ஐஎம்எப் அனுமதி கிடைத்தது

இலங்கைக்கு நீடிக்கப்பட்ட நிதி வசதி உதவியை பெற்றுக் கொடுப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதியை வழங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக, இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி வழங்கும் அமைப்புகள் மற்றும் பரஸ்பர உதவியளிக்கும் அமைப்புகளிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது,

பூபாலசிங்கம்: இது ஒரு பத்திரிக்கைப் பை யனின் கதை

1922 ஜுன் மாதம் 03ஆம் திகதி நயினாதீவில் பிறந்த இவர் இளமையிலேயே தந்தையை இழந்தவர். இளமையின் ஏழ்மையால் பிழைப்புக்காக சிறுவயதிலேயே பத்திரிகைப் பையனானவர். “பூபாலசிங்கம் அவர்கள் சிறுவயதிலிருந்து புத்தகத் தொழிலில் இறங்கிபத்திரிக்கைப் பை யனாக ஆரம்பித்து இமயம் தொட்டவர்.

காட்டு யானைக் கூட்டம் அட்டகாசம்

பொத்துவில், ஆத்திமுனை சர்வோதய புர கிராமத்துக்குள் நேற்றிரவு (19) உட்புகுந்த காட்டு யானைக் கூட்டம், அங்கிருந்த வீடு ஒன்றை முற்றாக சேதமாக்கியுள்ளது.  இதன்போது, வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிந்தவர்கள் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் உயிர்தப்பியுள்ளனர்.

இந்தியா, பங்களாதேஷ் எல்லை தாண்டிய எரிசக்தி குழாய்கள்

இந்தியா- பங்களாதேஷ் நட்புக் குழாய் (IBFP) இந்தியாவில் இருந்து எரிபொருளை வழங்குவதற்கான நேரத்தையும் செலவையும் குறைக்கும் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான ஆற்றல் இணைப்பை மேம்படுத்தும். அஸ்ஸாமின் நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து அண்டை நாட்டின் வடக்குப் பகுதிகளுக்கு ஆண்டுக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் ​தொன் டீசலை வழங்கும் திறன் கொண்ட எல்லை தாண்டிய பைப்லைனை இந்தியா மற்றும் வங்கதேசம்   திறந்து வைத்தன.

நிலநடுக்கத்தில் இதுவரை 14 பேர் பலி

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதுடன், வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. பீதியடைந்த குடியிருப்பாளர்கள் வீதிகளில் நிற்கின்றனர். ஈக்வடார் மற்றும் பெருவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவு

உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று (19) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், அவற்றின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மாகாண ஆளுநர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.  இதன்போது, உள்ளூராட்சி மன்றங்களை ஆணையாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.