கருணா விடுதலை

ஜனாதிபதி செயலக வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தி, 90 மில்லியன் ரூபாயை மோசடி செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர், கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

கமல் – ரஜினி – விஜய்: தமிழக அரசியலில் ‘கலக்கப் போவது யாரு’?

(எம். காசிநாதன்)

நவம்பர் – 7, தமிழக அரசியலில் புதிய அரசியல் கட்சி உதயமாவதற்கு ஒரு தொடக்க தினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் அன்றைய தினம் மிகப்பெரிய அளவில் இரசிகர்கள் கூட்டத்தைக் கூட்டி, தனது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கிறார். திரையுலகினர் அரசியலுக்கு வருவது, தமிழகத்துக்குப் புதிதல்ல என்றாலும், இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு மூன்று திரையுலக பிரபலங்கள் தமிழக அரசியல் களத்துக்குள் நுழைவதற்கு தலைப்பாகை கட்டி நிற்பது, கவர்ச்சி அரசியலை நோக்கி, மீண்டும் ஒரு பெரும் போருக்கு களம் தயாராகி விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

(“கமல் – ரஜினி – விஜய்: தமிழக அரசியலில் ‘கலக்கப் போவது யாரு’?” தொடர்ந்து வாசிக்க…)

செய்தியின் பின்னணியில்

நான் படித்த சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு புதிய மாடிக் கட்டடம் கட்ட 57 மில்லியன் ரூபாவை அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஒதுக்கியுள்ளதாகவும் அந்த கட்டிட திறப்புவிழாவுக்கு தான் வருவேன் என கூறியுள்ளதாக செய்திகளில் படித்தேன்.அது எனது பாடசாலை என்பதில் எனக்கு பெருமைதான்.

(“செய்தியின் பின்னணியில்” தொடர்ந்து வாசிக்க…)

இளஞ்செழியன் உதவுவாரா?

கோவில்களில் ஆடுகளை வேள்விக்காக பலியிடுவதை சட்டத்தின் மூலம் தடுத்தார்.இவரை ஒரு நல்ல துணிவான நீதிபதி என பலர் சொல்கிறார்கள்.இளஞ்செழியன் வெள்ளாளர்.அவர் யாழ்இந்துக் கல்லூரியின் மாணவர் அல்ல.ஆரோக்கியமான கல்வியை வழங்கும் பரியோவான் கல்லூரியின் மாணவர்.

(“இளஞ்செழியன் உதவுவாரா?” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தல்கள் தமிழர் எதிர்பார்க்கும் தீர்வைப் பிற்போடுமா?

(க. அகரன்)

அரசாங்கத்தின் நிலைபேறு தன்மை தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் அண்மைய காலங்களில் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளமை வெளிப்படை. குறிப்பாக, நல்லாட்சி அரசாங்கம் அல்லது தேசிய அரசாங்கம் என்ற சொற்பதத்துடன் மஹிந்த அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற கனவுடன் ஜனாதிபதி தேர்தலைச் சந்தித்த, ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் அதில் வெற்றி பெற்றதன் பின்னராக, அந்த ஆட்சிக்குள் பல்வேறு குழப்பகரமான நிலைமைகள் தோன்றி மறைவதை மறுக்கவோ மறைக்கவோ முடியாதுள்ளது.

(“தேர்தல்கள் தமிழர் எதிர்பார்க்கும் தீர்வைப் பிற்போடுமா?” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு குடையின் கீழ் ஈழத்தமிழர்!? வடக்கு முதல்வர் முயற்சி !?

இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகம், தென் இந்தியா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அணிதிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும், அதில் தாம் வெற்றி கண்டு கொண்டிருப்பதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மையில் அவர் கொடுத்த பேட்டியில் தான் புலத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசத்தில் வாழ்பவரிடமும் இது பற்றி பேசுவதாகவும் மிகவும் சாத்தியமான நிலைமை காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.

