உள்ளுராட்சி தேர்தல்கள் பற்றி சிறீதரன் திருநாவுக்கரசு

இம்முறை உள்ளூராட்சி சபைகளில் 25 வீதத்திற்கு குறையாமல் பெண்கள் இடம்பெறவேண்டும். சிறிய கட்சிகள் பலமற்ற குரல்களுக்கும் ஓரளவு சாதகமான நிலை காணப்படுகிறது. ஆனால் பெருந்தொகையான பிரதிநிதித்துவம் துக்ளக்கின் தர்பாரை விஞ்சிய அராயகத்திற்கும் வழி வகுக்கலாம். கிராமிய வட்டார மட்ட ஊழல் விஸ்தரிப்பு வாதம் ஆகி விடக்கூடாது. மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதில் கட்சி செயலாளருக்குள்ள அதிகாரம் . கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தல1500 ரூபா கட்டுப்பணம் சுயேச்சையாக கேட்பவர்களுக்கு தலா 5000 ரூபா என்பதும் பணம் படைத்த கட்சிகள் தான் எல்லா இடங்களிலும் தேர்தலில் பங்கு பற்றலாம் என்ற நிலை இவை எல்லாம் ஜனநாயக விழுமியங்கள் மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன. ஏகப்பட்ட நிறை குறைகள். தேர்தல் தேர்தலுக்கு பிந்திய நடைமுறைகள் இது ஒரு பரிசோதனை காலம்.
சாதாரண மக்களுக்கு குரலற்றவர்களுக்கான அதிகாரம் என்பதே முக்கியமானது