– தேசிய காங்கிரஸ் மகளிர் தலைவி நம்பிக்கை
தமிழ் பேசும் மக்களுக்கு இடையிலான பிரச்சினைகளை பேசி தீர்க்க முடியும் என்கிற நம்பிக்கையையும், விசுவாசத்தையும் தமிழ் பேசும் தலைவர்களுக்கு இடையே இடம்பெற்று வருகின்ற சந்திப்புகள், கலந்துரையாடல்கள், பேச்சுவார்த்தைகள் ஆகியன கொடுக்கின்றன என்று தேசிய காங்கிரஸின் மகளிர் பொறுப்பாளரும், வட மாகாண அமைப்பாளருமான ஜான்சிராணி சலீம் தெரிவித்து உள்ளார்.
கல்முனையை நான்கு சபைகளாக பிரிப்பது குறித்து தமிழ் – முஸ்லிம் தலைவர்களுக்கு இடையில் கொழும்பில் இரு கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று உள்ளன. மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு திகதி குறிப்பிடப்பட்டு உள்ளது. மூன்று முஸ்லிம் பெரும்பான்மை சபைகளையும், ஒரு தமிழ் பெரும்பான்மை சபையையும் உருவாக்க அடிப்படையில் இணங்கி உள்ளனர்.
துயர் பகிர்வு
தோழர் ஸ்ரனிசின் தாயார் கனகம்மா அருளம்பலம் தனது 85 வயதில் நேற்று மாலை 3 மணியளவில் மட்டக்கிளப்பு பெரிய கல்லாற்றில் இயற்கை எய்தினார். ஈழவிடுதலைப் போராட்டத்தில் அவருடைய முழுக் குடும்பமுமே அற்பணிப்புடன் செயற்பட்டது.
அவர் தனது இரண்டு பிள்ளைகளான தோழர்கள் காளி,
மனோ ஆகியோர் ககோதரப்படு கொலைக்கு பலிகொடுத்தபின்னும் தனது முதிய வயதிலும் எமக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்தவர். கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் கட்சியின் வேலைத்திட்டங்களில் பணியாற்றிய பல தோழர்களை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் பணிசமான பங்களிப்பை நல்கியிருந்தார்.அந்த தியாகத்தாய்க்கு எமது புரட்சிகர அஞ்சலிகள்.
பத்மநாபா மக்கள் முன்னணி
தமிழர் சமூக ஜனநாயக் கட்சி(SDPT)
பிரித்தானிய அரச குடும்பத்தினரின் காதலுக்கு மரியாதை
(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
மிகப் பிரமாண்டமான வளத்தையும் வசதியையும் கொண்ட பிரித்தானிய இளவரசர் ஹரி,இதுவரை பிரித்தானிய அரச பரம்பரை நினைத்தும் பார்க்காத விதத்தில் தனது திருமணத்தை மேகன் மெர்கில் என்ற அமெரிக்க கலப்பு இனப்பெண்ணுடன் நடத்தப் போகிறார். அவரின் மனைவியாக வரவிருக்கும் மெகனின்; தாய்; ஒருகாலத்தில் பிரித்தானியரால் அடிமைகளாக அமெரிக்காவுக்கு இழுத்துச் செல்லப் பட்ட ஆபிரிக்க கறுப்பு இனப் பரம்பரையைச் சேர்ந்தவர்.தகப்பன் ஒரு வெள்ளையர்- ஐரிஸ்,டச் கலப்புடையவர்.
(“பிரித்தானிய அரச குடும்பத்தினரின் காதலுக்கு மரியாதை” தொடர்ந்து வாசிக்க…)
மறக்கமுடியுமா?
எத்தனை வருடம்? எத்தனை மரணங்கள்? ஒரு அழகான தேசத்தின் அமைதியைக் கெடுத்த கொடியவர்கள். மறக்கமுடியுமா? திருநெல்வேலி சந்தியில் தொடங்கிய வெறியாட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது. முடிக்கப்பட்டது. முப்பது வருடங்களாக எவராலும் எங்கேயும் நிம்மதியாக உறங்கவிடாமல் கெடுத்தவர்களை எப்படி மறப்பது? நாங்கள் மரணிக்கும்வரை அவர்களின் பயங்கர வெறியாட்டங்கள் மறக்கமுடியாது.
