நாடளாவிய ரீதியில், 19 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு 9 பேர் மரணமடைந்துள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர் 12,2247 குடும்பங்களைச் சேர்ந்த 45,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பல ஆறுகளில் நீர்மட்டம் உயர்வு
நாட்டில் உள்ள பல ஆறுகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மை காலமாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அத்துடன், நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. இதனால், ஆறுகளை சுற்றியுள்ள தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.
மரக்கறி விலைகளில் மாற்றம்
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் ஊடாக கொள்வனவு மற்றும் விற்பனை செய்யப்படும் கிலோவுக்கான மரக்கறி விலைகளின் விலை பட்டியலை நிலையத்தின் காரியாலயம் புதன்கிழமை (29) வெளியிட்டுள்ளது.
முட்டை கோஸ் 70-90 ரூபாய்,
கரட் 125-145 ரூபாய்,
லீக்ஸ் 270-290 ரூபாய்,
ராபு 80-100 ரூபாய்,
இலையுடன் பீட்ரூட் 220-240 ரூபாய்,
இலையில்லா பீட்ரூட் 320-340 ரூபாய்,
உருளை கிழங்கு 290-310 ரூபாய்,
உருளை கிழங்கு சிவப்பு 270-290 ரூபாய்,
நோக்கோல் 100-120 ரூபாய்
கொத்தமல்லி இலை 1800-1900 ரூபாய்,
ஐஸ்பேர்க் 1400-1500 ரூபாய்,
சலாது 1100-1200 ரூபாய்,
புரக்கோலின் 1000-1100 ரூபாய்,
கோலிப்புளவர் 1000-1100 ரூபாய்
’கொதிக்கும்’ டெல்லி: 52.3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவு
தலைநகர் டெல்லியில் வரலாற்றில் இதுவரை இல்லாதவாறு 52.3 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை மறுதினம் தொடங்கவுள்ள நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியில் வரலாற்றில் இதுவரை இல்லாதவாறு 52.3 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் அதிகபட்ச வெப்ப நிலை இன்று பதிவாகியுள்ளதாக இந்திய வானிலமை மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப அலையால் சுருண்டு விழுந்த மாணவ, மாணவிகள்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
சி.எம்.சிக்கு ஒத்துழைக்கவும்: இராணுவத்துக்கு ஜனாதிபதி பணிப்பு
மக்களுக்கும் உடமைகளுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய 100 க்கும் மேற்பட்ட பழைய மற்றும் பெரிய அழுகிய மரங்களை உடனடியாக அகற்றுவதற்கு கொழும்பு மாநகர சபை (CMC) க்கு ஒத்துழைப்பை நல்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச மரக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை இராணுவத்துக்கு பணித்துள்ளார்.
2000 பேர் உயிருடன் புதையுண்டனர்
சம்பள உயர்வுக்கு முதலாளிமார் சம்மேளம் எதிர்ப்பு
தேயிலை மற்றும் இறப்பர் துறைகளில் தொழில் புரியும் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் 70 சதவீதத்தில் உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கொழும்பு- ரேணுகா ஹோட்டலில் திங்கட்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, முதலாளிமார் சம்மேளன பிரதிநிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.