இலங்கை மத்திய வங்கியினால் புதன்கிழமை (15) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களில் அடிப்படையில், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மேலும் சரிவடைந்துள்ளது. அதற்கிணங்க, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 327 ரூபாய் 59 சதமாகவும் விற்பனை விலை 344ரூபாய் 66 சதமாகவும் பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள், நேற்று முன்தினத்துடன் (14) ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளன.
மீண்டும் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் சாத்தியம்
வளராத வளர்ச்சி வீதம்
2022 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வருடாந்த பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக 7.8% என மதிப்பிடப்பட்டுள்ளது. விவசாயத்துறை 4.6% என்ற எதிர்மறை வளர்ச்சியையும் தொழில்துறை எதிர்மறையான பதினாறு வீதமும் சேவைத்துறை 2% இனையும் பதிவு செய்துள்ளன. 2022 இன் நான்காம் காலாண்டில் குறித்த வளர்ச்சி வீதம் 12.4%- ஆக பதிவாகியுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலையக அரசியல் அரங்கத்தின் மகளிர் தின விழா
2 மணித்தியாலங்களில் 35 பேர் சிக்கினர்
மலேசியத் தமிழரும் அதிவலதில் அள்ளுண்ணலும்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
வலது தீவிரவாதத்தின் நிழலில் – 18:
சதிக் கோட்பாடுகளுக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அக்கோட்பாடுகள் பெரும்பாலும் தேச, பிரதேச, இனத்துவ, அடையாள எல்லைகளுக்கு உட்பட்டவை. சதிக் கோட்பாடுகள் அரசியல் அரங்கில் முக்கியமான கருவியாக உள்ளன. அரசியலை அறிவுபூர்வத் தளத்தில் இருந்து அகற்றி, உணர்வுபூர்வத் தளத்திற்குத் தள்ளுகின்ற போது அரசியல் அரங்காடிகளுக்கு சதிக்கோட்பாடுகள் பயன்படுகின்றன.
வராதீர்கள் வாய்ப்பே இல்லை: அவுஸ்திரேலியா
14 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறிய இராணுவம்
ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி, செவ்வாய்க்கிழமை (14) வீழ்ச்சியடைந்துள்ளமையை இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 319 ரூபாய் 84 சதமாகவும் விற்பனை பெறுமதி 335 ரூபா 68 சதமாகவும் பதிவாகியுள்ளது