(புருஜோத்தமன் தங்கமயில்)
வடக்கு கடற்பரப்பில், இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பிலான நடவடிக்கைகளில் கடற்றொழில் அமைச்சு ஈடுபட்டு இருக்கின்றது.
The Formula
மேல், மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளையதினம் (13) வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், ஞாயிற்றுக்கிழமை (12) அறிவித்தது. அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட மாட்டாது என்று செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே உறுதியளித்தார். மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள், தேசிய புற்றுநோய் நிறுவனம், தேசிய மனநல நிறுவனம், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், இராணுவ வைத்தியசாலைகள் ஆகியவற்றின் நடவடிக்கைகளும் பாதிக்கப்படாது என்றும் அவர் அறிவித்தார்.
சீன நாட்டின் ஜனாதிபதியாக ஷி ஜின்பிங்(வயது 69) தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இதுவரை இல்லாத வகையில் கடந்த ஓக்டோபர் மாதம் மூன்றாவது முறையாக ஷி ஜின்பிங் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்கு பல காரணங்கள் இருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதாரச் செயற்பாட்டின் சில செயற்பாடுகளுடன் அதுவரை டொலர்களை வைத்திருந்த தரப்பினர் அந்த டொலர்களை சந்தையில் விடுவித்தமையும் இந்த நிலைமைக்கு மற்றொரு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இந்த வருட இறுதிக்குள் டொலரின் பெறுமதி மீண்டும் உயரலாம் என ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்திருந்த கணிப்பு தொடர்பில் பேராசிரியர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.