“ஓட்டத்தில் ஒளிர்ந்த ஒளி”

அப்துல் அஸீஸ் அஸ்மா,
ஊடகக் கற்கைகள் துறை,
யாழ்.பல்கலைக்கழகம்

இலங்கை தடகளத்தின் வான்வெளியில் ஒரு புதிய நட்சத்திரம் திகழ்கிறது. அந்த பெயர் தான் பாத்திமா ஷாபியா யாமிக். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இளம் வீராங்கனை, தன்னுடைய அதிரடியான வேகம் மற்றும் விடாமுயற்சியால் இலங்கையின் விளையாட்டு உலகில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை தரவுகள் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை தரவுகள் மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டம் மற்றும் இனத்தொகுதிக்கு ஏற்ப சனத்தொகையின் வீதாசாரப் பரம்பல் 2021 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட வித்தியாசத்தை காட்டுகின்றது.மாவட்டங்களின்  படி  சிங்களவர்,  இலங்கைத்தமிழர்,  இந்தியத்தமிழர்/ மலையகத்தமிழர், இலங்கைச் சோனகர்/ முஸ்லிம் மற்றும் ஏனையோர் என்ற பிரிவுகளில் இந்த தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (30) தென் கொரிய விமானப்படை தளத்தில் சீனத் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்துள்ளார். இந்த சந்தித்த பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பிரச்சினைகள் குறித்து முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார். இரு நாடுகளும் ஏறக்குறைய எல்லாவற்றிலும் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளன என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வேலை நிறுத்த போராட்டம் இடைநிறுத்தம்

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

ஹெரோயினுடன் 4 பேர் கைது

யாழ். மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (30) மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைபின் போது 24, 25 வயதுகளையுடைய நான்கு இளைஞர்கள் யாழ் மணியந்தோட்டம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்

“தனியார் நிறுவனமே வெளியேறு”

ஒப்பந்த காலம் நிறைவடைந்து வெளியேறாமல், தம்பாட்டி கடற்றொழில் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் கட்டிடத்தில் இருந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் தனியார் நிறுவனத்தை உடனடியாக வெளியேறுமாறு கோரி தம்பாட்டி கிராமிய கடற்றொழில் அபிவிருத்தி சங்கத்தினர், குறித்த கட்டிடத்திற்கு முன்பாக வியாழக்கிழமை (30) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூல் கொடுத்த சட்டத்தரணிக்கும் பத்மேவுக்கும் இடையில் தொடர்பு?

கணேமுல்ல சஞ்சீவ கொலையில்  பிரதான  சந்தேகநபரான  இஷாரா  செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி, இதற்கு முன்னர் கெஹெல்பத்தர பத்மே தொடர்பான வழக்குகளிலும் ஆஜராகி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மெகசின்கள் மீட்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் 2 மெகசின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் சீலிங்கின் மேல் இருந்தே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இ.போ.ச பேருந்து சாரதி ஒருவர் கைது

நல்லதண்ணி பகுதியில் உள்ள பேருந்து நிலைய தங்குமிட விடுதியில் அரச பேருந்தின் சாரதி ஒருவர் போதைப் பொருள் வைத்திருந்த போது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு கிடைத்த இரகசிய தகவல்களை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக சந்தேக நபரை கண்காணித்து வந்த வேலையில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

STC முன்னாள் தலைவர் கைது

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட் பைலா இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த கூட்டுத்தாபனத்திற்கு பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பின்பற்றாமல், 2015 ஆம் ஆண்டில் 50 தற்காலிக களஞ்சியசாலைகள் (கொட்டகைகள்) இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம், கூட்டுத்தாபனத்திற்கு ரூ. 99,679,799.70 நட்டம் ஏற்படுத்தியமை மற்றும் வெளித்தரப்பினருக்கு அதே தொகைக்குச் சமமான இலாபத்தை வழங்கிய குற்றச்சாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.