இப்போது சமீப நாட்களாக இந்த புலிகளின் துணுக்காய் கொலைச் சாலை பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த வதைமுகாம் பற்றி நான் பல தளங்களிலும் பேசியும் எழுதியும் வந்தாலும், இதுபற்றிய செய்திகள் தமிழ் மக்கள் மத்தியில் போதுமான அளவு போய் சேரவில்லை.
1991ம் வருடம் கொழும்பு நகரத்தில் தலைமறவாக இருந்து கொண்டு, ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள் என்னும் சிறு கைநூல் ஒன்றை எழுத சந்தர்ப்பம் கிடைத்து. 1989 இறுதிப் பகுதி 1990 ஆரம்பம் இந்திய இராணுவ வெளியேற்றம்.
காட்டுக்குள் முடக்கப்பட்டிருந்த புலிகள்,பிரேமதாஸ அனுசரணையுடன், சிங்கள இராணுவத்தின் துணையுடன் மெல்ல மெல்ல நாட்டுக்குள் ஊடுருவினர்மாற்றுக் கருத்தாளர்கள், தமக்கு வேண்டப்படாதவர்கள் என பலர் புலிகளால் கடத்தப்பட்டார்கள். கைது செய்யப்பட்டார்கள்.
அரச படைகளின் ஆதரவுடன் கொழும்பு நகரிலும் புலிகளின் கைது நடவடிக்கைகள் ஆட்கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தன. பிரேமதாஸ ஆசியுடன் ,இராணுவ சோதனை சாவடிகள் ஊடாக புலிகளின் ஆட்கடத்தல் தங்குதடையின்றி நடைபெற்றது.
தலைநகரில் இருந்து ஆயுத காவலுடன் இராணுவ முகம்களின் அனுமதியுடன்,விலங்கிடப்பட்ட கைதிகள் துணுக்காய் கொலைமுகமுக்குக் கொண்டுவரப்பட்டார்கள்.
அந்தக் காலப்பகுதியில் அரசின்நம்பிக்கைக்குரிய ஒட்டுக்குழுவாக புலிகள் செயல்பட்டார்கள் என்பதை எவரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.கைது செய்யப்பட்டு ஆங்காங்கே பல பல இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் எ்ல்லோரும், துணுக்காய் கொலைக்கூடத்துக்கு இடம்மாற்றப்பட்டார்கள்.
இப்படியாக சுமார் 4000 மக்கள் கை கால்களுக்கு விலங்கிடப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அப்பப்போ கைதிகளின் எண்ணிக்கை மாறுபட்டுக் கொண்டே இருந்தது.கைதிகளின் எண்ணிக்கை பற்றிய ஏதாவது சந்தேகம் என்றால் , ஒவ்வொரு கைதியையும் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்த குகன் ஸ்ரூடியோ நிறுவனத்தினரிடம் விசாரித்து தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.
இந்த ஸ்ரூடியோ சாவகச்சேரி அல்லது பருத்தித்துறை பகுதியில்இருந்ததாக அறிந்தேன் சிறைச்சாலைக்குப் பாண் விநியோகம் செய்த துணுக்காய் பேக்கறி நிர்வாகத்திடம் விசாரித்தாலும் கைதிகள் எண்ணக்கையைத் தெரிந்து கொள்ளலாம் இது தவிர 700 மேற்பட்ட பெண்கள் வேறு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.
சுமார் 4000 கைதிகளுக்கும் நடந்தது என்ன?இதில் சுமார் 1000 பேர் மட்டில் நல்லூர் பகுதியில் வைத்து விடுதலை செய்யப்பட்டார்கள். நாளாந்தம் 20அல்லது 25 பேர் துணுக்காய் முகாமில் இருந்து எடுக்கப்பட்டு, சிவபுரம் முகாமுக்கு கொண்டு வந்து, இரவோடு இரவாக ஏரிக்கரையில் வைத்து கொல்லப்பட்டு எரித்து சாம்பலும் கரைத்து முடிக்கப்பட்டது.
கொன்று எரிக்கப்பட்ட கைதிகளின் கால்களில் மாட்டப்பட்ட இரும்புச் சங்கிலிகள் கணக்கெடுப்புக்காக பொட்டனுக்கு அனுப்பப்பட்டன.வ்வனிக்குள நீர்ப்பாசன திணைக்கள ஊழியர்கள் ,தமது தங்கமிடத்தில் இருந்து இவற்றை அவதானித்துள்ளர்கள் இந்த அழித்தொழிப்பு 100 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக நடந்தது.
மேலும்…இங்கிருந்த சில கைதிகள் இராணுவ முகாம்கள் இருந்த பகுதிகளுக்குப் புலிகளால் கொண்டு செல்லப்பட்டார்கள். 1990 ஆனி மாதம் புலிகள் பிரேமதாஸ தேனிலவு முடிந்து சண்டை ஆரம்பித்த போது, இராணுவ முகாம் பகுதிகளில் புலிகளுக்கான பங்கர்கள் அமைப்பதற்கும், வேறு உயிராபத்தான வேலைகளுக்கும் இந்த கைதிகள் (காலில் விலங்குகளுடன்) பயன்படுத்தப்பட்டார்கள்.
இங்கும் இரணுவ தாக்குதல்களின் போது சபல கைதிகள் கொல்லப்பட்டார்கள். 1990 ஆன மாதம் துணுக்காய் கொலைமுகாம் புலிகளால் கைவிடப்பட்டது. சில நூறு கைதிகளை அந்த பிரமாண்டமான பண்டகசாலைக்குள் அடைத்து வைத்து குண்டு வைத்து கட்டடம் தகர்க்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தின் மீது அரசின் விமானத் தாக்குதலும் நடத்தப்பட்டது.
துணுக்காய் கொலைமுகாம் கைதிகளுக்கு புலிகளால் நடத்தப்பட்ட கொடுமைகளை எவருமே பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை. 2018ல் அங்கு சென்று அந்த கிராமத்தில்உள்ள ஓரிரு பெரியவர்களிடம் பேசி சில தகவல்களை பெற்றுக்கொண்டோம். அங்குள்ள இளைஞர்களுக்கு இந்த முகாம் பற்றி எதுவுமே தெரியாது.மேலதிக தகவல்கள் தேவை என்று எனக்குத் தோன்றினால்.
(மேலும் தொடரும்….)