ஓரு தேசம்…

எதுவானாலும் இந்தியாவின் முதல் தளபதிக்கு இந்த நிலை பெரும் துயரை தந்திருக்கிறது. சதி செயல் என்றால் இதன் பின்னணியில் மிக தந்திரோபாயமான காய் நகர்த்தல் இருக்கிறது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆக வேண்டி இருக்கிறது.

கோவை அருகே இந்திய விமானப் படை தளத்திற்கு சொந்தமான சூலூர் விமானப் படை பயிற்சி பள்ளியின் தளத்தில் இருந்து இந்த Mi 17 ரக ஹெலிகாப்டர் மூலம் 11:45 மணிக்கு குன்னூருக்கு புறப்பட்டு சென்று இருக்கிறார்கள் இந்திய தலைமை தளபதி தனது துணைவியார்…

மற்றும் சக இராணுவ அதிகாரிகள் புடை சூழ…..

இந்த ரக ஹெலிகாப்டரை இயக்க எப்பொழுதும் மூன்று பேர் இருப்பார்கள்….. விமானங்களை இயக்க இரண்டு விமானிகள் போல இதிலும் இரண்டு விமானிகள்…. மற்றும் அதிகப்படியாக இஞ்சினியர் ஒருவர் மூன்றாவது நபராக செயல்படுவது வழக்கமான ஒரு நடைமுறை தான்.

வெலிங்டனில் உரை நிகழ்த்துவதற்காக வந்திருந்த இவர், …..

அங்கு நடைபெற இருந்த சிறிய அரங்கம் ஒன்றில் 2:45 மணிக்கு பேச இருந்தார்.

ஹெலிகாப்டர் 12:23 மணி சுமாருக்கு குன்னூருக்கு வெகு அருகாமையில் விபத்தை சந்தித்து இருக்கிறது….

விபத்து நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு மிகவும் அபாயகரமான முறையில் குறைந்த உயரத்தில் பறந்ததாக நேரில் பார்த்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

அந்த சிறிய மலை முகடுகளில் மிகவும் தாழ பறந்த நிலையில்….

அங்கிருந்த உயரமான மரங்களில் சிக்கி….

உராய்ந்து சென்று……

மோதி விழுந்திருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் வரை அந்த பகுதியை யாரும் அடைந்திருக்கவில்லை……. காரணம் ஹெலிகாப்டரின் வெடி சத்தம். அருகில் இருந்தது சிறிய கிராமம் என்பதால் மக்கள் பதைபதைக்க அங்கிருந்து வெளியேறி இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட இந்த நிமிடங்களில்…..

மருத்துவ உலகம் சொல்லும் கோல்டன் ஹவரில் அங்கு யாரும் உதவி செய்ய அருகில் இல்லை.

இத்தனைக்கும் விபத்து நடந்த நஞ்சப்ப சத்திரம் எனும் பெயர் கொண்ட இந்த கிராமம் குன்னூரில் இருந்து ஐந்து நிமிட பறத்தல் தொலைவில் தான் இருக்கிறது..

வெடி ஓசை ஏற்படுத்தின பயம் போக….. தீ குறைந்த சமயம் அங்கிருந்தவர்கள் அருகில் சென்று பார்க்க…. ஹெலிகாப்டரில் பயணம் செய்த சிலரின் கூக்குரல்…. அந்த தீயிலும் சிலர் மற்றவர்களை காப்பற்ற செய்த செயல்….

இதனை நேரில் பார்த்த அந்த கிராம வாசிகளின் வாய் வார்த்தையாக கேட்கும் பொழுது நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது.

மலை சரிவு என்பதால்…. உடல்கள் நூறு மீட்டர் தொலைவிற்கு ஆங்காங்கே சிதறி கிடக்கிறது என்கிறார்கள்.

விபத்தா……

சதி வலையின் சூழ்ச்சியா….. எனும் அளவிலான விவாதம் எழுவது தவிர்க்க முடியாத ஒன்று.

காரணம் இந்திய ஆட்சி பொறுப்பில் இருந்தவர்களின் கடந்த கால பராக்கிரமம் அத்தகையது.

சமூக வலைதளங்களில் சிலர் இஸ்லாமிய பெயர் கொண்டவர் இந்த செய்தியை கேட்டு சிரிப்பு ஸ்மைலி போடுவதாக…… ஸ்கிரீன் ஷாட் எடுத்து போடுவது எல்லாம் ப்ரோனோகிராபி தளத்தின் நிரந்தர வாடிக்கையாளர்களாக இருக்கக் கூடும்…..

