முதலமைச்சர் விக்கிக்கு வந்துள்ள சோதனை

(கே. சஞ்சயன் )
வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் ஒப்புதலைப் பெற்று விட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு, போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரன், பெரியதொரு சிக்கலாக மாறியிருக்கிறார். மன்னார் மாவட்டத்தில் இருந்து டெலோ சார்பில் வடக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட டெனிஸ்வரன், அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு ஏதுவாக, தமது அமைச்சர் பதவியை விட்டு விலகுவதற்கு தயாரில்லை. ஏனென்றால், அவ்வாறு பதவி விலகினாலும், டெனிஸ்வரனுக்கு அந்தப் பதவி மீண்டும் கிடைக்கப் போவதில்லை. விந்தன் கனகரட்ணத்தையோ, சிவாஜிலிங்கத்தையோ அல்லது மருத்துவர் கலாநிதி குணசீலனையோ தான், டெலோ அமைச்சர் பதவிக்குப் பரிந்துரைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

(“முதலமைச்சர் விக்கிக்கு வந்துள்ள சோதனை” தொடர்ந்து வாசிக்க…)

வசை பாடி வாங்கிக்கட்டிய வடக்கு முதல்வர்!?

நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு அண்மைய நேரடி உதாரணம் வடக்கு மாகாண சபை முதல்வர் சாட்சாத் விக்னேஸ்வரன் என்பதை காணொளியில் கண்டேன். கடந்த காலங்களில் வடக்கு மாகாண சபையில் நடந்த நிர்வாக சீர்கேடுகளை பட்டியலிட்டு எதிர்கட்சி தலைவர் சபையில் கேள்வி எழுப்பி இருந்தார். அவர் குறிப்பிட்ட இருபது விடயங்கள் பற்றி பதில் சொல்லும் கடமை முதல்வருக்கு உரியது. (“வசை பாடி வாங்கிக்கட்டிய வடக்கு முதல்வர்!?” தொடர்ந்து வாசிக்க…)

சிறுபான்மை மக்களை அரவணைத்து நடந்தாலே சிறிசேன ஆட்சியும் நிலை பெற்று நீடிக்கும்!

மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை சிறுபான்மை மக்களே கவிழ்த்தனர், அதே போல நல்லாட்சி அரசாங்கம் நிலைக்கப் பெறுவதும், கலைக்கப்படுவதும் சிறுபான்மை மக்களின் மனங்களை அது வெற்றி கொள்வதிலேயே தங்கி நிற்கின்றது, ஆகவே தமிழ் பேசும் மக்களை நல்லாட்சி அரசாங்கம் அரவணைத்து நடக்க வேண்டும் என்று ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தேர்தல் தொகுதி அமைப்பாளரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் றிசாத் பதியுதீனின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான செயலாளரும், பிரபல அறிவிப்பாளருமான ஏ. ஆர். எம். ஜிப்ரி தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு:-

(“சிறுபான்மை மக்களை அரவணைத்து நடந்தாலே சிறிசேன ஆட்சியும் நிலை பெற்று நீடிக்கும்!” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்பெய்ன் பார்சிலோனாவில் மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்த வேன். 13 பேர் பலி! பலர் காயம்!

ஸ்பெய்ன் நாட்டின் சரித்திர புகழ் பெற்ற பார்சிலோனா நகரத்தின் லாஸ் ராம்ப்லாஸ் மாவட்டத்தின் (Las Ramblas district) மக்கள் நிறைந்திருந்த நடைபாதையொன்றிற்குள் வெள்ளை நிற வேன் ஒன்று வேண்டுமென்றே சற்று முன்னர் புகுந்து ஓடியதில் இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஸ்பெயின் நாட்டு ஊடகங்களினால் இது ஒரு பயங்கரவாத நடவடிக்கையினை வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதுபற்றிய உத்தியோகபூர்வமான தகவல் எதுவும் இன்னமும் வெளியாகவில்லை. இந்த மிக மோசமான தாக்குதலினால் மிகப் பலர் கடுமையான காயங்களுக்குள்ளாகியிருக்கின்றனர்.

(“ஸ்பெய்ன் பார்சிலோனாவில் மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்த வேன். 13 பேர் பலி! பலர் காயம்!” தொடர்ந்து வாசிக்க…)

கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளருக்கு

தொழிற்சங்கங்கள் இரு வார கால அவகாசம்

கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் நிதி சம்பந்தப்பட்ட விடயங்களை மத்தியமயப்படுத்த வேண்டிய தேவையோ, அவசியமோ கிடையாது, கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் – நிதி இத்திணைக்களம் 1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் 27 வருடங்களாக இருந்து வருகின்ற அற்புதமான நடைமுறையை இல்லாமல் செய்ய தான்தோன்றித்தனமாக முயற்சிக்கின்றார் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.

(“கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளருக்கு” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையில் பாலின சமத்துவம் என்பது எட்டாக்கனியாகுமா?

