காஷ்மீர், உ.பி., பாலியல் பலாத்கார சம்பவங்கள்: ‘இரக்கமுள்ள நாடுதானா?’- கவுதம் கம்பீர், சானியா மிர்சா

 

காஷ்மீரின் கதுவா நகரில் 8 வயது சிறுமியும், உத்தரப் பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் இளம்பெண்ணும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் கண்டனம் தெரிவித்து, ஆவேசமாக கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

(“காஷ்மீர், உ.பி., பாலியல் பலாத்கார சம்பவங்கள்: ‘இரக்கமுள்ள நாடுதானா?’- கவுதம் கம்பீர், சானியா மிர்சா” தொடர்ந்து வாசிக்க…)

சீமானைப் பழிவாங்கும் நோக்கத்துடன் நடவடிக்கை: அதிமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்

சீமானுடன் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகும் அவர் விடுவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது எள்ன்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தியதற்காக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக, அவருடன் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகும் சீமான் விடுவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

(“சீமானைப் பழிவாங்கும் நோக்கத்துடன் நடவடிக்கை: அதிமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்” தொடர்ந்து வாசிக்க…)

மக்களுக்கு நன்மையளிக்காத மாற்றங்கள்

(மொஹமட் பாதுஷா)
‘கூட்டாகச் சேர்ந்து கோழி வியாபாரமும் செய்யக் கூடாது’ என்று கிராமப் புறங்களில் பேசிக் கொள்வார்கள். ஏனென்றால், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரப்பினர் ஒன்றுசேர்வது, ஒற்றுமையின் வடிவம் என்றாலும் கொடுக்கல் வாங்கல்களிலும் வியாபாரத்தின் கணக்கு வழக்குகளிலும் நீண்டகால அடிப்படையில், மனக் கசப்புகள் ஏற்படும் என்பதே, முன்னோரின் கணிப்பாகும். எவ்வாறிருப்பினும், ஒன்றுசேர்தல் என்பது, நல்லதொரு முன்மாதிரி என்ற அடிப்படையில், கூட்டு முயற்சிகள் நவீன உலகில், வரவேற்கப்படுகின்ற சூழல் காணப்படுகின்றன.

(“மக்களுக்கு நன்மையளிக்காத மாற்றங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்த் தேசியவாதியும் நானும்

1989 இல் அச்சுவேலியைச் சேர்ந்த வட்டார கல்வி அதிகாரி ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் புலி ஆதரவாளர்.தமிழப் பற்றாளர்.எனது அண்ணன் யோகசிங்கம்,அதிபர் இராசதுரை இருவருக்கும் அறிமுகமானவர்.தமிழ் இன ஒற்றுமை,பழைய தமிழர்களின்,வரலாறுகள் எல்லாம் எனக்கு கூறினார்.

(“தமிழ்த் தேசியவாதியும் நானும்” தொடர்ந்து வாசிக்க…)

பிஜேபி எம்.எல்.ஏ வை கைவிடுவாரா யோகி ஆதித்யநாத்?

உத்தரப்பிரதேச பிஜேபி ஆட்சியில்…

உன்னாவ் மாவட்டத்தில்…
சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில்…

பிஜேபி எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர்
அவரது சகோதரன் அதுல் சிங் இருவரும் –
பப்புசிங் என்பவரது 16 வயது மகளை
பாலியல் வன்முறை வல்லுறவுக்கு ஆளாக்கியதால்
அவர் காவல்துறையில் புகார் கொடுத்தார்.

(“பிஜேபி எம்.எல்.ஏ வை கைவிடுவாரா யோகி ஆதித்யநாத்?” தொடர்ந்து வாசிக்க…)

சுவாமி விபுலானந்தர் அடிகள் – கிழக்கிலங்கைச் சமூகத்தை மேம்படுத்த முன்னெடுத்த கனவுகளைத் தொடர்வோம் ‘

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)

முன்னுரை:

‘ஒரு மனிதனின் கல்வி அவனின் சொந்த வாழ்க்கையை மட்டுமல்ல,அவனின் குடும்பத்திற்கும் அவன் வாழும் சமுகத்திற்கும் எழுச்சியும் விழிப்புணர்வு கொடுக்கக் கூடியதாக இருக்கவேண்டுமென்பது எனது கருத்து. அக்கருத்து, பல வருடங்களாக லண்டனிலிருந்துகொண்டு தொடர்ந்த,பலதரப்பட்ட படிப்புகள், அனுபவங்கள்,ஆய்வுகளால் வந்ததாகும்.’

