கலம் மெக்ரேயின் மூன்றாம் வலை

இறுதி யுத்தத்தின்போது, இலங்கையில்; இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை மீது சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் எனக் கோரி சர்வதேச ரீதியில் பாரிய பிரசாரத்தை மீண்டும் முன்னெடுக்கும் நோக்கில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக பிரித்தானியாவின் செனல் 4 நிறுவனத்தின் யுத்த சூனிய வலயம் எனும் திரைப்படத்தை தயாரித்த கலம் மெக்ரே உள்ளிட்ட குழுவினர் மற்றுமொரு திரைப்படத்தை வெளியிட தயாராகி வருவதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

(“கலம் மெக்ரேயின் மூன்றாம் வலை” தொடர்ந்து வாசிக்க…)

பிரதமர் ரணில் இன்று இந்தியா பயணம்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இன்று புதுடில்லி புறப்பட்டுச் செல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவாரெனத் தெரிய வருகிறது. பிரதமரின் இவ்விஜயத்தின் நிமித்தம் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 16 இந்திய மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான சிநேகபூர்வ நட்புறவை முன்னிலைப்படுத்தும் அடையாளமாக இம்முடிவை அரசாங்கம் எடுத்திருக்கின்றது. தமிழ் நாட்டைச் சேர்ந்த இம்மீனவர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நிலவிவரும் நட்புறவை வலுப்படுத்தி பிராந்திய சமாதானத்தையும் நல் லிணக்கத்தையும் உறுதிப்படுத்திக் கொள்வது குறித்து இப்பேச்சுவார்த் தைகளின் போது இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகின்றது

புலம் பெயர் தமிழர்களுக்கு போர் என்பது பொழுதுபோக்கு”

மெல்பன் நகரில் வாழும் எழுத்தாளர் ஜேகே அவர்கள் கம்பன் கழகம் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியிருந்தார். பதிலுக்கு கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் ஜேகே அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். நமது செய்தியாளரிடமும் பேசினார். அதில் பல கருத்துக்களை அவர் முன்வைக்கிறார்: புலம் பெயர் தமிழர்களுக்கு போர் என்பது பொழுதுபோக்கு; போரை இன்னும் நடத்தவேண்டும் என்று விரும்புகிறார்கள்; பாதுகாப்பாக இருந்துகொண்டு போர் சூழலை வளர்க்க நினைக்கின்றார்கள்; புலம் பெயர் தமிழர்கள் இலங்கை தமிழ் மக்கள் விஷயத்தில் ஈடுபட ஒரு எல்லை உண்டு என்னுடைய திறமைக்கு புலம்பெயர் தமிழர்கள் பணத்தை விலையாக வைக்கும்போது நான் கொஞ்சம் ஆணவப்படவேண்டியுள்ளது.

பிரிட்டிஷ் லேபர் கட்சித் தலைவர் ஜெரேமி கொர்பைன் ஒரு சோஷலிஸ்ட்!

(Kalaiyarasan Tha)
பிரிட்டிஷ் லேபர் கட்சித் தலைவருக்கான தேர்தலில், ஜெரேமி கொர்பைன் அறுபது சதவீத வாக்குகளால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். பெரும்பாலும் இளையதலைமுறை லேபர் கட்சி உறுப்பினர்கள் அவரை ஆதரிக்கின்றனர். ஜெரேமி கொர்பைனின் வெற்றி பற்றிய தகவலை, வலதுசாரி தமிழ் ஊடகங்களும், வலதுசாரி தமிழ் இணைய ஆர்வலர்களும் இருட்டடிப்பு செய்தால், அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. லேபர் கட்சித் தேர்தலில், ஜெரேமி கொர்பைன் போட்டியிடும் பொழுதே, முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தார். என்ன காரணம்? ஜெரேமி கொர்பைன் ஒரு சோஷலிஸ்ட்! இடதுசாரி பொருளாதாரக் கொள்கையை அமுல் படுத்தப் போவதாக வெளிப்படையாக பேசி வருபவர்! ஜெரேமி கொர்பைன் உண்மையான சோஷலிஸ்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரது அரசியல்-பொருளாதார கொள்கைகள், பிரிட்டனைப் பொறுத்தவரையில் “தீவிர இடதுசாரித் தன்மை” கொண்டவை. ஐரோப்பாவில், கிரீஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக, “முதலாளித்துவத்தின் தாயகமான” பிரிட்டனில் இடதுசாரி அலை வீசுவது குறிப்பிடத் தக்க விடயம். நமது தமிழ் வலதுசாரி ஊடகங்கள் இந்தத் தகவலை சுய தணிக்கை செய்து கொண்டதற்கும் அது தான் காரணம்.

