விமானச் சேவை இடைநிறுத்தம்

ஸ்ரீ லங்கன் விமானச் சேவையானது, இலங்கைக்கும் ரஷ்யாவின் மொஸ்கட் நகரத்துக்கும் இடையில் நடத்திய விமானச் சேவையை, இன்றிலிருந்து இடைநிறுத்தியுள்ளது.

‘மட்டு. கல்வி வலயம் முன்னேறுகிறது’

2021ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வுகளின் படி, மட்டக்களப்பு கல்வி வலயம் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற அடிப்படையில், இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.

ரணிலுக்கு இல்லை; கைவிரித்தது மொட்டு

பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்குவதற்கான எவ்வித திட்டமும் இல்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் தற்போது அந்த பதவியை வகிப்பதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் கூறியுள்ளார். இன்று(28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் மேலும் 1 பில். கோரியது இலங்கை

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மேலும் 1 பில்லியன் டொலர்களை இந்தியாவிடம் கோரியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை இரண்டு தரப்பினரும் இன்று (28) உறுதிப்படுத்தியுள்ளதாகவும்  அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் திகதியன்று புதுடெல்லியில் வைத்து 1 பில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நிலையிலேயே மீண்டும் கடன் உதவியை இலங்கை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துறக்கிறார் மஹிந்த : ஏற்கிறார் ரணில்…?

பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படக்கூடுமென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொய்களின் சாம்ராஜ்யத்தில் உண்மை தேசத்துரோகம்.

ரஷ்யா-உக்ரைன் யுத்தத்தில் தமிழ் ஊடகங்களில் மற்றும் ஆங்கில ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை துளியளவும் நம்ப வேண்டாம். உக்ரைன் – ரஷ்யா இராணுவ மோதலை விட ஊடக யுத்தம் பெரிதாக நடந்து வருகின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் ரஷ்ய ஆங்கில ஊடகங்களை ஏன் தடைசெய்துள்ளார்கள் என்பது தெரியுமா? உண்மை வெளியில் தெரியக் கூடாது என்பதற்காகவே.

ஐயா இவரையும் விசாரிங்க.. இவருக்கு எல்லாம் தெரியும்” : எடப்பாடி பழனிசாமியை மாட்டிவிட்ட அதிமுக புகழேந்தி!

எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் வா.புகழேந்தி மனு அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் வா.புகழேந்தி மனு அளித்துள்ளார்.