‘ரத்தரங்’ மகள் கைது

‘ரத்தரங்’ என்றழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான ஜீப் பாகங்களிலிருந்து இணைக்கப்பட்ட வாகனம்  சம்பவம் தொடர்பாக கைது செய்யத் தேடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபய குணவர்தனவின் மகள்,  பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் புதன்கிழமை (30 )ஒரு வழக்கறிஞர் மூலமாக சரணடைந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பூர் மனித எலும்பு எச்சங்கள்: 6 ஆம் திகதி விசேட கூட்டம்

சம்பூர் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து அகழ்வு செய்வதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க எதிர்வரும் ஆகஸ்ட் 6 ந் திகதி விசேட கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் என்று மூதூர் நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை (30) தீர்மானித்துள்ளது.

மர்மமான முறையில் இளைஞன் உயிரிழப்பு

மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். அருகில் உள்ள ஆலயத்தில் இடம் பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து விட்டு வீடு திரும்பும் பொழுது இளைஞன் வீட்டுக்கு முன்னால் மர்மமான முறையில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். 

லலித், குகன் விவகாரம்: சாட்சியமளிக்க கோட்டா தயார்

மனித உரிமை ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் காணாமல் போனது தொடர்பான ஹேபியஸ் கார்பஸ் விசாரணை தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  தயாராக இருப்பதாக அவரது சட்டத்தரணி உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை (20) அன்று தெரிவித்தார்.

இந்தியாவுடனான ஒப்பந்தம்: இரத்து செய்யக்கோரி மனு

இலங்கை குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) செல்லாததாக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாலைதீவிற்கு இலவச 90 நாள் On-Arrival சுற்றுலா விசா

சுற்றுலா நோக்கங்களுக்காக மாலத்தீவுக்குச் செல்லும் இலங்கை குடிமக்களுக்கு 90 நாள் இலவச வருகை சுற்றுலா விசா வழங்கப்படும் என்று மாலைதீவு அரசு அறிவித்துள்ளது.

“கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த மாலைதீவுகள் பணியாற்றும்”

ஜனாதிபதி  திசாநாயக்கவையும் அவரது தூதுக்குழுவையும் மாலைதீவிற்கு வரவேற்பது எனக்குக் கிடைத்த  பெரும் மரியாதை மற்றும் பாக்கியம் ஆகும். உங்கள் வருகை நமது நீண்டகால நட்பின் அடையாளம் என்பதோடு நமது பொதுவான நோக்கங்களை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு நமது இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த ஒரு வாய்ப்பாகும். மாலைதீவும் இலங்கையும் இந்து சமுத்திரத்தினால் சூழப்பட்ட இரண்டு சகோதர நாடுகள்.

காணி மீட்பு ஆர்ப்பாட்டம்

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் விவசாயிகள் தங்களது அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்டு விவசாய செய்கை பண்ணக் கூடிய வாய்ப்புகளை வழங்குமாறு திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை (29) அன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

உயர்தர தொழிற்கல்வி பிரிவிற்கு சா/த பெறுபேறுகள் அவசியமில்லை

2025/2026 கல்வியாண்டிற்கான உயர்தர தொழிற்கல்வி பிரிவில் தரம் 12 இல் சேருவதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்படுகின்றன. க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைப் பெறுபேறுகள் இந்தப் பிரிவில் இணையக் கருத்திற் கொள்ளப்படுவதில்லை. இது மாணவர்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வித் தகுதியை (NVQ நிலை 4) பெற வாய்ப்பளிக்கிறது. மாணவர்கள் 13 ஆம் வகுப்பு வரை பாடசாலைக் கல்வியைத் தொடரும்போது இந்தத் தகுதியைத் தொடரலாம்.

புலிகளின் சித்திரவதை கூடமும் தப்பியவர் அனுபவமும்.. ( 1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள் ) தொடர்-07

துணுக்காயில் புலிகளது சித்திரவதை முகாமில் நான் இருக்கும் போது இருந்தவர்களில் உயிருடன் திரும்பியவர்கள் மொத்தம் முன்னூறுக்கும் சற்று அதிகமானவர்கள்தான். புலிகளின் சித்திரவதையில் பாம்புச் சித்திரவதையும் முக்கிய இடம் வகித்தது.