சோனியாவுக்கும் தொற்று

இந்தியாவில் தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று (02) காலை எட்டு மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கச்சதீவை மீட்க சரியான தருணம்: தே.மு.தி.க கூட்டத்தில் தீர்மானம்

இலங்கையிடம் இருந்து கச்சதீவை மீட்டு எடுக்க சரியான தருணம். எனவே, மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுத்து கச்சதீவை மீட்டெடுக்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தே.மு.தி.க) மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணம் 100% அதிகரிப்பு

வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 120,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள தீவிர முயற்சியில் அரசாங்கம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும்,உணவுப்பஞ்சத்தை தவிர்க்கும் விதமாக பெரும்போகம் மற்றும் சிறுபோக விளைச்சலுக்கான உரத்தை பெற்றுக்கொள்ளவும் அரசாங்கம் சர்வதேச தரப்புடன் தீவிரமாக கலந்துயாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவுஸ்திரேலிய அமைச்சரவையில் புதிய சாதனை

அவுஸ்திரேலியாவில் நேற்று முன்தினம் (01) புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவை மீண்டும் பிரதமராக்க முயற்சி – JVP

தற்போதும் நாட்டின் பாராளுமன்றம் திருட்டு கும்பல் வசம் காணப்படுகின்றதாகவும், மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் ஆக்குவதற்கு அந்த திருடர் கூட்டம் தயாராகி வருவதாகவும் மக்கள் விடுதலை முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

மாணவர் பேரணி; பொலிஸாரின் கோரிக்கை நிராகரிப்பு

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தின் போது, பல வீதிகளில் நுழைவதை தடை செய்யுமாறு கறுவாத்தோட்ட பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வெளிநாட்டு குடியுரிமை கொண்ட நபர் சிறையில் அடைப்பு

முல்லைத்தீவு – மாங்குளம் நீதவான் நீதிமன்றத்தில், நீதிபதி மற்றும் நீதிமன்றத்தினை அவமதித்து பேசிய குற்றத்திற்காக வெளிநாட்டு குடியுரிமை கொண்ட நபரை எதிர்வரும் 07.06.2022 வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

சில பொருட்களின் இறக்குமதி வரி எகிறியது

369 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளை இன்று (01) முதல் அமலுக்கு வரும் வகையில் தளர்த்துவற்கு தீர்மானித்துள்ளதாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு அறிவித்துள்ள நிலையில், பல உற்பத்திகளுக்கு 100% கட்டண விகிதத்தையும் இன்று (01) முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

நெருக்கடியைத் தீர்க்க தேர்தலை நடத்துங்கள் – JVP

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கடவத்தையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.