13ஐ ஆதரித்ததால் மூன்று தடவைகள் சுட்டப்பட்டார் வட மாகாண ஆளுனர்!

தமிழ் மக்களின் இதயங்களை வெல்வதற்கு தான் பல தியாகங்களை செய்துள்ளதாக புதிதாக நியமிக்கப்பட்ட வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டார். வடமாகாண ஆளுனராக நியமிக்கப்பட்ட ரெஜினோல்ட் குரே நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்று கொண்டதுடன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் போது, எதிர் தரப்பிலிருந்து 13ஆம் திருத்தச்சடத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தமையினால் தன் மீது மூன்று தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அந்த சம்பவங்களிலிருந்து தான் தப்பியதாகவும் கூறினார். அத்துடன் வடக்கில் சகல அவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படும் என்றும், இதற்கான ஒப்பந்தங்கள் வடபகுதியிலுள்ளவர்களுக்கே வழங்கப்படும் என்றும் கூறினார். தனது அரசியல் வாழ்வின் இறுதி தருணங்களை வடபகுதி மக்களுடன் கழிக்க வேண்டும் என்று உறுதிகொண்டிருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

அரசியல் அமைப்பில் மலையகத்திற்கு தனியான அலகு வேண்டும்!

புதிதாக அமைக்கப்படவுள்ள அரசியலமைப்பில், மலையக மக்களுக்கான தனியான அலகும், தனி அடையாளமும் உள்ளடக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொது மக்களின் யோசனைகளை கேட்டறியும் இரண்டாம் நாள் அமர்வு இன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெற்றது. இந்த அமர்வின் போதே மேற்குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய இரண்டாம் நாள் அமர்வில் சுமார் 45 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் அரசியல் தொடர்பான கூடுதலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட அதேவேளை பெருந்தோட்ட துறையை சார்ந்த ஆசிரியர்கள், பொது மக்கள் மற்றும் வழக்கறிஞர்கள், அரசியல் மற்றும் தொழிற்சங்கவாதிகள் சிலர் தமது யோசனைகளை வாய் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் குழுவினரிடம் கையளித்தனர்.

(“அரசியல் அமைப்பில் மலையகத்திற்கு தனியான அலகு வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

‘சிங்க லே’ உடம்பில் ஓடுவது கலப்பு இரத்தம்!

சிங்க லே என்று கூச்சலிடுபவர்களின் உடம்பில் ஒடுவது கலப்பு இரத்தம் என்று வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார். வட மாகாணசபையின் புதிய ஆளுனராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்ட அவர் இன்று (வெள்ளிக்கிழமை) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதற்கான வரவேற்புநிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் கலப்பு இரத்தம் கொண்டவர்கள் என்று கூறினார். சிங்க லே என்று கூறுவோரின் உடம்பில் கலப்பு இரத்தம் ஓடுவதாகவும் யாரும் ஒரு இன, ஜாதி, நாட்டு இரத்தத்துடன் இருப்பதில்லை என்றும் கூறினார். இந்தியாவிலிருந்து அரசி கொண்டு வருகின்றோம், தாய்வானிலிருந்து கருவாடு கொண்டு வருகின்றோம். அப்படி பார்த்தால் எமது உடம்பில் ஓடுவது சர்வதேச கலப்பு இரத்தமாகும் என்றும் கூறினார். ரெஜினால்ட் குரே. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அமைச்சராகவும் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேல்மாகாண முதலமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதவன் டிவியில்…… அ.வரதராஜப்பெருமாள்

முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் அவர்களுடனான நேர்காணல் – ஆதவன் டிவியில்….
20.02.2016 சனிக்கிழமை மாலை 6.00 மணி (பிரித்தானிய நேரம் )
www.ayhavantv.com

வடக்கின் புதிய ஆளுநருக்கு வரவேற்பு!

வடமாகாண புதிய ஆளுநராக வந்திருக்கும் ரெஜினோல்ட் குரே தமிழ் பேசக்கூடியவராக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (19) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது, இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறகையில், ஆசிரியராக இருந்தவர் கொடுத்துத்தான் பழக்கம் யாரையும் கெடுத்துப் பழக்கமிருக்காது. பல தகைமைகள் உள்ள ஒருவராக இவர் இருக்கின்றார்.

(“வடக்கின் புதிய ஆளுநருக்கு வரவேற்பு!” தொடர்ந்து வாசிக்க…)

திக்கம் வடிசாலையை பார்வையிட்டார் டக்ளஸ்?

