கொத்துரொட்டியும் கொள்கை வகுப்பும்

உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துங்கள்
அதைவிட்டு இனியும்……. என்று ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்

ஆயுத போராட்டம் ஆரம்பித்த போது எதிரிகளை தாக்குவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு எமது ஆயுத போராட்டத்திற்கான அங்கீகாரமும் முக்கியம் என்று அனைத்து விடுதலை இயக்கங்களுக்கே உணர்ந்திருந்தன விடுதலை புலிகளை தவிர .சில இயக்கங்கள் எண்பதுகளிலேயே அதற்காக செயற்பாடுகளில் இறங்கிவிட்டிருந்தார்கள் .வெளிநாட்டு தூதரங்களில் எமது இனப்பிரச்சனை பற்றியும் ஆயுத போராட்டத்திற்கான அவசியத்தையும் அவர்களுக்கு புரிய வைப்பதிலும், சில தலைவர்கள் தமது அமைப்பின் சார்பில் வெளிநாடுகளுக்கு உத்தியோக பூர்வ விஜயங்களை கூட மேற்கொண்டிருந்தார்கள் .

இயக்கங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் திம்பு பேச்சுவார்த்தை தான் .ஒரு மூன்றாம் நாட்டில் இந்தியாவின் அனுசரணையுடன் இலங்கை அரசு சார்பு பிரதிநிதிகளுடன் ஐந்து முக்கிய இயக்க பிரதிநிதிகளும் அதில் கலந்துகொண்டார்கள் .
முதல் கட்ட திம்பு பேச்சுவார்த்தை எதுவித தீர்வும் இல்லாமல் குழம்ப இந்தியா அனைத்து இயக்கங்களையும் டெல்கிக்கு அழைத்து புலிகளின் தாக்குதல்கள் குறித்து விசனமும் தெரிவித்து பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை சற்று அழுத்தியே சொன்னது .

அப்போ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தம்முடன் வந்திருந்த பிரதிநிதிகளிடம் மற்ற இயக்கத்தவர்களும் கேட்கும்படி “அவங்கள் என்ன சொன்னாலும் ஓம் என்று தலையை ஆட்டுங்கோ ஆனால் நாங்கள் அங்கு அடிப்பம் ” என்றார் .
எதிரிகளின் மீதான தாக்குதல் ஒன்றே நாட்டை உருவாக்க உதவும் என்று அவர் முற்றிலும் நம்பினார் இந்திய ,சர்வதேச அங்கீகாரம் பற்றி அவருக்கு எதுவித அக்கறையும் படவில்லை .

முள்ளிவாய்கால் வரை புலிகள் அதே நிலைபாட்டில் இருந்து மாறவேயில்லை . சர்வதேசத்தின் கட்டாயத்தின் பேரிலும் ,ஆயுதங்கள் வாங்கவும், போராளிகளை சேர்க்கவும் இடைக்கிடை பேச்சுவார்த்தைக்கு சென்றார்களே ஒழிய விடுதலை போராட்டதிற்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரம் பற்றி சிறிதேனும் சிந்திக்கவில்லை .
யாழ்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றம் ,ராஜிவ்காந்தி .அமிர் ,கதிர்காமர் ,நீலன் ,கேதிஸ்வரன் போன்றோரின் கொலைகளால் தாம் உலகின் பார்வைக்கு பயங்கரவாதிகளாக மாறுவது பற்றி கூட அவர்கள் பெரிதாக கவலைப்படவில்லை
.
சரி நாட்டில் பங்கருக்குள் இருக்கும் பிரபாகரன் தான் இந்த முடிவுகளை எடுக்கின்றார் என்றால் வெளிநாடுகளில் புலிகளின் அரசியல் ஆய்வாளர்கள்
“அண்ணை அடிப்பார் பிடிப்பார்” காசு கொடுத்தால் காணும் என்றும் தலைவர் புகழ் பாடி பெருமை கொண்டார்களே ஒழிய ஒரு இனத்தின் எதிர்காலம் பற்றி சிந்திக்கவேயில்லை .

கொத்து ரொட்டி திருவிழாவிற்கு வந்த கூட்டத்தை பார்த்து யு.என் புலிகள் மக்களை கேடயமாக பாவிக்கவில்லை ,சிறுவர்களை படைகளில் சேர்க்கவில்லை என்று முடிவை எடுக்குமாம் .

வெளிநாடு வந்த கிட்டுவை ஏதாவது ஒரு நாட்டில் தக்க வைக்கமுடியாமலும், ராஜீவ் காந்தி கொலையாளிகளை இதுவரை வெளியில் எடுக்கமுடியாமலும் இருக்கும் இந்த புலம் பெயர் மந்தை கூட்டத்தால் மார்க்கம் வீதியிலும் மாவீரர் தினத்திலும் கூடி கூத்தடித்து கொத்துரொட்டி போடத்தான் முடியுமே தவிர இவர்களால் ஒரு மயிரும் புடுங்கமுடியாது என்பதுதான் உண்மை .

(Parathan Navaratnam)