விக்கியை பதவியிலிருந்து நீக்க கூட்டமைப்பு முயற்சி

பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாகச் செயற்பட்டிருக்காத வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை பதவியிலிருந்து நீக்குவதற்கு கூட்டமைப்பினர் முயற்சித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் அண்மையில் கூடி இது தொடர்பில் ஆராய்ந்திருப்பதாகத் தெரிய வருகிறது. கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயற்படாததுடன் கூட்டமைப்பின் கருத்துக்களுடன் பல இடங்களில் முரண்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே அவரை பதவி விலக்குவது குறித்து கூட்டமைப்புக்குள் தீவிரமாக ஆராயப்படுவதாகத் தெரிய வருகிறது. அதேநேரம் இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய மாகாண சபை யொன்றின் முதலமைச்சருக்கு எதிராக எவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத் தைக் கொண்டுவர முடியாதென வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்தார்.

(“விக்கியை பதவியிலிருந்து நீக்க கூட்டமைப்பு முயற்சி” தொடர்ந்து வாசிக்க…)

இன்னமும் உயிர்வாழ்கின்றதா?

நாடு கடந்த தமிழீழம்

சுவிசிலும் லண்டனிலும் மக்கள் முன் உறுதி பூண்ட நாடுகடந்த தமிழீழ அரசின் மக்கள் பிரதிநிதிகள். ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை அரசில் பெருவிருப்பின் சனநாயகப் பேராட்ட வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராண்டாம் தவணை அரசவைக்கு தேர்வாக மக்கள் பிரதிநிதிகள், மக்கள் முன்னாலான அறிமுக நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்று வருகின்றன. அதனொரு அங்கமாக லண்டனிலும் சுவிசிலும் தேர்வாகிய மக்கள் பிரதிநிதிகள், தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ பத்திரத்தினை மக்கள் முன் பெற்றுக் கொண்டதோடு, தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான தங்களின் உறுதிப்பாட்டினை மக்கள் முன் வெளிப்படுத்தி நின்றனர். தேர்வாகியுள்ள பிரதிநிதிகளை வரவேற்று அவர்களுக்கு உறுதுணையாக நின்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வலுப்படுத்துமாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், சுவிஸ் நிகழ்வில் இணைவழிப் பரிவர்தனையூடாக இணைந்து கொண்டு மக்களிடம் கோரியிருந்தார். இதேவேளை இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நிகழ்ந்தது இனப்படுகொலையே என்பதனை அனைத்துல அரங்கில் நிறுவுவதுதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதான செயற்பாடெனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க சி.ஐ.ஏயால் கொலை செய்யப்பட்ட இடதுசாரித் தலைவர்