(“ஒரு குடையின் கீழ் ஈழத்தமிழர்!? வடக்கு முதல்வர் முயற்சி !?” தொடர்ந்து வாசிக்க…)

‘தமிழ் மக்களுக்கு பிரச்சினை உள்ளது’

ஒற்றையாட்சியை இல்லாமல் செய்யாமல், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுத்து, இலங்கையில் உள்ள சிங்கள பௌத்தர்கள், மகாநாயக்கர்கள், தமிழர்களும் ஏற்றுக்கொள்ளும் சாதகமான தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும். தமிழ் மக்களுக்குப் பிரச்சினை இருக்கிறது. அதற்கு, அவர்களுடன் கலந்துரையாடி, நாட்டைப் பிளவுபடுத்தாமல் தீர்வை நோக்கிச் செல்லவேண்டும்” என்று அரசாங்கம், நேற்று (25) தெரிவித்தது.

(“‘தமிழ் மக்களுக்கு பிரச்சினை உள்ளது’” தொடர்ந்து வாசிக்க…)

‘சட்டம் பற்றித் தெரியாது?’

வடமாகான சபை உறுப்பினர்களும் அமைச்சர்களும், மாகாணச் சட்டங்களை கற்க வேண்டுமென, வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். வடமாகாண சபையின் 108ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில், இன்று (26) நடைபெற்றது. இதன் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்னமும் பல நியதிச் சட்டங்கள் உருவாக்கப்படவில்லை. “உறுப்பினர்கள், மாகாணச் சட்டங்களைக் கற்று, தங்கள் அதிகாரம் என்ன, எல்லை என்ன என்பதை, முதலில் அறிய வேண்டும். அதன் பின்னர், அதற்குள் நின்று நியதிச் சட்டங்களை உருவாக்க வேண்டும். “நியதிச் சட்டங்களை, மற்றைய மாகாண நியதிச் சட்டங்களைப் பெற்று, அதனை எமது மாகாணத்துக்கு ஏற்றவாறு மாற்றி உருவாக்கலாம். அதனைக் கூடச் செய்யாது, கால தாமதபடுத்திக் கொண்டு உள்ளோம்” என்றார். மேலும், “தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்கப்படும் தகவலுக்கு, பிழையான தகவல்களை அதிகாரிகள் தருகின்றனர். “வடமாகாண திணைக்கள அதிகாரிகள், தமது சொந்தப் பாவனைக்காக திணைக்கள வாகனங்களை பயன்படுத்துகின்றார்கள். அது தொடர்பான தரவுகளையும் தகவல்களையும் பெற, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக குறித்த திணைக்களங்களை கேட்டபோது, அவர்கள் தவறான தகவல்களையே தருகின்றார்கள்” எனவும் தெரிவித்தார்.

ஈழப்போருக்குப்பின் நீதித்துறையும் நீதிபதி இளஞ்செழியனின் சர்ச்சைக்குரிய தீர்ப்புக்களும்

இளஞ்செழியன் யார்? அவர் எங்கு கற்றவர்? அவரது தனிப்பட்ட விழுமியங்கள் அரசியல் பொருளாதார கலாச்சார நம்பிக்கைகள் என்ன என்பவற்றுக்கு அப்பால் இலங்கையில் கால்நுற்றாண்டுக்குமேல் நடந்த போரில் நீதித்துறை வளராமல் முடங்கியிருந்தது என்பது முக்கியமானது. நேர்மையான துணிகரமான கடுமையான தீர்ப்புகளும் தண்டனைகளும் வழங்கும் இளஞ்செழியனை நாம் வரலாற்று சந்தர்ப்பத்தில் வைத்துப்பார்க்கவேண்டிய தேவையிருக்கிற அதேநேரம் எந்த மாவட்ட தலமை நீதிபதியும் தீர்ப்புவழங்கும் நிலத்தின் வரலாறு கலாச்சாரம் மதநம்பிக்கைகளை தருக்கம் தரவுகளுக்கப்பால் கவனத்திலெடுக்கவேண்டும் என்கிற குடிமக்களின் எதிர்பார்ப்பும் நியாயமானதே.

(“ஈழப்போருக்குப்பின் நீதித்துறையும் நீதிபதி இளஞ்செழியனின் சர்ச்சைக்குரிய தீர்ப்புக்களும்” தொடர்ந்து வாசிக்க…)