இன்றைய சமூகத்திற்கு அத்தியாவசியமான இளம் தலைவிகளை உருவாக்கும் ஆற்றல் இலங்கை பெண் சாரணியர் சங்கத்திற்கு உள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரித்தல்
நில வரைபடங்களை நாளை முதல் ஒன்லைனில் அணுகலாம்
நில அளவை வரைபடங்கள் நாளை, ஓகஸ்ட் 01, 2025 முதல் நிகழ்நிலையில் கிடைக்கும் என்று நில அளவையாளர் நாயகம் வை.ஜி. ஞானதிலக இன்று அறிவித்தார். நில அளவைத் திணைக்களத்தின் 225வது ஆண்டு நிறைவு குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை மீதான வரியை 20 சதவீதமாகக் குறைக்கும் அமெரிக்கா
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை 20 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு 2025 ஓகஸ்ட் 7 ஆம் திகதி முதல் அமுலாகிறது.
ரூ2,000 கோரி துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்
14 இலட்சம் ரூபாய் பெறுமதியான தொலைத்தொடர்பு கோபுர பெற்றரிகள் 44 மீட்பு
25 எம்.பிக்கள் 100முன்னாள் எம்.பிகளுக்கு எச்சரிக்கை கடிதம்
லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணையத்தின் அறிவிப்பின்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கத் தவறிய 25 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், கிட்டத்தட்ட நூறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார்.
லங்கா பிரீமியர் லீக்கின் முக்கிய அறிவிப்பு
லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) ஆறாவது பதிப்பு 2025 நவம்பர் 27 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் (SLC) தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து இலங்கையின் கிரிக்கெட் நாட்காட்டியில் ஒரு முக்கிய நிகழ்வாக மாறியுள்ள இந்தப் போட்டியில், கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் (RPICS), பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம் (PICS) மற்றும் ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் (RDICS) ஆகிய மூன்று முக்கிய சர்வதேச மைதானங்களில் போட்டிகள் இடம்பெறும்.
ஜனாதிபதி அதிரடி 7 பேரை தூக்கினார்
பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட , ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் மாலைதீவு சென்று திரும்பும்போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் டியூட்டிப்ரீ வணிக நிலையங்களில் சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொள்வனவு செய்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்
கடல் நீருக்காக போதுமான அளவு எவரும் அழவில்லை
இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய கடல் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்திய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீ விபத்து சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் நீண்ட விசாரணைக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு பில்லியன்டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.