சமீபத்தில் படித்த, கட்டாயம் பகிர வேண்டிய ஒன்று


CEGR — Center for Education Growth and Research National Council
மேதகு கேரள மாநில ஆளுநர்,National Board of Accreditation தலைவர்,AICTE அதிகாரிகள்,பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள்,துணை வேந்தர்கள்,முக்கிய தொழிலதிபர்கள் என பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில்,கடந்த பத்தாண்டுகளாக கல்வித்துறையில் பல முயற்சிகளை செய்த,நம் தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் V தாமோதரன் அவர்களுக்கு,2021 ஆம் ஆண்டின் தேசிய கல்வியாளருக்கான விருதை, CEGR வழங்கியது.

யார் இந்த டாக்டர் V தாமோதரன் ??
கடந்த 2011 ஆம் ஆண்டு,சர்வதேச பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர் பேரவையை (IPTSA) தொடங்குகிறார்.
IPTSA- International Parents Teachers Students Assembly
மாணவர்கள் மனதில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தவும்,கல்வியின் தாக்கத்தை ஏற்படுத்தவும்,கல்வியில் தரமான மாணவர்களை உருவாக்கிட இப்பேரவை செயல்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இப்பேரவையின் கல்வி சேவை மூலம், கிட்டத்தட்ட 20 லட்சம் மாணவர்கள்,30 லட்சம் பெற்றோர்கள்,1 லட்சம் ஆசிரியர்கள் இந்தியா முழுவதும் பயனைடைந்துள்ளனர்.
சரி,தாமோதரன் இப்பேரவையை ஆரம்பிக்க யார் காரணம் தெரியுமா ???
மறைந்த முன்னாள் ஜனாதிபதி மேதகு APJ அப்துல்கலாம் அய்யா அவர்கள்.
APJ அப்துல்கலாம் அவர்கள், கோயம்பத்தூரில்,ஒன்றரை லட்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
அவர் வரும் விமானம் தாமதமானதால்,நிகழ்ச்சி அமைப்பாளர்கள்,தாமோதரனிடம் மிமிகிரி செய்ய அழைப்புவிடுத்தனர்.
தாமோதரனும் கிட்டத்தட்ட 2 மணிநேரத்துக்கும் மேலாக அப்துல்கலாம் அவர்கள் வரும் வரை மிமிகிரி செய்து அசத்தினார்.
மிமிகிரி மட்டுமில்லாமல் தன்னுடைய மிமிகிரி திறமையை வெளிக் கொண்டுவந்தது தனது ஆசிரியை ராதாபாய் என்று உணர்வுப்பூரமாக கூற,மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள் என அனைவரும் நெகிழ்ச்சியடைந்தனர்.
நிகழ்ச்சிக்கு அப்துல்கலாம் அவர்கள் வந்ததும்,அவரின் டீம் தாமோதரனை அழைத்துச் சென்று அவரின் அருகில் அமரவைத்தது.
“எப்படி உன்னால மூணுமணிநேரம் Non-stop ப்ரோக்ராம் பண்ணமுடிஞ்சது” என்றார் கலாம்.
“சார்,மிமிகிரி எனக்கு ஈஸியா வரும்,அதான் மூணு மணி நேரம் மிமிகிரி பண்ணிட்டு எனக்கு தெரிஞ்சத ஷேர் பண்ணேன்” என்றார் தாமோதரன்.
“இல்ல உன்னால மூணு மணிநேரம் ப்ரோக்ராம் பண்ணமுடியுதுனா,நீ students kingdom-க்கு தேவைப்படுற,நீ வந்துடு,Why dont you travel towards students kingdom ?? ” என்று கலாம் அய்யா விதைதான், தாமோதரன்,சர்வதேச பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர் பேரவை தொடங்க காரணமாக இருந்தது.
அந்த விதையின் விருட்சம் தான் இன்று பல லட்ச மாணவர்கள், ஆசிரியர்கள், பயனடைத்துள்ளார்கள்.
தாமோதரனின், ராதாபாய் ஆசிரியையால்தான் அவரின் திறமை வெளிவந்தது.
1970 ஆம் ஆண்டு,ராதாபாய் அவர்கள்,சுதந்திர நாள் அன்று முதல்முதலாக மேடை ஏற்றினார்.
அது தான் தாமோதரனின் முதல் மேடை.இன்று கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் மேடைகளை கடந்து கல்வி சேவை செய்துகொண்டிருக்கிறார்.
இந்த தாமோதரனை உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.
கில்லி திரைப்படத்தில் ஓட்டேரி நரியாக நடித்த,பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கிய நடிகர் தாமு தான்,
டாக்டர் V தாமோதரன்…
சில நடிகன் போல…
குறைகுடங்கள் எப்போதும் கூத்தாடி கொண்டுதான் இருக்கும்…
தாமுவைப்போன்ற நிறைகுடங்கள்..
எப்போதும் தளும்பாமல்…
சமூக சேவைகள் ஆற்றி கொண்டேதான் இருக்கும்…
நடிகர் தாமு வை வணங்கி வாழ்த்துகிறேன்…