பொகவந்தலாவையில் பதற்றம்

பொகவந்தலா​வை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவை லொய்னோன், நோத்கோ, லின்போட், ஆகிய தோட்டங்களைச் ​சேர்ந்த தொழிலாளர்களை நாளொன்றுக்கு 18 கிலோகிலோகிராம் பச்சை தேயிலை கொழுந்தினை பறிக்குமாறு தோட்ட நிர்வாகங்கள் வலியுறுத்தி வருகின்றன.

அதனை கண்டித்து, லொய்னோன் தோட்டத் தேயிலை தொழிற்சாலையின் முன்பாக தொழிலாளர்கள், இன்றுக்காலை ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதனையடுத்தே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கொட்டகலை சி.எல்.எப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, மேற்கண்ட தீர்மானம், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலை​மையில் எடுக்கப்பட்டதென தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனினும், அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த தோட்ட தலைவர்மார்கள், தலைவிமார்கள், தாங்களும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தோம். அவ்வாறான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை என்று பதிலளித்தனர்.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. அதனையடுத்து அங்கு பதற்றமான நிலைமை​யொன்று ஏற்பட்டது.