42 வருடங்களுக்கு முன்னர், இதே நாளில் 11.09.1973ல் அமெரிக்க சி.ஐ.ஏயால் கொலை செய்யப்பட்ட இடதுசாரித் தலைவர் தோழர் சல்வடார் அலெண்டேயும், படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களும் அமெரிக்காவின், கோர முகத்தை எப்போதும் நமக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.
42 ஆண்டுகளுக்கு முன், நடந்த அமெரிக்காவின் இந்த ஜனநாயகப் படுகொலைகள், இராணுவ அத்துமீறல்கள் ,வன்முறைக் கொலைகள், அராஜகங்கள், பொருளாதராத் தடைகள் எத்தனை எத்தனை.
அவை இன்றும் அமெரிக்காவை எதிர்க்கும் பல்வேறு நாடுகளுக்கும் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. நாம் இன்னும் படிப்பினை பெற்றவர்களாக இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நம்பிக் கொண்டு துணைக்கு அழைத்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட எம் மக்களின் விடுதலையை அவர்களுக்கூடாக வேண்டி நிற்கிறோம். இப் புத்தகத்தில் ரெகிஸ் டெப்ரேயின் அலெண்டேயின் பதவிக்காலத்தில் எடுத்த பேட்டியும், பகுதி இரண்டில் நெருக்கடியான காலகட்டத்தில் சிலிக்கு பயணம் செய்து அங்கு நடந்துவந்த அரசியல் பொருளாதார மாற்றங்களை கவனித்து வந்த பிரிட்டீஸ் பொருளாதார நிபுணர் அலெக்நோவேயின் கட்டுரையும் இடம்பெற்றள்ளது. இவைகள், சமூக மாற்றத்திற்காக போரடுகின்ற சக்திகள் எதிர் நோக்க வேண்டிய பிரச்சனைகள் -தடைக்கற்கள் ஆகியவற்றை நமக்கு உணர்த்துகின்றது.  இன்றைய காலத்தில், நமது வாசிப்பிற்கும் – புரிதல்களுக்கும் இப் புத்தகம் முக்கியமானதாக இருக்கின்றது. இதனை சென்னை சவுத் ஏசியன் புக்ஸ் வெளியிட்டுள்ளது.(அசோக்)

சிரியாவில் ரஷ்ய பிரசன்னம் அதிகரிப்பு

சிரியாவில் தனது இராணுவ செயற்பாடுகளை ரஷ்யா அதிகரித்திருப்பதாக வெளியான செய்தி குறித்து அமெரிக்கா மற்றும் நேட்டோ கவலையை வெளியிட்டுள்ளன.ரஷ்யாவின் பங்கேற்பு பிரச்சினையை தீர்க்க உத வாது என்று நேட்டோ தலைவர் nஜன்ஸ் ஸ்டொ ல்ட்பேர்க் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம் ரஷ்ய வெளியு றவு அமைச்சர் செர்கே லவ்ரோவை தொலைபேசி யில் தொடர்புகொண்ட அமெரிக்க இராஜhங்கச் செய லாளர் ஜோன் கெர்ரி இந்த விவகாரம் குறித்து கவ லையை வெளியிட்டுள்ளார்.

(“சிரியாவில் ரஷ்ய பிரசன்னம் அதிகரிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

மெக்காவில் கிரைன் முறிந்து விழுந்து விபத்து 62பேர் பலி

சவுதி அரேபியாவில்  உள்ள புனித மெக்கா மசூதியில்  இன்று வெள்ளிக்கிழமை  கிரைன் முறிந்து  விழுந்து ஏற்பட்ட விபத்தில் 62 பேர் பலியானதாக சவுதி அரேபிய பாதுகாப்பு அதிகாரி தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்து உள்ளார்.  மேலும்  30 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். ஹஜ் புனித யாத்திரைக்காக அங்கு அதிகமான பேர் குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.

சிரிய அகதிகளை ஏற்கும் உருகுவே

உருகுவேயின் தலைவர் ஜோஷ் முஹிகா பெற்றோரை இழந்த 100 சிரிய அகதி குழந்தைகளுடன் தன்னுடைய ஸொந்த வீட்டை பகிர்கிறார். கடந்த வாரம் 30 மணிநேர பயணத்தின் பின்னர் முதலாவது சிரிய அகதிகள் குழு உருகுவேயை சென்றடைந்தனர். போரை என்னால் நிறுத்த முடியாது அதன் விளைவுகளுக்கு நாடுகள் சிறிதேனும் ஈடு கொடுக்கவேண்டும் என்றார் முன்னாள் ஜனாதிபதி. “நல்ல மனசுக்காரனுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை” உலகெங்கும் உள்ள முஹிகாவின் ரஸிகர்களுக்கு சந்தோஷம். ப்ராவோ.!!