வடக்கில் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கு உத்தரவு

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் ஆட்கள் தங்குவதற்கு உகந்த இடமல்லாத இடத்தில் சிறுவர் இல்லங்கள் நடத்தி வந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

ரூ. 1,700 வர்த்தமானிக்கு இடைகால தடை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரிக்கும் வகையில் தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றம் இடைகால தடையுத்தரவை வியாழக்கிழமை (07)  பிறப்பித்துள்ளது. பெருந்தோட்ட நிறுவனங்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

பதவிக்காலமும் துரதிர்ஷ்ட பிரதமர்களும்

(முருகானந்தம் தவம்)

இலங்கையின் பிரதமர்  பதவி 1947 ஆம் ஆண்டில் இலங்கை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தபோது   உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் 15 பேர் மாறி,மாறி பிரதமர்களாகப் பதவிவகித்துள்ள போதும் இந்த பிரதமர்களில் பலருக்கும் பிரதமர் பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்ய விடாத துரதிர்ஷ்டத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ள வரலாறே தொடர்ந்தும் பதிவாகி வருகின்றது.

சம்பந்தன் விட்டுச் செல்லும் இடைவெளி

(லக்ஸ்மன்)

தமிழர் அரசியலில் பல்வேறு விமர்சனங்களுக்குரியவராக பலராலும் பேசப்பட்டாலும், விமர்சிக்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவு விரைவில் நிரப்பப்பட இடைவெளியையே ஏற்படுத்தியிருக்கிறது.

இணக்கப்பாட்டை எட்ட முடிந்தது: ரணில்

கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் நாட்டின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டை எட்ட முடிந்துள்ளதாகவும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் அந்த ஒப்பந்தங்களிலும் உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  செவ்வாய்க்கிழமை (02)  அன்று  பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போது தெரிவித்தார்.

புதுடெல்லி விமான நிலைய கூரை இடிந்ததில் மூவர் பலி

தலைநகர் புதுடெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை (27) இரவு முழுவதும் பெய்த தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் டெல்லி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் வாகனங்கள் சிக்கியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

கென்யாவில் ஆர்ப்பாட்டம்: 23 பேர் உயிரிழப்பு

கென்யாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் சிக்கி இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். பெருந்திரளானோர் காயமடைந்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த நாட்டு பாராளுமன்றத்திற்கு தீ வைத்து செங்கோலையும் எடுத்துச்சென்றுள்ளனர்.

சட்டத்தை இரத்து செய்த பெரு அரசு

திருநங்கைகளை மனநல கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் என பட்டியிலிடுவதை நிறுத்துவதாக பெரு நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

அகதிகளது எதிர்காலம்

அண்மையில் சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து சுமார் 260 அகதிகளை ஏற்றிக் கொண்டு ஏடன் வளைகுடா வழியாக சென்ற படகொன்று  ஏமன் கடற்கரை அருகே  கவிழ்ந்ததில் சுமார் 49 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாகவும், ஏனையோர் பாதுகாக்கப்பட்டதாகவும் , அதுபோல இம்மாதம் 17ஆம் திகதி தெற்கு இத்தாலியில் மத்தியதரைக் கடல் பகுதியில் பயணித்த இரண்டு படகுகள்  கவிழ்ந்ததால் அதில் பயணித்த அகதிகளில் 11பேர் உயிரிழந்தும், 64 பேர் காணாமல் போனதாகவும் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள்  மனதை நெருடுகின்றது.

பேருந்து கட்டணம் குறைகின்றது

ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 5 சதவீதம் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில், புதிய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 28 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.