
இன்றைய சிந்தனைக்குரிய கேலிச்சித்திரம்

The Formula

வலுவடைந்து வருகின்ற பருவகால மழைப் புயலான ஈட்டாவானது நேற்று கியூபாவைத் தாக்கியதுடன், ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவின் முனையை நோக்கி நகருகிறது. இப்புயலால் பலர் உயிரிழந்ததுடன், மெக்ஸிக்கோ மற்றும் மத்திய அமெரிக்காவை கடந்த வாரம் பெரும் சூறாவளியாகத் தாக்கிய நிலையில் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
வார இறுதியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஸும் செயலி மூலம் உரையாடினார் என, இலங்கை ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்திக்கு, சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. Zoom செயலியூடாக, இலங்கை ஜனாதிபதியுடன் சீன ஜனாதிபதி, உரையாடியிருந்தார் என, இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
நமது நாட்டின் சனத்தொகையில் 20வீத மக்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க உலக சுகாதார அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பிலான விடயங்களை ஆராய்வதற்காக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குழுவொன்றை நியமித்துள்ளார்.
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
அறிவியலுக்கும் அபத்தத்துக்கும் இடையிலான பிரிகோடு, மிகவும் சிறியது. அறிவியலை விட, அபத்தத்துக்கு முக்கியத்துவம் அதிகமாகிப் போன உலகத்தில் நாம் வாழ்கிறோம். பயன் யாதெனில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, இப்போது ஆட்கொண்டுள்ளது. இது எதிர்பாராதது அல்ல; ஆனால், ‘முன்னே ஓடவிட்டுப் பின்னே துரத்தும்’ வித்தையை, இந்தப் பெருந்தொற்றை வைத்து, அரசியல்வாதிகள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.