இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.

The Formula
தங்காலை, கிரிந்த பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொகை குறித்து அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இவை இந்தியாவில் உயிரிழந்ததாகக் கூறப்படும் அங்கொட லொக்காவின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த ஒருவரும், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் தரப்பினரும் நாட்டிற்குள் கொண்டு வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பருமனாக இருப்பவர்கள் மெலியவும், மெலிந்தவர்கள் ஓரளவுக்குப் பருமனாக மாறவும் முயற்சி செய்கின்றனர். இதனால், மெலிந்த உடல் அமைப்பைக் கொண்ட ஒரு சிலர், பருமனாகி விடுகின்றனர். பல சுற்றுப் பருமனாக இருப்பவர்கள் அந்த முயற்சியை கை விட்டுவிடுகின்றனர். இதனால், இன்னுமின்னும் பருமனாகிவருகின்றனர்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ, நீதிமன்றத்தில் சரணடைவதற்காக வருகை தந்துள்ளார். நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி, போலியான முறைப்பாடு செய்த சம்பவம் தொடர்பில் துசித ஹல்லொலுவ சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்தார்.
2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 8 பேர் வாக்களிப்பில் இருந்து விலகினர்.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக்குழு அனுமதி தெரிவித்துள்ளது.