்து அவர்களோடு படிக்க முடிந்தது.

(“அரசும்….! மதமும்….!!” தொடர்ந்து வாசிக்க…)

இரு ஆளுமைகள்… சில நினைவலைகள்!

(சசிகுமார்)

தமிழ்நாட்டின் வடக்குக் கடலோரப் பகுதியில் சமீபத்தில் வீசிய ‘வார்தா’ புயல், ‘எனக்குப் பிறகு பெரிய பிரளயம்தான்’ என்ற பழமொழியை நினைவுபடுத்தியது. ஜெயலலிதாவின் மறைவுடன் அதை ஒப்பிடத் தோன்றியது. தமிழக அரசியல் இப்போது புதிய சூழலுக்கு மாறிக்கொண்டிருக்கிறது.

(“இரு ஆளுமைகள்… சில நினைவலைகள்!” தொடர்ந்து வாசிக்க…)