இயங்கா நிலையிலுள்ள திக்கம் வடிசாலையின் தொழிற்சாலையையும் புதர் மண்டிக் காணப்படும் வளாகத்தையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பார்வையிட்டார்வடமராட்சிக்கு நேற்றைய தினம் (18) விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதன் ஒருகட்டமாக திக்கம் வடிசாலைக்குச் சென்று அதன் தற்போதைய நிலவரம் தொடர்பில் நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார். டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் திக்கம் வடிசாலை மிகச் சிற்நத முறையில் இயங்கியிருந்த அதேவேளை அங்கு நூற்றுக்கணக்கான பணியாளர்களும் வேலைவாய்ப்பினைப் பெற்றிருந்தனர். இந்நிலையில் தற்போது திக்கம் வடிசாலை கடந்த பல மாதங்களாக இயங்காத நிலையில் அங்கிருக்கும் தொழிற்துறை சார்ந்த உபகரணங்களும் ஏனைய உபகரணங்களும் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன.

(“திக்கம் வடிசாலையை பார்வையிட்டார் டக்ளஸ்?” தொடர்ந்து வாசிக்க…)

கோத்தாவிற்கு கிறுக்கு? – டக்ளஸ்!

வடமாகாண சபை தேர்தல் காலத்தில் ஈ.பி.டி.பியிடம் இருந்து ஆயுதங்களை களைய வேண்டாம் என நான் கூறியதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கும் கருத்தின் ஊடாக அவர் தன்னை ஒரு ஜனநாயக வாதியாக காட்டிக் கொள்ள நினைக்கின்றார். அவருடைய இந்தக் கருத்து கிறுக்குத்தனமானது. மேற்கண்டவாறு முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வி ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றார்.

(“கோத்தாவிற்கு கிறுக்கு? – டக்ளஸ்!” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்பு குழுவாக இணைந்து செயற்படும்? சம்பந்தன் உறுதி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அடுத்து வரும் காலங்களில் ஒரு குழுவாக இணைந்தே அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்று அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி இடம்பெறும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் பின்னர், பங்காளிக் கட்சியின் தலைவர்களிடத்தில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான விசேட சந்திப்பொன்றும் நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றுப் புதன்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரையில் கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளான – இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சி மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் க.சர்வவேஸ்வரன் (ஈ.பி.ஆர்.எல்.எப்.), கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

(“கூட்டமைப்பு குழுவாக இணைந்து செயற்படும்? சம்பந்தன் உறுதி!” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளக விசாரணையின் போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும்!

சிறிலங்கா அரசாங்கத்தினால் நடத்தப்படவுள்ள உள்ளக விசாரணையில், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அதிர்ச்சியூட்டும் பல தகவல்களை வெளியிடுவார் என்று, சிறிலங்கா அமைச்சர், சரத் அமுனுகம தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர், “உள்ளக விசாரணையில் சிறிலங்கா இராணுவத்தினர் பற்றிய விவாதம் ஆரம்பிக்கும் போது, பல திடுக்கிடும் தகவல்களை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்வைக்கவுள்ளார். இதன்போது, இராணுவத்தினரைச் சுடுவதற்காக துப்பாக்கிதாரிகளுக்கு பணம் கொடுத்தது யார், விடுதலைப் புலிகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்ன, விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியது யார், அதில் புலிகள் கொள்வனவு செய்த துப்பாக்கிகளின் வகைகள் என்ன என்பன உள்ளிட்ட பல தகவல்கள் வெளிவரும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

(“உள்ளக விசாரணையின் போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும்!” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கியூபாவுக்கு வரலாற்று விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அடுத்த மாதம் கியூபாவுக்கு வரலாற்று முக்கியம் வாய்ந்த விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக அமெரிக்க அரச வட்டாரம் உறுதி செய்துள்ளது. வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் ஒரு பரந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் ஒபாமா அதன் ஓர் அங்கமாக கியூபாவுக்கு செல்லவுள்ளார். வெள்ளை மாளிகை நேற்று ஒபாமாவின் விஜயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதன்மூலம் பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் கியூபாவுக்கு பயணம் செய்யும் இரண்டாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது. 1928 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கல்வின் கூலிட்ஜ் கியூபாவுக்கு விஜயம் செய்திருந்தார்.

(“அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கியூபாவுக்கு வரலாற்று விஜயம்” தொடர்ந்து வாசிக்க…)