தமிழக முதல்வருக்கு வாழ்த்தும் நன்றியும்

மறு வாழ்வு முகாம்களில் உள்ள மக்களை நெருக்கமாக சந்தித்த முதலாவது முதலமைச்சர் எனும் பெருமையையும் பெறுகிறார் முதல்வர்.முகாம்கள் எந்த நிலமையில் உள்ளன என்பதையும் நேரடியாக கண்டிருக்கிறார்,அந்த மக்களுடன் உரையாடியிருக்கிறார். அவர்கள் தேவைகள் எவை என கண்டறியப் பட்டிருக்கிறது .அவற்றை நிறைவு செய்யும் பணி தொடங்கப் பட்டிருக்கிறது.

தமிழக முதல்வருக்கு வாழ்த்தும் நன்றியும். அத்தோடு ஒரு கோரிக்கை ஈழத் தமிழர்களுக்கான சிறப்பு முகாம்கள் என்பது நீக்கப் பட்டு அவர்களும் ஏனையவர்கள் போல சுதந்திரமான சூழ் நிலையை விரைந்து செய்ய வேண்டும் .

அந்த மக்களின் வாழ்வு மேம்பாடு,கல்வி,வேலை வாய்ப்பு,பொருளாதார மீட்சி என எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவதாக உள்ளது முதல்வரின் திட்டமிடப்பட்ட பணிகள்.

கடல் என்பது ஒரு கோடுதான் ஆனால் மனம் என்பது அந்த கோடுகளை தாண்டியதாய் உள்ளது.

நிகழ்வில் முதல்வர் அவர்கள் உரையாற்றும் போது உங்களுக்கு நான் இருக்கிறேன் எனும் நம்பிக்கை வார்த்தைகளால் புதிய தொடக்கமாக சொல்லின் செயலாய் வடிவம் கொண்டுள்ளது.

மீண்டும் வாழ்த்துகள்

(Balasingam Sugumar)