(“சுவாமி விபுலானந்தர் அடிகள் – கிழக்கிலங்கைச் சமூகத்தை மேம்படுத்த முன்னெடுத்த கனவுகளைத் தொடர்வோம் ‘” தொடர்ந்து வாசிக்க…)

விக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்?

(புருஜோத்தமன் தங்கமயில்)

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருவார கால ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியா சென்றிருக்கின்றார். வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் ஐந்து மாதங்களே இருக்கின்ற நிலையில், அவர் இருவார கால விடுப்பில் சென்றிருப்பதானது, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. முதலமைச்சரின் பயணத்துக்கு, ஆன்மீக அடையாளம் வழங்கப்பட்டாலும், அது அரசியல் நோக்கங்களும் கொண்டதாகவே இருக்க முடியும். அவர், டெல்லி வரை சென்று வருவார் என்று தெரிகிறது.

(“விக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்?” தொடர்ந்து வாசிக்க…)

Is The Chief Minister Of The NPC Ethically & Morally Fit To Govern?

(By Muttukrishna Sarvananthan)

The Chief Minister of the Northern Province Mr. Canagasabapathy Viswalingam Wigneswaran made a “private visit” to India in November 2014. It was reported that he was invited to deliver a memorial lecture in Chennai to commemorate a civil liberties activist Mr. K.G. Kannapiran, who is a person from the legal fraternity. Later Mr. Wigneswaran also attended a World Congress of Buddhism and Hinduism in New Delhi which was graced by Dalai Lama, among others.

(“Is The Chief Minister Of The NPC Ethically & Morally Fit To Govern?” தொடர்ந்து வாசிக்க…)

ஈழத்தமிழர்களின் எதிர்கால இலட்சியங்கள் என்று பட்டியல்படுத்தப்பட்ட தொழில்களில் இன்று முதலிடத்திலிருப்பது அரசியல்வாதியாவதுதான்…..

ஈழத்தமிழர்களின் எதிர்கால இலட்சியங்கள் என்று பட்டியல்படுத்தப்பட்ட தொழில்களில் இன்று முதலிடத்திலிருப்பது அரசியல்வாதியாவதுதான். நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் அதற்கு மிகப்பெரிய சாட்சி. அதற்கு அடுத்த இடத்திலிருப்பது கவிஞராகுவது. அவசரப்பட்டு மேசையை குத்திக்கொண்டு எழும்பிவிடாதீர்கள். உட்காருங்கள். எனக்கும் அதே சந்தேகம்தான். கடந்த உள்ளுராட்சி தேர்தல் வரைக்கும் நானும்கூட கவித்தொழில்தான் முதலிடத்திலிருந்தது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், வேட்பாளர்கள் அனைவரும் இணைந்து புலவர்களை வென்றுவிட்டார்கள் என்பது தற்போதைய நிலைவரம்.

(“ஈழத்தமிழர்களின் எதிர்கால இலட்சியங்கள் என்று பட்டியல்படுத்தப்பட்ட தொழில்களில் இன்று முதலிடத்திலிருப்பது அரசியல்வாதியாவதுதான்…..” தொடர்ந்து வாசிக்க…)

2002 பேச்சுவார்த்தைக்குப் பின் புலிகள் இயக்கத்தில் சலசலப்பு வந்தது.

2002 பேச்சுவார்த்தைக்குப் பின் புலிகள் இயக்கத்தில் சலசலப்பு வந்தது.

ஆனையிறவின் மகத்தான வெற்றிக்குப் பின்னும் புலிகள் யுத்தத்தை தொடரவில்லை. காரணம் பற்றாக்குறை.

யாழ்ப்பாணத்தார் வசதியானவர்கள் என்பதால் புலிகளுக்கு கப்பம் கட்டிவிட்டு ஐரோப்பா , கனடா என தப்ப, புலிகளின் ஆள்திரட்டல் குறி வறுமையான கிழக்குப் பக்கம் பதிந்தது.

இந்நிலையில் நார்வே வேறு பேசிக்கொண்டிருந்தது, இம்முறை புலிகள் முடிவிற்கு வந்தே தீரவேண்டும் என கட்டளை இட்டன மேற்குலக நாடுகள்.

(“2002 பேச்சுவார்த்தைக்குப் பின் புலிகள் இயக்கத்தில் சலசலப்பு வந்தது.” தொடர்ந்து வாசிக்க…)