தமிழ் மொழி பேசும் தலைவர்களே கவனம்

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஏனைய அமைப்புகளால் நிவாரண உதவிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அவை தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின்றன.

நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் சற்றுமுன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி, கேகாலை,குருணாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலேயே இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பல வீதிகளில் வெள்ளம்

கொழும்பில் இடி மின்னலோடு பெரு மழை கொட்டிப்பெய்கிறது. அரை மணி நேரத்துக்கும் அதிகமாகப் பெய்யும் மழையினால் பல வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மண்சரிவில் சிக்கிய குடும்பம்: அறுவர் மரணம்: மீண்டவர்களின் சோகக்கதை

“நவம்பர் 26 ஆம் திகதி இரவு, எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குச் சென்றோம். நானும், என் பேரனும் பேத்தியும் ஒரு அறையில் இருந்தோம். என் மகனும் என் மகனின் கர்ப்பிணி மனைவியும் மற்றொரு அறையில் தூங்கினார்கள், மற்றவர்கள் விறைந்தையில்  தூங்கினார்கள் திடீரென்று இடி சத்தம் கேட்டு விழித்தேன். அதே நேரத்தில், நாங்கள் ஒரு மண்ணுக்குள் புதையுண்டிருந்தோம்” என்று மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து தப்பிய திருமதி எம். சந்திர காந்தி கூறினார்.

அனர்த்த சூழ்நிலை: வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்தொகை வழங்குவதில் எவ்விதமான முறைகேடுகளுக்கோ, பாரபட்சங்களுக்கோ அல்லது ஊழலுக்கோ இந்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.

2,000 மலைகளில் விரிவான அறிவியல் ஆய்வு

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், மத்திய சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள கிட்டத்தட்ட 2,000 மலைகளில் விரிவான அறிவியல் ஆய்வை நடத்தி, அரசாங்கத்திற்கு முழு அறிக்கையையும் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது. இந்த அமைப்பில் நிபுணர்கள் பற்றாக்குறை இருப்பதால், பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த மாணவர்களையும், நீர்வள வாரியம் உள்ளிட்ட பிற நிறுவனங்களின் நிபுணர்களையும் இந்தப் பணிக்காக ஈடுபடுத்த இந்த அமைப்பு நம்புகிறது.

வருமான வரியை செலுத்த காலக்கெடு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி வருமானத்தை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை உள்நாட்டு வருவாய் துறை டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. ‘தித்வா’ சூறாவளியின் தாக்கம் மற்றும் இலங்கையின் பல பகுதிகளை பாதித்த தீவிர வானிலை காரணமாக, இந்த காலக்கெடு முன்னதாக டிசம்பர் 8 வரை நீட்டிக்கப்பட்டது.

மட்டு.சிறை கைதிகளின் மனிதாபிமானம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களாக நேற்று (05) கையளித்துள்ளனர்.

சஜித் அணியின் உறுப்பினர் இராஜினாமா

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான சமகி ஜன பலவேகய (SJB) வெலிகம தேர்தல் அமைப்பாளரும் முன்னாள் வெலிகம மேயருமான ரெஹான் ஜெயவிக்ரம கட்சியில் இருந்து தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவுக்கு எழுதிய கடிதத்தில், கட்சியின் தற்போதைய கொள்கைகளில் தான் இனி திருப்தி அடையவில்லை என்று ஜெயவிக்ரம கூறினார்.

மூதூரில் குடிநீர் குழாயை இணைக்கும் பணி முன்னெடுப்பு

எஸ்.கீதபொன்கலன் மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும் பாரிய பணி முன்னெடுப்பு மூதூர் – நீலாபொல பகுதியில் இருந்து மூதூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை கொண்டு செல்கின்ற பாரிய குழாயானது அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் உடைக்கப்பட்டு சுமார் 150 மீற்றருக்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டிருந்தது. இதனை இழுத்து கொண்டு வந்து இணைக்கும் பணி இன்று(6)காலை முதல் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.