கண்டியிலிருந்து கொழும்புக்கு புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு நாளை காலை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. புகையிரத பருவ டிக்கெட்டுகளை பயன்படுத்தி இந்த சிறப்பு பேருந்துகளில் பயணிக்க முடியும் என்று அதன் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்தார்.
இலங்கையிற்கு உதவ…. அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் வந்தன
டிட்வா சூறாவளி அனர்த்தத்திற்கான இலங்கையின் பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக அமெரிக்க வான்போக்குவரத்துத்திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J Super Hercules விமானங்களும் அமெரிக்க விமானப்படையின் 36ஆவது எதிர்பாராத அவசரநிலைகளுக்கான பதிலளிப்புக்குழுவினைச்(CRG) சேர்ந்த விமானப் படை வீரர்களும் கட்டுநாயக்க விமானத்தளத்தினை ஞாயிற்றுக்கிழமை (07) அன்று வந்தடைந்தனர்.
தமிழ் மொழி பேசும் தலைவர்களே கவனம்
நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
கொழும்பில் பல வீதிகளில் வெள்ளம்
கொழும்பில் இடி மின்னலோடு பெரு மழை கொட்டிப்பெய்கிறது. அரை மணி நேரத்துக்கும் அதிகமாகப் பெய்யும் மழையினால் பல வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மண்சரிவில் சிக்கிய குடும்பம்: அறுவர் மரணம்: மீண்டவர்களின் சோகக்கதை
“நவம்பர் 26 ஆம் திகதி இரவு, எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குச் சென்றோம். நானும், என் பேரனும் பேத்தியும் ஒரு அறையில் இருந்தோம். என் மகனும் என் மகனின் கர்ப்பிணி மனைவியும் மற்றொரு அறையில் தூங்கினார்கள், மற்றவர்கள் விறைந்தையில் தூங்கினார்கள் திடீரென்று இடி சத்தம் கேட்டு விழித்தேன். அதே நேரத்தில், நாங்கள் ஒரு மண்ணுக்குள் புதையுண்டிருந்தோம்” என்று மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து தப்பிய திருமதி எம். சந்திர காந்தி கூறினார்.
அனர்த்த சூழ்நிலை: வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு
2,000 மலைகளில் விரிவான அறிவியல் ஆய்வு
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், மத்திய சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள கிட்டத்தட்ட 2,000 மலைகளில் விரிவான அறிவியல் ஆய்வை நடத்தி, அரசாங்கத்திற்கு முழு அறிக்கையையும் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது. இந்த அமைப்பில் நிபுணர்கள் பற்றாக்குறை இருப்பதால், பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த மாணவர்களையும், நீர்வள வாரியம் உள்ளிட்ட பிற நிறுவனங்களின் நிபுணர்களையும் இந்தப் பணிக்காக ஈடுபடுத்த இந்த அமைப்பு நம்புகிறது.
வருமான வரியை செலுத்த காலக்கெடு
2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி வருமானத்தை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை உள்நாட்டு வருவாய் துறை டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. ‘தித்வா’ சூறாவளியின் தாக்கம் மற்றும் இலங்கையின் பல பகுதிகளை பாதித்த தீவிர வானிலை காரணமாக, இந்த காலக்கெடு முன்னதாக டிசம்பர் 8 வரை நீட்டிக்கப்பட்டது.
மட்டு.சிறை கைதிகளின் மனிதாபிமானம்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களாக நேற்று (05) கையளித்துள்ளனர்.