பேரிடர் காரணமாக வடக்கு மாகாணத்தில்…

பேரிடர் காரணமாக வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட உள்ளூர் வீதிகளைத் திருத்துவதற்குத் தேவையான நிதியை வடக்கு மாகாண சபைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. அத்தியாவசியத் தேவையாகக் காணப்படும் கிராமிய வீதிகளைப் புனரமைப்பதே எமது தற்போதைய முக்கிய இலக்காகும் என மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் தெரிவித்தார்.

செலான் வங்கியின் ATMகளில் புதிய வசதி

டெலர் இயந்திரங்கள் (ATMகள்), பண வைப்பு இயந்திரங்கள் (CDMகள்) மற்றும் காசோலை வைப்பு kioskகள் (CDKகள்) ஆகியவற்றை கொண்ட தனது பரந்த வலையமைப்பு ஊடாக வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அன்றாட வங்கிச் சேவையில் கட்டுப்பாட்டையும் சௌகரியத்தையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இச் சேவைகளில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான நாணயப்பெறுமதிகளை தேர்ந்தெடுக்கும் திறனும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை மீளாய்வு

யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை (10) அன்று  பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தனி சில்லில் மோட்டார் சைக்கிளோட்டிய 18 பேர் கைது

மஹரகம, பன்னிப்பிட்டிய ஹைலெவல் வீதியில்  பந்தயம் கட்டுவதற்காக சத்தமாக தனி சில்லில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய மற்றும் முச்சக்கர வண்டிகளில் சென்ற 18 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.

நிவாரண பிரச்சினையாயின் 1904 க்கு அழைக்கவும்

நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதில் அல்லது அத்தியாவசிய சேவைகள் கிடைக்காததில் பொதுமக்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், ‘1904’ என்ற ஹாட்லைன் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கலாம் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார். பாதுகாப்பான முகாம்களில் இயங்கும் பாடசாலை மற்றும் இன்னும் ஆபத்தில் உள்ள பள்ளிகள் தவிர, அனைத்து பள்ளிகளும் டிசம்பர் 16 அன்று மீண்டும் திறக்கப்படும் என்றும் ஆணையர் ஜெனரல் தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சர் கட்டைக்காட்டிற்கு விஜயம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டிற்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சனிக்கிழமை (13) அன்று  விஜயம் மேற்கொண்டார் அங்கு பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடி அவர்களுடைய குறைபாடுகளை அமைச்சர் கேட்டு அறிந்தார்

ஒரே பார்வையில் அனர்த்த பேரழிவு

இலங்கையை தாக்கிய திட்வா புயல் காரணமாக  ஏற்பட்ட சேத விபரங்களை ஒரே பார்வையில் தருகின்றோம்…

* குடும்பங்கள்: 391,401

* நபர்கள்: 1,364,481

* மரணம்: 643

* காணவில்லை: 184

* முழுமையான வீடுகள் சேதம்: 6164

* பகுதியளவில் வீடுகள் சேதம்: 112,110

* பாதுகாப்பான நிலயங்கள்: 796

* குடும்பங்கள்: 23,041

* நபர்கள்: 72,911

தகவல்: அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம். 

“ உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்”

அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு விடயம் என்றும், அத்தகைய சவாலை எதிர்கொள்ளும் ஒவ்வொருவரின் பொறுப்பும் ஓடிப்போவதோ அல்லது பீதியுடன் பார்ப்பதோ அல்ல, மாறாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவதாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்திற்கு பலத்த மழை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

அயலகத் தமிழர் தினவிழா 2026 சென்னையில்

அயலகத் தமிழர் தினம் 2026 ஜனவரி மாதம் 11,12 ஆம் திகதிகளில் சென்னை வர்த்தக மையம்,நந்தம்பாக்கம், சென்னையில் நடைபெற உள்ளது. நிகழ்வு பற்றி பர்மாவில் பிறந்து தாய்லாந்தில் வசிக்கும் தீபா ராணியின் மனப்பதிவுகள். .