புதுக்குடியிருப்பு மணல் குளம் (சுவாமி குளம்) காப்பாற்றப்பட வேண்டும்
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் ஏ 35 வீதியின் அருகாமையில் சுமார் பத்து ஏக்கர் பரப்பளவை கொண்டதும் வாகனம் போய்வரக்கூடியதும் சுமார் பத்து அடி உயர முமானஅணைக்கட்டை கொண்ட குளம் மணல் குளம் (சுவாமி குளம்)இன்று அக்குளம் தேய்ந்து குளத்துக்குரிய காணிகள் கபளீகரம் செய்யப்பட்டு அரச அதிகாரிகளால் கவனிக்கப்படாமல் இருப்பது ஆச்சரியத்துக்குரியதொன்று. (“புதுக்குடியிருப்பு மணல் குளம் (சுவாமி குளம்) காப்பாற்றப்பட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)
வரதராஜபெருமாள்
எனக்கு இவரைப்பற்றி அதிகம் தெரியாது.தகவல்கள் மூலமாகவே அதிகம் அறிந்திருக்கிறேன்.முன்னாள் பொருளாதார விரிவுரையாளரான இவர் வடகிழக்கு மாகாண முதல்வராக பதவி ஏற்றதன்மூலம் உலகறிந்த ஒரு மனிதராக பிரபலம் ஆனவர். இவரின் கீழே எனது சகோதரன் பணியாற்றிய காலங்களில் இவரைப் பற்றி கூறியிருக்கிறார்.நல்ல நிர்வாகி.நல்ல ஆக்கபூர்வமான செயற்பாட்டாளர்.இவரது செயலாளர் தாஜ் சமுத்திராவில் தங்குவார்.இவரோ செவன் ஐலன்ட விடுதியில் இருந்து கொண்டே வடகிழக்கு மாகாண சபையை எப்படி கட்டி எழுப்புவதென்றே யோசித்தவர். (“வரதராஜபெருமாள் ” தொடர்ந்து வாசிக்க…)
ஈழ வரை படத்துடன்..! கொழும்பில் ஊர்வலம்..?
ஆண்டு 1978 . அப்போது எனது வயது 22. கொழும்பு பல்கலைக்கழக முதலாம் ஆண்டில் காலடி வைத்து மிக சிறிய காலத்துள் கிழக்கில் பெரும் சூறாவளி வீசிய செய்தி வந்தது. ஓடிச்சென்று புனர்வாழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டதை மீண்டும் பதிவதை தவிர்த்து அங்கு நான் பெற்ற அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிர்கிறேன்.
(“ஈழ வரை படத்துடன்..! கொழும்பில் ஊர்வலம்..?” தொடர்ந்து வாசிக்க…)
கொத்துரொட்டியும் கொள்கை வகுப்பும்
உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துங்கள்
அதைவிட்டு இனியும்……. என்று ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்
ஆயுத போராட்டம் ஆரம்பித்த போது எதிரிகளை தாக்குவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு எமது ஆயுத போராட்டத்திற்கான அங்கீகாரமும் முக்கியம் என்று அனைத்து விடுதலை இயக்கங்களுக்கே உணர்ந்திருந்தன விடுதலை புலிகளை தவிர . (“கொத்துரொட்டியும் கொள்கை வகுப்பும்” தொடர்ந்து வாசிக்க…)
ஐதேகவுக்கு தனியாக அரசை அமைக்க முடியும் – மங்கள
நேற்று இரவு(26) ஜனாதிபதி மைத்ரியை , மங்கள சமரவீர மற்றும் சில முக்கிய ஐதேக பிரமுகர்கள் சந்தித்தனர். நல்லாட்சி அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி, சுதந்திரக் கட்சி செயல்படுமானால் புரிந்துணர்வு ஒப்பந்தந்தை விட்டு மைத்ரி தரப்பை வெளியேறுமாறு சந்திந்த குழுவினர் கூறியுள்ளனர்.
(“ஐதேகவுக்கு தனியாக அரசை அமைக்க முடியும் – மங்கள” தொடர்ந்து வாசிக்க…)
புலிகள் இயக்க மாவீரர்கள் பற்றி பார்வை….
1986 இலிருந்து புலிகள் மற்ற இயக்கங்களை அழித்து பாசிச ஆட்சி எடுத்தபின்னர் புலிகளில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் (75மூ) 13 க்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட வுநநயெபநச பாடசாலை மாணவர்கள். அதாவது குழந்தைப்போராளிகள். குடும்பத்தில் பாரபட்சம் காட்டப்பட்ட சிறாரும் சாதிய சமூகத்தால் பாரபட்சம் காட்டப்பட்ட தலித்தினரும் காதற் தோல்வி முதலிய பதின்மவயதுப்பிரச்சனைகளால் தற்கொலை மனநிலையோடு பாதிக்கப்பட்டோருமே இந்த பதின்ம பருவத்தில் புலிகளில் இணைந்தோரில் பெரும்பாலானவர்கள்.
(“புலிகள் இயக்க மாவீரர்கள் பற்றி பார்வை….” தொடர்ந்து வாசிக்க…)