இத்தியடி சந்தி

எமது ஊரில் நிறைய வீதிகளின் சந்திப்பு காணப்பட்டாலும் முக்கிய பிரபல்யமான சந்தி இத்தியடி சந்தியாகும்! மின்சார இணைப்பு எம் ஊருக்கு ஏற்படுத்து முன்பு இருந்த நிலையினை இங்கு முதலில் பார்க்கலாம். நடுவே ஒரு இத்திமரம், தெற்கே மலைவேம்பு, மேற்கே நிழல் வாகைமரமும்,வடபுறம் நிழல்வாகையும் இத்திமரமும் ஓங்கி படர்ந்து வளர்ந்து நல்லதொரு அருமையான அழகான சூழலினை அமைதியானவகையாக தந்து கொண்டிருந்தன.

மணலூர் மணியம்மாள்

திராவிட இயக்கம் பார்ப்பனர்களின் சூழ்ச்சி குறித்து தமிழகத்தில் வன்மையான பரப்புரைகளை மேற்கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் தஞ்சைப்பகுதியில் ஒரு பார்ப்பனப் பெண்மணி தனது உடைமைகளையெல்லாம் தாழ்த்தப் பட்டோருக்கு பகிர்ந்தளித்து சாதித் தீண்டாமைக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தினார். அவர்தான் மணலூர் மணியம்மாள்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிக அனுமதி: மீண்டும் திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு

தூத்துக்குடி: ஒக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார்?

(என்.கே. அஷோக்பரன்)

தற்போதைய நிலையில், இலங்கையில் எந்தவொரு மாகாண சபையும் இயங்கும் நிலையில் இல்லை. 2019 ஒக்டோபர் எட்டாம் திகதி, ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததோடு, இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளும் இயங்கா நிலையை அடைந்தன.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஆபத்தானவை

ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஆபத்தானவை; அவதானமாக இருங்கள்!

கண்முன்னே நின்று, சண்டைப்போடுபவர்களை விடவும் பின்னால் நின்று முதுகில் குத்துவோர் தொடர்பில் கவனமாக இருக்கவேண்டுமென்பர். ஆனால், கண்களுக்கே தெரியாமல், உலகையே ஆட்டிப் படைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸைக் கண்டுகொள்ளாமல் அசட்டையாக இருந்தமையால், வீட்டுக்குள்ளே முடங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

கையேந்துவதை விட இருப்பதை காப்போம்

கையேந்துவதை விட இருக்கும் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைக் காப்போம். சிறுபான்மையினரின் பூரண ஒத்துழைப்பின்றி, பெரும்பான்மை இன மக்களின் அமோக விருப்பத்துடன் இந்த அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறியிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாகப் பதவிப்பிமாணம் செய்ததன் பின்னர், நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையிலேயே அது தெட்டத்தெளிவானது.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் இந்த மாதம் 30ஆம் திகதி வரை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் மேல் மற்றும் வடமேல் மாகாண பாடசாலைகளை மாத்திரம் தற்காலிகமாக மூடுவதற்கு கல்வி அமைச்சு அறிவித்திருந்த நிலையில், இன்று சகல பாடசாலைகளையும் மூட நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை, சகல தனியார் வகுப்புகளுக்கும் தடை ​விதிக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் படித்த, கட்டாயம் பகிர வேண்டிய ஒன்று

கடந்த சில நாட்களா டிவி, சமூக வலைத்தளம்னு எங்க பார்த்தாலும் எப்போ பார்த்தாலும் பிரேக்கிங் நியூஸ் போட்டு போட்டு, கொரோனானு சொல்லி சொல்லி மக்கள் மனசுல அச்சமும்,எதிர்மறை எண்ணங்களும் நிரம்பி வழியுற இந்த நேரத்துல இந்த பதிவு கொஞ்சம் நேர்மறை எண்ணங்களை விதைக்கும்னு நம்புறேன்.
கடந்த வாரம்,புது டெல்லியில்,தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம்(CEGR),,உச்சி மாநாடு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

வாபஸ் பெறுவதற்கான படிமுறைகள் ஆரம்பித்தன

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறுவதின் திட்டமிடப்பட்டதன் அங்கமொன்றாக உள்ளூர் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாக, ஆப்கானிஸ்தானிலுள்ள வெளிநாட்டு இராணுவப் படைகளின் தளபதியான, ஐக்கிய அமெரிக்க இராணுவ ஜெனரல் ஸ்கொட் மில்லர் நேற்று தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தான் படைகளிடம் படிப்படியாக வெளிநாட்டு இராணுவத் தளங்கள் கையளிக்கப்படுமென மில்லர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கு தங்களது அனைத்துப் படைகளும் தயாராவதாகவும், உத்தியோகபூர்வமான குறிப்பிட்ட திகதி மே மாதம் முதலாம் திகதி என மில்லர் தெரிவித்துள்ளார்.

3 ஒஸ்கார் விருதுகளை அள்ளிய ’ நோ மேட்லாண்ட்’

க்ரோய் சாவ் எனும் சீனப் பெண்ணின் இயக்கத்தில் உருவான நோ மேட்லாண்ட் எனும் திரைப்படத்துக்கு 93ஆவது ஒஸ்கார் விழாவில் 3 விருதுகள் கிடைத்துள்ளன. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெறும் ஒஸ்கார் விருது விழாவி​லேயே இந்த விருதுககள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய, சிறந்த படத்துக்கான விருதை சுவீகரித்த இந்த திரைப்படம், சிறந்த நாயகிக்கான விருதையும் சிறந்த இயக்குனருக்குமான விருதையும் சுவிகரித்துள்ளது.