எச்சரிக்கை அவசியம்.

சதி செயல் என்றால் வெகு நிச்சயமாக அது நமது சித்திர குள்ளர்களாக தான் இருக்க வேண்டும் என்பதல்ல…. அதனையும் நன்கு நினைவில் கொள்ளுங்கள்.

ஏனெனில் நாம் முன்பே பார்த்தது போல அரபிக் கடலில் பறக்கும்…..

அல்லது பறந்த நமது விமானப் படை விமானங்களான ரஷ்ய தயாரிப்பு மிக் 29 வரிசையாக விபத்துகளை சந்தித்த போது அதன் பிரதான காரணமாக இருந்தது எல்லாம் உயரக் குறைபாடு தான்.

சரியாக சொன்னால் பறக்கும் உயரத்திற்கும்……..

ரேடார் சிஸ்டத்தின் அடிப்படையில் திரையில் காட்டும் உயரத்திற்கும் மிக பெரிய வித்தியாசம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது உள்ள சீதோஷ்ண நிலையில் குன்னூர் பகுதியில் அடர்த்தி குறைந்த அதேசமயம் பார்வையை மறைக்கும் அளவிற்கு பனி மூட்டம் இருந்திருக்கிறது. வரும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் ஓரளவுக்கு அனுமானம் செய்ய முடிகிறது.

தற்போது இந்த பிராந்தியத்தை சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவு வரை முதல் அடுக்கு….

அடுத்தடுத்ததாக இரண்டு கிலோமீட்டர் தொலைவு என மூன்று அடுக்குகளை ஏற்படுத்தி தீவிர கண்காணிப்பில் எடுத்து இருக்கிறார்கள் நம் இந்திய அரசின் புலனாய்வு நிர்வாகம்.

களத்தில் நம் ராணுவமும் இறங்கி இருக்கிறது.

நூல் பிடித்தார் போல் சென்றால்….

அது ஒரு வேளை மேற்கு உலக நாடுகளில் ஏதேனும் ஒன்று சிக்கினாலும் ருத்ர தாண்டவம் ஆட காத்துக் கொண்டு இருக்கிறார்கள்…..

சாதாரண காலத்திலேயே….. இந்திய பாகிஸ்தான் எல்லையில் அபிநந்தன் மாட்டிக் கொண்ட சமயத்தில் அடித்து துவம்சம் செய்து விட இருந்தனர் என்பதை …. நம்மவர்களின் வீர்யத்தை அருகில் இருந்து பார்த்தவர்கள் அவர்கள்…..

அடி எப்படி இருக்கும் என்பதை யூகிக்க கூட சமயம் கொடுக்க மாட்டார்கள்

இந்த முறை……

நடந்திருக்கும் கொடூரம் அத்தகையது…..

அத்தனை சுலபத்தில் நம்மவர்கள் விட்டு விட மாட்டார்கள்.

யூகிக்கும் விஷயம் சரியானது என்றால் உலக அரங்கில் போர் இல்லாத காலத்தில் அதன் தளபதியை தூக்கும் செயலை செய்ய நினைப்பவர்கள் யார் என்பதை உலக அரசியல் பார்வையாளர்கள் மிக நன்றாகவே உணர்ந்து இருப்பார்கள்.

இப்படி செயலாற்றவே வரம் பெற்று வந்தவர்களாகவே நினைத்து கொண்டு இருப்பவர்களுக்கு இந்தியா வெகு நிச்சயமாக பாடம் கற்பிக்கும்.

அந்த பாடம் உலக வரைபடத்தையே நாளை மாற்றக்கூடியதாக இருக்கும்.

அநேகமாக இந்திய அரசு சின்னமான அசோக சக்கரத்தில் மேல் நிற்கும் நம் பார்வைக்கு தெரியும் மூன்று சிங்கத்தின் மறுபுறத்தில் இருந்து வெளிப்படும் கர்ஜனை தற்போது முதலே அவர்களுக்கு கேட்க ஆரம்பித்து இருக்க வேண்டும்.

பார்க்கலாம்……

பார்க்கலாம்…

என்ன…….

எவராக இருந்தாலும் சரி ஒரு கை பார்த்து விடலாம் இந்த முறை. கடந்த காலத்தில் கட்டம் கட்டி கொன்றது போல் நினைத்திருந்தது உண்மையானால்………

முகநூல் பதிவு…