(Gavitha)
அதிகாரப் பரவலாக்கமில்லாத, மிகவும் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும் ஒரு சமுதாயத்திலேயே, நாம் வாழ்கின்றோம். இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கும் அதிகாரப் பரவலாக்கமில்லாத ஒரு சமுதாயத்துக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக, பாலின சமத்துவமின்மை காணப்படுகின்றது என்றால் அது மிகையாகாது. பாலின சமத்துவம், மனித உரிமைகளில் முக்கிய அங்கம் வகிக்கின்றது. “எங்களுடைய பாடசாலையில், ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் இணைந்தே கல்வி கற்கின்றனர்.

(“இலங்கையில் பாலின சமத்துவம் என்பது எட்டாக்கனியாகுமா?” தொடர்ந்து வாசிக்க…)

கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு பூட்டு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் தவிர்ந்த அனைத்துப் பீடங்களுளையும் இன்று (17) முதல் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக, கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி த.ஜெயசிங்கம் தெரிவித்தார். பல்கலைக்கழக விடுதியிலுள்ள சகல மாணவர்களும், நாளை (18) வெள்ளக்கிழமை பகல் 12 மணிக்கு முன்பு தங்களுடைய உடமைகளுடன் வீடுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பல்கலைக்கழகத்தின் பேரவை, திருகோணமலை வளாகம் தவிர்ந்த வந்தாறுமூலை வளாகம் மற்றும் மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம் ஆகியவற்றை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பாடசாலைக் காணியை அத்து மீறி கையடக்க முயற்சி

மட்டக்களப்பு மாவட்டம் முறவாவோடை கிராமத்தில் தமிழ்ப்பாடசாலை ஒன்றிற்கு சொந்தமான காணியை சில தனிநபர்கள், அரசியல் கட்சிகள் சிலவற்றின் அனுசரனையுடன் அத்துமீறி , சட்டவிரோதமாக அபகரிக்கும் முயர்சியை கிழக்கு மாகாண தமிழ் இளைஞர்கள் ஒன்று திரண்டு தடுத்திருக்கிறார்கள்.
தமிழ்மக்களுக்காக பாடுபடுவோம் என்று தேர்தல்காலங்களில் முழக்கமிட்டு மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற தமிழ் அரசியல்வாதிகள் வளவாதிருக்க இளைஞர்கள் ஒன்று திரண்டு இதனை சாதித்திருக்கிறார்கள். அவ் இளைஞர்களுக்கு, என் அன்பு தம்பிகளுக்கு பாராட்டுகள் . வாழ்த்துக்கள்.

(“மட்டக்களப்பில் பாடசாலைக் காணியை அத்து மீறி கையடக்க முயற்சி” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 6)

கொட்டடியைச் சேர்ந்த கிளி: இரண்டு பெண் குழந்தைகளுக்கும் மூன்று ஆண் குழந்தைகளுக்கும் தாயாவார். இவரது கணவர் ஒரு பஸ் சாரதி. அதிகம் குடிப்பவர். இவர் இந்திய சமாதானப் படையினரால் கொல்லப்பட்டார். கிளியின் மூத்த சகோதரியின் மகன் ஈபிஆர்எல்எவ் அங்கத்தவர். இவர் கிளியின் வீட்டுக்கு வருவது தான் கிளி கைது செய்யப்பட்டதற்கான காரணம்.

(“புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 6)” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 5)

ஆகஸ்ட் ஆரம்பப் பகுதியில் ஜந்து கைதிகளை சுதா எழுந்து நிற்கச் சொல்லி அவர்களை விடுதலை செய்வதாகக் கூறினார். கால் விலங்குகளின் பூட்டைத் திறப்பதற்காக காலையிலிருந்து மதியம் பன்னிரண்டு மணி வரை காவலர்கள் முயற்சி செய்தனர். திறப்புகள் முதலில் வேலை செய்யவில்லை. துருப்பிடித்த பூட்டுக்களைத் திறப்பதற்கு அவற்றை அடித்தும், மண்ணெண்ணெய் ஊற்றியும் பூட்டுகள் திறக்கும்வரை அவர்கள் முயற்சித்தனர். மேலும் மூன்று வாரங்கள் இன்னொரு முகாமில் வேலை செய்ய வைக்கப்பட்டபின் பவளம்மா இறுதியில் முத்திரைச்சந்தையில் வைத்து விடுவிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது உடுத்திருந்த அதே சேலை அவர் விடுதலையான போது உக்கிக் கிழிந்து கந்தலாகி முழங்கால் வரை தான் நின்றது. அவரது சங்கில மட்டும் திருப்பிக் கொடுக்கப்பட்டது. அவரது பணம் (54.000 ரூபா) மோதிரம் ஆகியவை ஒப்படைக்கப் படவில்லை. அது களவெடுத்த பொருட்களென கைது செய்தவர்கள் கூறிக்கொண்டனர்.

(“புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 5)” தொடர்ந்து வாசிக்க…)